உள்ளடக்கத்துக்குச் செல்

தியாகதுருகம் மலைக்கோட்டை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தியாகதுருகம் மலைக்கோட்டை
தியாகதுருகம் மலைக்கோட்டை தானியக் கிடங்கு
தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை தகவல் பலகை

தியாகதுருகம் மலைக்கோட்டை விழுப்புரம் நகரத்திலிருந்து 60 கி.மீ. மேற்கே தியாகதுருகம் என்ற ஊரில் உள்ளது. இது கள்ளக்குறிச்சி வட்டத்தில் அமைந்துள்ளது. கள்ளக்குறிச்சியிலிருந்து கிழக்கே 10 கி.மீ. தொலைவில் உள்ள இந்த ஊரில் 400 அடி உயரத்தில் இந்த மலைக்கோட்டை உள்ளது.

மலைக்கோட்டை வரலாறு

[தொகு]

இது 16 ஆம் நுாற்றாண்டைச் சேர்ந்தது. 18 ஆம் நுாற்றாண்டில் இராணுவத் தளமாக செயல்பட்டது. 1756-ல் பிரான்சியரின் ஆதிக்கத்தின் கீழ் இருந்த இந்தக் கோட்டை, 1760-இல் ஐதர் அலி வசமானது. இதன் பின்பு ஆங்கிலேயர்கள் கைப்பற்றினாா்கள். ஆங்கிலேயரிடம் இருந்து 1790-ல் திப்பு சுல்தான் போர் புரிந்து கைப்பற்றினார்.

சிறப்புகள்

[தொகு]

இக்கோட்டையில் தானியக்கிடங்குகள், சூாியன் பாா்க்காத கிணறு, தாமரைக்குளம், குதிரை யானை போன்ற விலங்குகள் தங்குவதற்கான இடங்கள் போன்றவை இன்றும் மறையாமல் உள்ளது. ஆங்கிலேயா்கள் இக்கோட்டையை அழிக்கும் முயற்சியில் மிகப்பொிய நான்கு பீரங்கி குண்டுகளின் மூலம் கோட்டையைத் தாக்கியுள்ளனா். இதற்குச் சான்றாக கோட்டையில் நான்கு பீரங்கி குண்டுகள் காணக் கிடைக்கின்றன.

அருகா் குகைக்கோயில்

[தொகு]

கோட்டையின் மேற்குப்புறத்தில் மலைக்குன்றுகளுக்கு இடையே அருகா் குகைக் கோயில் அமைந்துள்ளது. இக்கோயில் சமணா்களால் கட்டப்பட்டது.

மேற்கோள்கள்

[தொகு]