தியான்யுவான் மனிதன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தியான்யுவான் மனிதன் (சீனம் 田園洞,  田园洞, பி Tiányuándòng Rén) என்பது, சீனாவின் பீஜிங்குக்கு அண்மையில் உள்ள தியான்யுவான் குகையில் கண்டுபிடிக்கப்பட்ட எலும்பு முதலான எச்சங்களினால் குறிக்கப்படும் மனிதன் ஆகும்.[1] 2007ம் ஆண்டில், ஒரு மனிதனுக்குரிய 34 எலும்புத்துண்டுகளை ஆய்வாளர்கள் இக்குகையில் கண்டுபிடித்தனர். கதிரியக்கக்கரிமக் காலக்கணிப்பு (Radiocarbon dating) அடிப்படையில், மேற்படி எலும்புகள் இற்றைக்கு 42,000 முதல் 39,000 வரையிலான காலப்பகுதியைச் சேர்ந்தவை. இதன்படி, இந்த எலும்புகள் போர்னியோவின் சரவாக்கில் உள்ள நியா குகையில் கண்டெடுக்கப்பட்ட இதுபோன்ற எலும்புகளை விடச் சற்றுக் காலத்தால் பிந்தியது ஆகின்றது.

ஓரிடத்தான் பகுப்பாய்வுகள், தியான்யுவான் மனிதனின் உணவின் பெரும்பகுதி, நன்னீர் மீனின் இருந்து பெறப்பட்டது எனக் காட்டுகின்றன.[2]

2013ல் செய்யப்பட்ட டி,என்,ஏ சோதனைகள், இம்மனிதனுக்குத் தற்கால ஆசியர்கள், தாயக அமெரிக்கர்களுடன்[3][4][5][6][7] தொடர்புகள் இருப்பதைக் காட்டின. ஆனால், தற்கால ஐரோப்பியர்களின் மூதாதையர்களிடம் இருந்து மரபியல் அடிப்படையில் ஏற்கெனவே விலகிவிட்டதையும் காட்டின.[4]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Ancient human unearthed in China". BBC news. April 2, 2007. பார்க்கப்பட்ட நாள் February 26, 2011.
  2. Hu, Y.; Shang, H.; Tong, H.; Nehlich, O.; Liu, W.; Zhao, C.; Yu, J.; Wang, C. et al. (Jul 2009). "Stable isotope dietary analysis of the Tianyuan 1 early modern human". Proceedings of the National Academy of Sciences 106 (27): 10971–10974. doi:10.1073/pnas.0904826106. பன்னாட்டுத் தர தொடர் எண்:0027-8424. பப்மெட்:19581579. Bibcode: 2009PNAS..10610971H. 
  3. "A relative from the Tianyuan Cave". Max Planck Society. 2013-01-21.
  4. 4.0 4.1 "A relative from the Tianyuan Cave: Humans living 40,000 years ago likely related to many present-day Asians and Native Americans". Science Daily. 2013-01-21.
  5. "DNA Analysis Reveals Common Origin of Tianyuan Humans and Native Americans, Asians". Sci-News. 2013-01-24.
  6. "Ancient human DNA suggests minimal interbreeding". Science News. 2013-01-21. {{cite web}}: Italic or bold markup not allowed in: |publisher= (help)
  7. "Ancient Bone DNA Shows Ancestry of Modern Asians & Native Americans". Caving News. 2013-01-31. Archived from the original on 2020-01-12. பார்க்கப்பட்ட நாள் 2016-08-16.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தியான்யுவான்_மனிதன்&oldid=3589907" இலிருந்து மீள்விக்கப்பட்டது