திரனோட்டம்
| திரனோட்டம் | |
|---|---|
| இயக்கம் | வி. அசோக் குமார் |
| தயாரிப்பு | பச்சலூர் சசி |
| கதை | வி. அசோக்குமார் பச்சலூர் சசி |
| இசை | ம. கோ. இராதாகிருட்டிணன் |
| நடிப்பு | மோகன்லால் இரவிக்குமார் சி. சந்திரமோகன் மணியப்பிள்ளா ராஜு ரேணு சந்திரா |
| ஒளிப்பதிவு | எஸ். குமார் |
| கலையகம் | மிருத்யுஞ்சயா |
| வெளியீடு | 2005[1] |
| நாடு | இந்தியா |
| மொழி | மலையாளம் |
திரனோட்டம் (Thiranottam) என்பது 1978 ஆம் ஆண்டு வெளியான இந்திய மலையாள மொழி நாடகத் திரைப்படமாகும். இத்திரைப்படத்தின் திரைக்கதையை குமார் மற்றும் பச்சல்லூர் சசி ஆகியோரால் எழுத, வி. அசோக் குமார் இயக்கியிருந்தார். இத்திரைப்படத்தில் மோகன்லால், சி. சந்திரமோகன், ரவிக்குமார், மணியன் பிள்ளை ராஜு, ரேணு சந்திரா ஆகியோர் தங்கள் இத்திரைப்படத்தில் அறிமுக வேடங்களில் நடித்துள்ளனர். இப்படத்தில் மனநலம் குன்றிய ஊழியரான குட்டப்பனாக மோகன்லால் நடித்தார்.
இததிரைப்படம் 1978 இல் முடிக்கப்பட்டு தணிக்கை செய்யப்பட்டது. ஆனால், உடனடியாக வெளியிடப்படவில்லை. இது 2005 ஆம் ஆண்டில் கொல்லத்தில் ஒரே திரையரங்கில் வெளியிடப்பட்டது. மஞ்சில் விரிஞ்சா பூக்கள் (1980) என்ற படத்தில் அறிமுகமானாலும், மோகன்லால் 18 வயதாகியிருந்த போது முதலில் திரையில் அறிமுகமான திரைப்படம் திரனோட்டம் ஆகும்.
கதைக்களம்
[தொகு]மனநலம் குன்றிய ஊழியரான குட்டப்பனின் கதையும் அவரைச் சுற்றியுள்ள வாழ்க்கையுமே திரனோட்டம்.
- குட்டப்பனாக மோகன்லால்
- சி. சந்திரமோகன்
- ரவிக்குமார்
- மணியன் பிள்ளை ராஜு
- ரேனு சந்திரா
- அஜித் ராஜகோபால் [2]
தயாரிப்பு
[தொகு]மோகன்லால் திரைப்படத்தில் அறிமுகமான படம் திரனோட்டம். இவரது முதல் படப்பிடிப்பு 3 செப்டம்பர் 1978 அன்று திருவனந்தபுரத்தில் உள்ள முடவன்முகலில் உள்ள மோகன்லாலின் வீட்டிற்கு முன்னால் காலை 1 மணிக்கு நடந்தது. அப்போது அவருக்கு 18 வயது, கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தார். [3] மனநலம் குன்றிய ஊழியரான குட்டப்பனாக மோகன்லால் நடித்தார். தற்போது, படத்தின் பிரதி ஒரு தொலைக்காட்சி அலைவரிசைக்கு சொந்தமாகியுள்ளது, இவர்கள் படத்தின் செயற்கைக்கோள் உரிமைகளை வாங்கியுள்ளனர். இத்திரைப்படம் முடிக்கப்பட்டு தணிக்கை செய்யப்பட்டது, ஆனால் அப்போது வெளியிட முடியவில்லை. 25 ஆண்டுகளுக்கும் மேலாக, இத்திரைப்படம் ஏசியாநெட் அலைவரிசையில் ஒளிபரப்பப்பட்டது.[3] திரனோட்டத்திற்குப் பிறகு ஒரு தமிழ் திரைப்படம் தயாரிக்க அவர்கள் திட்டமிட்டிருந்தனர், அதற்காக இசை கூட பதிவு செய்திருந்தனர், ஆனால், அது நடக்குமுன், மோகன்லால் மஞ்சில் விரிஞ்சா பூக்கள் (1980) படத்தில் வில்லன் பாத்திரத்திற்கான வாய்ப்பினை வென்றார், அதன் மூலம் இவர் திரையில் அறிமுகமானார்.[3]
மோகன்லால் மற்றும் அவரது நண்பர்கள் அசோக் குமார் (இயக்குநர்) மறைந்த சசீந்திரன் (தயாரிப்பாளர்) பிரியதர்ஷன் (உதவி இயக்குநர்) சுரேஷ் குமார், ரவி குமார், மோகன்லாலுக்கு ஜோடியாக, ரேணு சந்திரா மற்றும் சந்திர மோகன் ஆகியோர் நடித்திருந்தனர்.
இயக்குநர் பிரியதர்ஷன் மற்றும் தயாரிப்பாளர் சுரேஷ்குமார் ஆகியோரும் இத்திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார்கள். பிரியதர்ஷன் உதவி இயக்குனராக பணியாற்றியபோது, சுரேஷ்குமார் கிளாப் பாய் ஆக இருந்தார்.
செப்டம்பர் 2014 இல், மோகன்லால் முகநூலில் தன்னுடன் முதல் காட்சியில் நடித்த குழந்தை நடிகரைக் கண்டுபிடிக்குமாறு வேண்டுகோள் விடுத்தார்.[4] அதில், "என்னுடன் திரையைப் பகிர்ந்து கொண்ட ஒரு சிறுவன் இருக்கிறான். இருப்பினும், அவன் யார் என்று எனக்கு நினைவில் இல்லை. உங்களில் யாருக்காவது அவன் அடையாளம் தெரிந்தால், வந்து எனக்குத் தெரிவிக்கவும். நான் அவனை மீண்டும் சந்திக்க விரும்புகிறேன்" என்று அவர் குறிப்பிட்டார். அந்தச் சிறுவன் இறந்துவிட்டதை அறிந்த சார்பிலா இயக்குநர் பிரசாத் நூரானாட்டின் தேடல் சோகமாக முடிந்தது. [5]
பின்னணி இசை மற்றும் ஒலிப்பதிவு
[தொகு]இத்திரைப்படத்திற்கு ம. கோ. இராதாகிருட்டிணன் இசையமைத்தார், பாடல் வரிகளை ஓ. என். வி. குறுப்பு எழுதியுள்ளார். கே. ஜே. யேசுதாஸ் இரண்டு பாடல்களைப் பாடினார்.
| # | பாடல் | பாடகர்(கள்) | நீளம் | |
|---|---|---|---|---|
| 1. | "மண்ணில் விண்ணில் மனசிலாக்கே" | கே. ஜே. யேசுதாஸ் | ||
| 2. | "பூ ஹோய்" | கே. ஜே. யேசுதாஸ் உடன் குழுவினர் |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Thiranottam". Ranker.
- ↑ "Mohanlal's search for his co-star in his debut film ends in vain - Times of India". The Times of India. 6 September 2014. http://timesofindia.indiatimes.com/entertainment/malayalam/movies/news/Mohanlals-search-for-his-co-star-in-his-debut-film-ends-in-vain/articleshow/41796230.cms.
- ↑ 3.0 3.1 3.2 Warrier, Shobha (3 September 2003). "Life is not about acting alone". ரெடிப்.காம். Retrieved 10 May 2011.
- ↑ "Mohanlal in thiranottam first film". youtube. Archived from the original on 2021-12-15. Retrieved 12 September 2014.
- ↑ "Mohanlal in search of long lost child artist". deccanherald. 4 September 2014. Archived from the original on 23 October 2014. Retrieved 11 September 2014.