திரள் தூண்டல் உமிழ்வு
திரள் தூண்டல் உமிழ்வு (Aggregation-induced emission) என்பது கரிம ஒளிர்பொருட்களில் காணப்படும் ஓர் அசாதாரண நிகழ்வாகும் [1][2][3]. பெரும்பாலான கரிமச் சேர்மங்கள் சமதளக் கட்டமைப்பையும், திடநிலையைக் காட்டிலும் நீர்மநிலையில் உயர் ஒளியுமிழ் செயல் திறனையும் கொண்டுள்ளன. இருப்பினும் சில கரிம ஒளிர்பொருட்கள் கரைசலில் கிளர்வுற்ற பின்னர் ஆற்றலை பயன்படுத்திக் கொள்வனவாகவும், தாழ்சிதைவு கதிரியக்கத்தை ஊக்குவிக்கும் தன்னியக்கச் சுழலும் தொகுதிகளையும் பெற்றுள்ளன. இவ்வொளிர் பொருட்கள் திரளும் அல்லது படிகமாகும் போது திடநிலையில் தன்னியக்கச் சுழலும் தொகுதிகளின் தன்னியக்கச் சுழற்சி கட்டுப்படுத்தப்படுகிறது. எனவே, ஒளியுமிழ் செயல்திறன் கரைசல் நிலையில் இருப்பதைக் காட்டிலும் அதிகமாக இருக்கிறது.
திரள் தூண்டல் உமிழ்வு அதிகரித்தல்
[தொகு]எந்த நிகழ்வில் கரைசலைக் காட்டிலும் திரள் நிலையில் அதிக ஒளியுமிழ் செயல்திறனை கரிம ஒளிர்பொருட்கள் வெளிப்படுத்துகின்றனவோ அந்த நிகழ்வு, திரள் தூண்டல் உமிழ்வு அதிகரித்தல் எனப்படுகிறது. டைகீட்டோபிரோலோபிரோல் அடிப்படையிலான ஒளிர்பொருட்கள், சல்பனமைடு அடைப்படையிலான ஒளிர்பொருட்கள் சில படிகநிலையை அடைந்தப் பின்னரும் கூட திரள் தூண்டல் உமிழ்வு அதிகரித்தலை மட்டுமே வெளிப்படுத்துகின்றன. இத்தகைய ஒளிர்பொருட்கள் படிகத்-தூண்டல் உமிழ்வு அதிகரிப்பு நிகழ்வை வெளிப்படுத்துவதாகக் கூறப்படுகிறது [4][5].
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Hong, Yuning; Lam, Jacky W. Y.; Tang, Ben Zhong (2011). "Aggregation-induced emission". Chemical Society Reviews 40 (11): 5361. doi:10.1039/c1cs15113d. பன்னாட்டுத் தர தொடர் எண்:0306-0012. https://archive.org/details/sim_chemical-society-great-britain-chemical-society-reviews_2011-11_40_11/page/5361.
- ↑ Mei, Ju; Hong, Yuning; Lam, Jacky W. Y.; Qin, Anjun; Tang, Youhong; Tang, Ben Zhong (2014). "Aggregation-Induced Emission: The Whole Is More Brilliant than the Parts". Advanced Materials 26 (31): 5429–5479. doi:10.1002/adma.201401356. பன்னாட்டுத் தர தொடர் எண்:0935-9648.
- ↑ Mei, Ju; Leung, Nelson L. C.; Kwok, Ryan T. K.; Lam, Jacky W. Y.; Tang, Ben Zhong (2015). "Aggregation-Induced Emission: Together We Shine, United We Soar!". Chemical Reviews 115 (21): 11718–11940. doi:10.1021/acs.chemrev.5b00263. பன்னாட்டுத் தர தொடர் எண்:0009-2665. பப்மெட்:26492387.
- ↑ Jin, Yi; Xu, Yanbin; Liu, Yinling; Wang, Lingyun; Jiang, Huanfeng; Xianjie, Li; Cao, Derong (2011). "Synthesis of novel diketopyrrolopyrrole-based luminophores showing crystallization-induced emission enhancement properties". Dyes and Pigments 90: 311–318. doi:10.1016/j.dyepig.2011.01.005.
- ↑ Virk, Tarunpreet Singh; Ilawe, Niranjan V.; Zhang, Guoxian; Yu, Craig P.; Wong, Bryan M.; Chan, Julian M. W. (2016). "Sultam-Based Hetero[5]helicene: Synthesis, Structure, and Crystallization-Induced Emission Enhancement". ACS Omega 1: 1336–1342. doi:10.1021/acsomega.6b00335.