தியன்வென்-1

ஆள்கூறுகள்: 25°06′N 109°54′E / 25.1°N 109.9°E / 25.1; 109.9
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தியன்வென்-1
Tianwen-1
2019 இல் தியன்வெ-1 சோதிக்கப்படுகிறது. மேல் வெள்ளிப் பகுதியில் தரையிறங்கியும், சுரோங் தரையுளவும் உள்ளன, கீழ்ப் பகுதியில் சுற்றுக்கலன்.
திட்ட வகைசுற்றுக்கலன், தரையிறங்கி, தரையுளவியக் கொண்ட கோளியல்
இயக்குபவர்சீன தேசிய விண்வெளி நிர்வாகம் (CNSA)
காஸ்பார் குறியீடு2020-049A
சாட்காட் இல.45935
திட்டக் காலம்1384 நாள்-கள், 8 மணிநேரம்-கள், 24 நிமிடம்-கள் (ஏவப்பட்ட காலம் முதல்)
சுற்றுக்கலன்: 2 புவி ஆண்டுகள் (திட்டம்)
1182 நாள்-கள், 1 மணிநேரம், 13 நிமிடம்-கள் (சுற்றுப்பாதையில் இணைந்தது முதல்)
தரையுளவி: 90 sols (திட்டம்)[1]
விண்கலத்தின் பண்புகள்
விண்கல வகைசுற்றுக்கலன், தரையிறங்கி, தரையுளவி, TW-1 பயன்படுத்தப்படக்கூடிய ஒளிப்படக் கருவி (TDC)
தயாரிப்புசீன தேசிய விண்வெளி நிர்வாகம்
ஏவல் திணிவுமொத்தம்: 5,000 kg (11,000 lb)
சுற்றுக்கலன்: 3,175 kg (7,000 lb)
தரையுளவி:240 kg (530 lb)
பரிமாணங்கள்தரையுளவி: 2.6 மீ × 3 மீ × 1.85 மீ
திட்ட ஆரம்பம்
ஏவப்பட்ட நாள்23 சூலை 2020, 04:41:15 ஒசநே [2]
ஏவுகலன்லாங் மார்ச் 5
ஏவலிடம்வென்சாங், LC-101
ஒப்பந்தக்காரர்சீனா விண்வெளி அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கழகம்
செவ்வாய் சுற்றுக்கலன்
விண்கலப் பகுதிசுற்றுக்கலன்
சுற்றுப்பாதையில் இணைதல்10 பெப்ரவரி 2021, 11:52 ஒசநே [3][4]
செவ்வாய் தரையிறங்கி
விண்கலப் பகுதிதரையிறங்கி
தரையிறங்கிய நாள்14 மே 2021, 23:18 ஒசநே [5][6][7]
தரையிறங்கிய பகுதிஉட்டோப்பியா பிளனீத்தியா [8]
25°06′N 109°54′E / 25.1°N 109.9°E / 25.1; 109.9 [9]
செவ்வாய் தேட்ட ஊர்தி
விண்கலப் பகுதிதரையுளவி
தரையிறங்கிய நாள்22 மே 2021 (திட்டம்) [10]
தரையிறங்கிய இடம்உட்டோப்பியா பிளனீத்தியா[8]

தியன்வென்-1 (Tianwen-1; TW-1) என்பது செவ்வாய்க் கோளிற்கு தானியங்கி விண்கலம் ஒன்றை அனுப்பும் சீன தேசிய விண்வெளி நிறுவனத்தின் ஒரு திட்டம் ஆகும். இவ்விண்கலத்தில் சுற்றுக்கலன், ஒளிப்படக் கருவி, தரையிறங்கி, சுரோங் செவ்வாய்த் தரையுளவி ஆகியன அடங்கியுள்ளன. மொத்தமாக 5 தொன் எடையுள்ள இந்த விண்கலம் 13 அறிவியல் கருவிகளை எடுத்துச் சென்றது. செவ்வாய்க்குச் செலுத்தப்பட்ட அதிகூடிய எடையுள்ள விண்கலம் இதுவாகும்.

இவ்விண்கலம் 2020 சூலை 23 இல் வென்சாங் ஏவுதளத்தில் இருந்து வெற்றிகரமாக[11] லாங் மார்ச் 5 என்ற மீகன செலுத்தூர்தியில் ஏவப்பட்டது. 7 மாதங்களின் பின்னர் இது 2021 பெப்ரவரி 10 இல் செவ்வாயின் சுற்றுப்பாதையை அடைந்தது.[12][4] அடுத்த மூன்று மாதங்களுக்கு இவ்விண்கலம் தரையிறங்குவதற்குப் பொருத்தமான இடத்தை ஆராய்ந்தது. அதன் பின்னர் 2021 மே 14 அன்று தரையிறங்கி/தரையுளவி ஆகியன அடங்கிய மேற்பகுதி தரையிறங்கும் கட்டம் ஆரம்பமானது. செவ்வாயின் வளிமண்டல நுழைவை மேற்கொண்டு, அதைத் தொடர்ந்து வான்குடையின் கீழ் மெதுவாகத் தரையிறங்க ஆரம்பித்தது. தரையிறங்கி செவ்வாய்க் கோளில் பின்நோக்கிய உந்துகை மூலம் மென்மையான தரையிறங்கலை வெற்றிகரமாக நிறைவு செய்தது. வெளியிடப்பட்ட அறிக்கைகளின்படி, தரையிறங்கிய நேரம் 2021 மே 14, 23:18 (ஒசநே) ஆகும்.[6][7][13] சிறிது நேரத்தின் பின்னர், சீன தேசிய விண்வெளி நிர்வாகம் இதனை உறுதிப்படுத்தியது.[5][13][14][15]

மேற்கோள்கள்[தொகு]

விக்கிமீடியா பொதுவகத்தில்,
தியன்வென்-1
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
 1. "China Exclusive: China's aim to explore Mars". Xinhua. 21 March 2016. http://news.xinhuanet.com/english/2016-03/21/c_135209176.htm. 
 2. Wall, Mike (23 July 2020). "China launches ambitious Tianwen-1 Mars rover mission". Space.com. பார்க்கப்பட்ட நாள் 12 February 2021.
 3. "天问一号探测器飞行里程突破3亿千米" [Tianwen-1 Has Flown More Than 300 Million Kilometers] (in Chinese). 17 November 2020. பார்க்கப்பட்ட நாள் 12 January 2021.{{cite web}}: CS1 maint: unrecognized language (link)
 4. 4.0 4.1 Gebhardt, Chris (10 February 2021). "China, with Tianwen-1, begins tenure at Mars with successful orbital arrival". NASASpaceFlight.com. பார்க்கப்பட்ட நாள் 10 February 2021.
 5. 5.0 5.1 "我国首次火星探测任务着陆火星取得圆满成功". CNSA. Archived from the original on 2021-05-15. பார்க்கப்பட்ட நாள் 2021-05-15. 科研团队根据"祝融号"火星车发回遥测信号确认,5月15日7时18
 6. 6.0 6.1 "天问一号成功着陆火星!". 2021-05-15.
 7. 7.0 7.1 "官宣!7时18分!"天问一号"探测器成功着陆火星". 2021-05-15.
 8. 8.0 8.1 Jones, Andrew (28 October 2020). "China chooses landing site for its Tianwen-1 Mars rover". Space.com. பார்க்கப்பட்ட நாள் 16 November 2020.
 9. "China's 1st Mars rover 'Zhurong' lands on the Red Planet". பார்க்கப்பட்ட நாள் 2021-05-15.
 10. "China is about to land its Zhurong rover on Mars". The same Chinese space watchers who revealed the impending descent also report that Zhurong will begin exploration on 22 May 2021
 11. Jones, Andrew (23 July 2020). "Tianwen-1 launches for Mars, marking dawn of Chinese interplanetary exploration". SpaceNews இம் மூலத்தில் இருந்து 10 நவம்பர் 2022 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20221110125542/https://spacenews.com/tianwen-1-launches-for-mars-marking-dawn-of-chinese-interplanetary-exploration/. 
 12. Roulette, Joey (5 February 2021). "Three countries are due to reach Mars in the next two weeks". The Verge. பார்க்கப்பட்ட நாள் 7 February 2021.
 13. 13.0 13.1 "China lands its Zhurong rover on Mars". bbc.com. பார்க்கப்பட்ட நாள் May 14, 2021.
 14. "科普贴 "祝融"成功登陆火星 为何选择在"乌托邦"? 恐怖9分钟经历了什么?". 2021-05-15.
 15. "天問一號探測器登陸「烏托邦平原」 中國火星着陸任務創歷史". 2021-05-15.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தியன்வென்-1&oldid=3605343" இலிருந்து மீள்விக்கப்பட்டது