உள்ளடக்கத்துக்குச் செல்

தியாகம், பகவத்கீதை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தியாகம் எனில் துறத்தல் அல்லது கைவிட்டுவிடுதல் என்று பொருள். எனவே அனைத்தையும் துறந்தவனை துறவி என்பர். தியாகம் முக்குணத் தன்மை உடையது. முக்குணங்கள் அடிப்படையில் தியாகத்தை மூன்றாக பிரித்து பகவான் ஸ்ரீகிருஷ்ணர், பகவத் கீதையில் பதினெட்டாவது அத்தியாயத்தில் விரிவாக விளக்குகிறார்.

தாமசத் தியாகம்[தொகு]

ஒருவனுக்கு விதிக்கப்பட்ட செயலை (கர்மத்தை) முற்றிலும் துறந்துவிடுவது முறையல்ல. அவ்வாறு மதிமயக்கத்தினால் செயலை துறப்பது தாமசத் தியாகம் ஆகும்.

ராஜசத் தியாகம்[தொகு]

ஒரு செயல் செய்வதால் துக்கத்தைத் தருமென்று நினைத்து, உடலை வருத்த வேண்டி இருக்குமோ என்ற பயத்தால் அந்த கருமத்தை செய்யாது விட்டால் அது ராஜசத் தியாகம் ஆகும்.

சாத்வீக தியாகம்[தொகு]

ஒருவனுக்கு விதிக்கப்பட்ட கர்மத்தை (செயலை) தான் செய்தே ஆக வேண்டும் என்ற முனைப்புடன், பற்றுதலையும் கர்மத்தால் உண்டாகும் பலனையும் துறந்து செயலைச் செய்தால் அவ்வகையான தியாகம் சாத்வீக தியாகம் ஆகும். சத்துவ குணம் நிறைந்தவனும், அறிவாளியும், ஐயம் நீங்கிய தியாகியானவன், ஒரு செயலை நல்லது அல்ல என்று வெறுப்பதும் இல்லை. ஒரு செயல் நல்லது என்று அதில் நாட்டம் கொள்வதும் இல்லை.

உடலைத் தாங்குபவன் எவனும் செயல்களை துறந்து விடுவது என்பது முடியாத செயல். ஆகவே செயல்கள் செய்வதனால் உண்டாகும் புண்ணியம்-பாவம் கர்மபலன்களைத் தியாகம் (துறப்பது) செய்வனே தியாகி எனப் போற்றப்படுவான்.

தியாகம் செய்வதால் உண்டாகும் பலன்கள்[தொகு]

தாமசத்தியாகம் மற்றும் ராஜசத் தியாகம் செய்தவர்கள் தாம் இறந்த பின், இதமற்ற,அல்லது இதமான அல்லது இரண்டும் கலந்த கர்ம பலனைகளை அனுபவிப்பார்கள். ஆனால் சாத்வீகத் தியாகம் செய்தவர்கள் அத்தகைய பலனை அடையாது அதைவிட மேலான பலனை அடைவார்கள்.


உசாத் துணை[தொகு]

  • பகவத் கீதை, அத்தியாயம் பதினெட்டு, சுலோகம் 7 முதல் 13 முடிய
"https://ta.wikipedia.org/w/index.php?title=தியாகம்,_பகவத்கீதை&oldid=1685298" இலிருந்து மீள்விக்கப்பட்டது