தியோலாலி

ஆள்கூறுகள்: 19°57′04″N 73°50′02″E / 19.951°N 73.834°E / 19.951; 73.834
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தியோலாலி அல்லது தேவ்லாலி
நகரம்
தியோலாலி அல்லது தேவ்லாலி is located in மகாராட்டிரம்
தியோலாலி அல்லது தேவ்லாலி
தியோலாலி அல்லது தேவ்லாலி
மகாராட்டிராவில் அமைவிடம்
ஆள்கூறுகள்: 19°57′04″N 73°50′02″E / 19.951°N 73.834°E / 19.951; 73.834
நாடு இந்தியா
மாநிலம்மகாராட்டிரம்
மாவட்டம்நாசிக்
ஏற்றம்515 m (1,690 ft)
மக்கள்தொகை (2011)[1]
 • மொத்தம்54,027
மொழி
 • அலுவல்மராத்தி[2]
நேர வலயம்இந்திய சீர் நேரம் (ஒசநே+5:30)
வாகனப் பதிவுஎம்எச் - 15

தியோலாலி (Deolali) அல்லது தேவலாலி என்பது இந்திய மாநிலமான மகாராட்டிராவின் நாசிக் மாவட்டத்திலுள்ள ஓர் சிறிய மலை வாழிடமும், மக்கள் தொகை கணக்கெடுப்பு நகரமும் ஆகும்.

தியோலாலியில் ஒரு முக்கியமான இராணுவத் தளம் உள்ளது. நாட்டின் மிகப் பழமையான இந்திய இராணுவ மையங்களில் ஒன்றான தியோலாலி முகாம், இந்த பிராந்தியத்தில் வான்படை நிலையம், இந்தியத் தரைப்படையின் பீரங்கிப் பள்ளி உட்பட பிற நிறுவனங்களைத் தொடங்கியது. தியோலாலியில் ஏராளமான கோயில்களும் சுற்றுலா தலங்களும் உள்ளன.

வரலாறு[தொகு]

பிரித்தானியர் காலம்[தொகு]

தியோலாலி மும்பைக்கு வடகிழக்கில் 100 மைல் தொலைவில் இருந்த ஒரு பிரித்தானிய இராணுவ முகாமாகும் (அப்போது பம்பாய் என்று அழைக்கப்பட்டது). இது இராணுவ பணியாளர் கல்லூரியின் அசல் இடமாகும். இப்போது இந்தியாவின் இராணுவ அதிகாரிகளுக்கான கல்லூரி என மாற்றப்பட்டுள்ளது.

புள்ளிவிவரங்கள்[தொகு]

2011 இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, தியோலாலியின் மொத்த மக்கள் தொகை 54,027 ஆகும். அவர்களில் 28,269 ஆண்கள் மற்றும் 25,758 பெண்கள் இருந்தனர். 0 முதல் 6 வயதுக்குட்பட்டவர்கள் 6,085 ஆக இருந்தனர். மொத்த கல்வியறிவாளர்களின் எண்ணிக்கை 43,172 ஆகும். இது 79.9% ஆகும் ஆண்களின் கல்வியறிவு 83.5% மற்றும் பெண் கல்வியறிவு 76.0%. தியோலாலியின் 7+ மக்கள்தொகையின் கல்வியறிவு விகிதம் 90.1% ஆகும். இதில் ஆண்களின் கல்வியறிவு விகிதம் 94.3% எனவும் பெண் கல்வியறிவு விகிதம் 85.4% ஆகும். பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரின் எண்ணிக்கை முறையே 11,540 , 1,982 ஆகும். தியோலாலியில் 2011 இல் 11696 வீடுகள் இருந்தன. [1]

போக்குவரத்து[தொகு]

தொடருந்து[தொகு]

தேவ்லாலி தொடருந்து நிலையம் ஏராளமான முக்கியமான தொடருந்துகள் நிறுத்தப்படும் இடத்துக்கு மிக அருகில் உள்ளது. நாசிக் நகரிலிருந்து 17 கி.மீ தொலைவில் அமைந்துள்ள ஓசர் விமானநிலையத்தில் ஒரு விமான முனையம் கட்டப்பட்டுள்ளதால் விமான இணைப்பும் உள்ளது

ஆர்வமுள்ள இடங்கள்[தொகு]

நகரைச் சுற்றிலும், முக்திதம் கோயில் உட்பட பல கோயில்களைக் கொண்டுள்ளது. மேலும், இது பௌத்த குகைகளுக்கும் பிரபலமானது. இது பாண்டவர் குகைகள் என்று பிரபலமாக அறியப்படுகிறது. [3] தியோலாலியில் இருக்கும் கோல்ஃப் மைதானம், பிரித்தானியக் காலத்தின் போது உருவாக்கப்பட்ட இந்தியாவின் மிகப்பெரிய ஒன்றாகும்.[4]

கிறித்துவ யாத்திரை மையமாக விளங்கும் குழந்தை இயேசுவின் ஆலயம் தியோலாலியில் இருந்து 8 கி.மீ தூரத்தில் அமைந்துள்ளது. [5]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 "Census of India: Deolali". www.censusindia.gov.in. பார்க்கப்பட்ட நாள் 25 December 2019.
  2. "52nd Report of the Commissioner for Linguistic Minorities in India" (PDF). nclm.nic.in. Ministry of Minority Affairs. p. 18. Archived from the original (PDF) on 25 May 2017. பார்க்கப்பட்ட நாள் 15 February 2018.
  3. "Nashik district official site". Nashik.nic.in. 30 January 1948. Archived from the original on 1 October 2013. பார்க்கப்பட்ட நாள் 28 September 2013.
  4. "Nashik district Official Site - History". Nashik.nic.in. Archived from the original on 1 October 2013. பார்க்கப்பட்ட நாள் 28 September 2013.
  5. "Devotees start arriving for Infant Jesus annual feast". 9 February 2018. https://timesofindia.indiatimes.com/city/nashik/devotees-start-arriving-for-infant-jesus-annual-feast/articleshow/62856225.cms. 

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=தியோலாலி&oldid=3190534" இலிருந்து மீள்விக்கப்பட்டது