தியுயாமுனைட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தியுயாமுனைட்டு
Tyuyamunite
பொதுவானாவை
வகைவனேடேட்டு கனிமம்
வேதி வாய்பாடுCa(UO2)2V2O8•(5-8)H2O
இனங்காணல்
படிக இயல்புபொதிகளாக பெரும்பாலும் கதிர்வீச்சுடன் காணப்படும் தட்டையான படிகங்கள்.
படிக அமைப்புநேர்ச்சாய்சதுரம்
பிளப்பு{001} இல் சரிபிளவு, மைகாவைப் போன்றது; {100} & {010} இல் தனித்துவம்
மோவின் அளவுகோல் வலிமை1 12 - 2
கீற்றுவண்ணம்மஞ்சள்
ஒளிஊடுருவும் தன்மைஒளிபுகாது முதல் ஒளிகசிதல் வரை
ஒப்படர்த்தி3.57 - 4.35
ஒளியியல் பண்புகள்ஈரச்சு (-)
ஒளிவிலகல் எண்nα = 1.675 nβ = 1.860 - 1.870 nγ = 1.885 - 1.895
இரட்டை ஒளிவிலகல்0.210 - 0.220
பலதிசை வண்ணப்படிகமைபலவீனம்: X = கிட்ட்த்தட்ட நிறமற்றது, Y = வெளிறிய பசுமஞ்சள், Z = பசுமஞ்சள்
2V கோணம்30° முதல் 45°
நிறப்பிரிகைஏதுமில்லை
பிற சிறப்பியல்புகள் Radioactive
மேற்கோள்கள்[1][2][3][4]

தியுயாமுனைட்டு (Tyuyamunite) என்பது Ca(UO2)2V2O8•(5-8)H2O என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிமச் சேர்மமாகும். கார்னோடைட்டு குழுவைச் சேர்ந்த இக்கனிமம் மிகவும் அரியவகை யுரேனியக் கனிமம் ஆகும். யுரேனியத்தின் செறிவு அதிகமாகக் காணப்படுவதால் கனிமம் பிரகாசமான மஞ்சள் நிறத்திலும் கதிரியக்கப் பண்பு கொண்டதாகவும் உள்ளது [5]. கிர்கிசுத்தான் நாட்டில் பெர்கானா பள்ளத்தாக்கின் தியுயா-முயூன் சுரங்கத்தில் 1912 ஆம் ஆண்டு தியுயாமுனைட்டு கனிமம் கண்டறியப்பட்டது. கோன்சுடாண்டின் அவ்டோனோமோவிச்சு நெனாத்கெவிச் என்பவர் இக்கனிமத்திற்கு தியுயாமுனைட்டு என்று பெயரிட்டார் [2].

தோற்றம் மற்றும் மாற்றம்[தொகு]

யுரேனியத் தாதுவான யுரேனினைட்டு கனிமம் கால்நிலையாக்கத்தால் தியுயாமுனைட்டு கனிமமாக மாறுகிறது. ஒரு நீரேறிய கனிமவகையாக இருந்தாலும் தியுயாமுனைட்டு சுற்றுச்சூழலில் வெளிப்படும்போது நீர் மூலக்கூறை இழந்து மெட்டாதியுயாமுனைட்டு [5] Ca(UO2)2(VO4)2•3-5H2O[6] என்ற ஒரு புதிய கனிமமாக மாறுகிறது.

மேற்கோள்கள்[தொகு]

  1. Handbook of Mineralogy
  2. 2.0 2.1 Tyuyamunite at Mindat
  3. Tyuyamunite data on Webmineral
  4. Tyuyamunite at Amethyst Galleries' Mineral Gallery
  5. 5.0 5.1 Lynch, Dan R. and Bob Lynch, "Tyuyamunite," Ed. Brett Ortler, Michigan Rocks & Minerals, Adventure Publications, 2010 ISBN 978-1591932390
  6. Metatyuyamunite on Mindat

புற இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=தியுயாமுனைட்டு&oldid=2808027" இலிருந்து மீள்விக்கப்பட்டது