திரவமாக்கப்பட்ட வாயு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

திரவமாக்கப்பட்ட வாயு (Liquified gas) (சில நேரங்களில் திரவ வாயு எனவும் அழைக்கப்படுகிறது)  என்பது  குளிர்வித்தலின்  காரணமாகவோ  அல்லது அழுத்தத்தின் விளைவாகவோ திரவமாக்கப்படும் ஒரு வாயுவைக்  குறிக்கும்.  திரவமாக்கப்பட்ட  வாயுக்களுக்கான  உதாரணமானது  திரவ காற்று, திரவமாக்கப்பட்ட இயற்கை வாயு மற்றும் திரவ பெட்ரோலிய வாயு ஆகியவற்றை உள்ளடக்கியதாகும்.

திரவ காற்று[தொகு]

லிஸ்டர் தடுப்பு மருந்து நிறுவனத்தில், திரவ காற்றானது உயிரியல் ஆய்வுகளை மேற்கொள்வதில் ஒரு காரணியாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. டைபாய்டு பேசில்லசின், செல்லினிடையே காணப்படும் கூறுகளை  உற்றுநோக்கும் ஒரு ஆராய்ச்சியானது டாக்டர் ஆலன் மெக்ஃபாடைன், தலைமையில் தொடங்கப்பட்டது. இந்த ஆய்வு ஒரு உயிரினத்தின் செல் பிளாசுமாவை பிரிப்பதன் அவசியத்தை வலியுறுத்தியது.

திரவமாக்கப்பட்ட இயற்கை வாயு[தொகு]

திரவமாக்கப்பட்ட இயற்கை வாயு என்பது சேகரித்து வைக்கும் வசதி மற்றும் போக்குவரத்து வசதிக்காக இயற்கை வாயுவின் திரவமாக்கப்பட்ட வடிவமாகும். இயற்கை எரிவாயுவை ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு பல்வேறு நிலப்பகுதிகள் மற்றும் கடல்கள் வழியாக கொண்டு செல்ல ஒரு பெரிய நிலத்தடிக் குழாயமைப்புத் தேவை என்பதால், பெரிய முதலீடு மற்றும் நீண்ட கால திட்டமிடல் தேவைப்பட்டது. திரவமாக்கப்பட்ட வாயு பின்னர் சிறப்பான காற்றுப்புகாத தனித்த அறைகளைக் கொண்ட தொட்டி மூடுந்துகள் மூலமாகக் கொண்டு செல்லப்பட்டது. தொட்டி மூடுந்துகள் திறக்கப்பட்டதும், திரவமானது வளிமண்டல அழுத்தத்திற்கு ஆட்படுவதால், காற்று அல்லது அதன் கொள்கலனின் உள்ளுறை வெப்பத்தினால் கொதிக்கிறது.

மேற்கோள்கள்[தொகு]

 இந்தக் கட்டுரை  தற்போது பொது உரிமைப் பரப்பிலுள்ள நூலிலிருந்து உரையைக் கொண்டுள்ளது: Dewar, James (1911). "Liquid Gases". பிரித்தானிக்கா கலைக்களஞ்சியம் (11th) 16. Cambridge University Press. 744–759. 

மேலும் காண்க[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=திரவமாக்கப்பட்ட_வாயு&oldid=2749387" இலிருந்து மீள்விக்கப்பட்டது