தியூட்டிரியமேற்ற பென்சீன்
|
| |||
| பெயர்கள் | |||
|---|---|---|---|
| விருப்பத்தெரிவு ஐயூபிஏசி பெயர்
(2H6) பென்சீன்[1] | |||
| இனங்காட்டிகள் | |||
| 1076-43-3 | |||
Beilstein Reference
|
1905426 | ||
| ChEBI | CHEBI:193039 | ||
| ChemSpider | 64671 | ||
| EC number | 214-061-8 | ||
| யேமல் -3D படிமங்கள் | Image | ||
| பப்கெம் | 71601 | ||
| |||
| UN number | 1114 | ||
| பண்புகள் | |||
| C62H6 அல்லது C6D6 | |||
| வாய்ப்பாட்டு எடை | 84.1488 கி மோல்−1 | ||
| அடர்த்தி | 0.950 கி செ.மீ−3 | ||
| உருகுநிலை | 7 °C; 44 °F; 280 K | ||
| கொதிநிலை | 79 °C; 174 °F; 352 K | ||
| வெப்பவேதியியல் | |||
| வெப்பக் கொண்மை, C | 152.46 J K−1 mol−1 | ||
| தீங்குகள் | |||
| GHS pictograms | |||
| GHS signal word | அபாயம் | ||
| H225, H304, H315, H319, H340, H350, H372 | |||
| P201, P202, P210, P233, P240, P241, P242, P243, P260, P264, P270, P280, P281, P301+310 | |||
| தீப்பற்றும் வெப்பநிலை | −11 °C (12 °F; 262 K) | ||
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |||
தியூட்டிரியமேற்ற பென்சீன் (Deuterated benzene) என்பது C62H6 அல்லது C6D6 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் கரிம வேதியியல் சேர்மமாகும். பென்சீன் சேர்மத்தின் ஓரிடத்துமாறி என்று தியூட்ரியமேற்ற பென்சீன் வரையறுக்கப்படுகிறது. பென்சீனில் இடம்பெற்றுள்ள
ஐதரசனுக்கு ("H") பதிலாக தியூட்ரியமேற்ற பென்சீனில் தியூட்டிரியம் ("D") பதிலீடு செய்யப்பட்டுள்ளது.
பண்புகள்
[தொகு]தியூட்டிரியமேற்ற பென்சீனின் பண்புகள் சாதாரண பென்சீனின் பண்புகளைப் போலவே இருக்கின்றன. இருப்பினும், புரோட்டியத்துடன் ஒப்பிடும்போது தியூட்டிரியத்தின் அதிகரித்த அணு எடை, C6D6 சேர்மத்தின் உருகுநிலையானது, தியூட்டிரியமேற்றம் அல்லாத ஒப்புமைகளை விட சுமார் 1.3 °செல்சியசு வெப்பநிலை அதிகமாக உள்ளது என்பதைக் குறிக்கிறது. இருப்பினும், இரண்டு சேர்மங்களின் கொதிநிலைகளும் ஒன்றே (80 °செ) ஆகும்.[2]
பயன்பாடுகள்
[தொகு]அணுக்கரு காந்த ஒத்திசைவு நிறமாலையியல் ஆய்வில் பொதுவாகப் பயன்படுத்தப்படும் ஒரு கரைப்பான் தியூட்டிரியமேற்ற பென்சீன் ஆகும். மலிவான தியூட்டிரியமேற்ற குளோரோஃபார்முடன் பெரும்பாலும் வினைபுரியும் கரிம உலோக சேர்மங்களின் நிறமாலைகளை எடுக்க இச்சேர்மம் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது.[3]
தியூட்டிரியமேற்ற பீனைல் குழுவைக் கொண்ட மூலக்கூறுகளின் தயாரிதியூட்டிரியமேற்ற பென்சீன் இதன் ஒப்புமையின் அனைத்து வினைகளுக்கும் இயல்பாக உட்படும். ஆனால் இயக்க ஓரிடத்தான் விளைவு காரணமாக சற்று மெதுவாக வினை நிகழும். உதாரணமாக, தேவைப்பட்டால், தியூட்டிரியமேற்ற பென்சாயிக்கு அமிலத்தின் தயாரிப்பில் தியூட்டிரியமேற்ற பென்சீனைப் பயன்படுத்தலாம்:
தியூட்டிரியமேற்ற பீனைல் (C6D5) குழுவைத் தாங்கிய பல எளிய ஒற்றை-பதிலீட்டு அரோமாட்டிக்கு சேர்மங்கள் வணிக ரீதியாக விற்கப்படுகின்றன. எடுத்துக்காட்டாக அனிலின், அசிட்டோபீனோன், நைட்ரோபென்சீன், புரோமோபென்சீன் மற்றும் பல.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ பன்னாட்டு தனி மற்றும் பயன்பாட்டு வேதியியல் ஒன்றியம் (2014). Nomenclature of Organic Chemistry: IUPAC Recommendations and Preferred Names 2013. The Royal Society of Chemistry. p. 1142. doi:10.1039/9781849733069. ISBN 978-0-85404-182-4.
- ↑ "Benzene-d6". sigmaaldrich.com. Retrieved 4 August 2023.
- ↑ Fulmer, Gregory R.; Miller, Alexander J. M.; Sherden, Nathaniel H.; Gottlieb, Hugo E.; Nudelman, Abraham; Stoltz, Brian M.; Bercaw, John E.; Goldberg, Karen I. (2010). "NMR Chemical Shifts of Trace Impurities: Common Laboratory Solvents, Organics, and Gases in Deuterated Solvents Relevant to the Organometallic Chemist". Organometallics 29 (9): 2176–2179. doi:10.1021/om100106e. https://authors.library.caltech.edu/18475/2/om100106e_si_001.pdf.

