திம்லாபுரா வனவிலங்கு சரணாலயம்
தோற்றம்
| திம்லாபுரா வனவிலங்கு சரணாலயம் Thimlapura Wildlife Sanctuary | |
|---|---|
ஐயுசிஎன் வகை IV (வாழ்விடம்/இனங்களின் மேலாண்மைப் பகுதி) | |
| அமைவிடம் | தும்கூர் மாவட்டம், கர்நாடகா, இந்தியா |
திம்லாபுரா வனவிலங்கு சரணாலயம் (Thimlapura Wildlife Sanctuary) இந்தியாவின் கர்நாடக மாநிலத்தில் உள்ள தும்கூர் மாவட்டத்தின் மதுகிரி மற்றும் கொரட்டகெரே வட்டங்களில் அமைந்துள்ளது. 1972 ஆம் ஆண்டு வனவிலங்கு (பாதுகாப்பு) சட்டத்தின் பிரிவு 36-ஏ-இன் கீழ் வனவிலங்கு சரணாலயமாக அறிவிக்கப்பட்டது..[1] இங்கு சிறுத்தைகள், தேன் கரடிகள், காட்டுப் பன்றிகள், இந்திய நரிகள், ஓநாய்கள் உள்ளிட்ட விலங்குகள் வசிக்கின்றன. திம்லாபுரா வனவிலங்கு சரணாலயம் தேன் கரடிகளுக்கான ஒரு பாதுகாப்பு காப்பகமாகும்.[2][3]
அமைவிடம்
[தொகு]திம்லாபுரா வனவிலங்கு சரணாலயம் கர்நாடகாவின் தும்கூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. இது 50.86 சதுரகிலோமீட்டர் பரப்பளவில் பரவியுள்ளது.[1]
மேற்கோள்கள்
[தொகு]- 1 2 "Karnataka Forest Department". aranya.gov.in. Retrieved 2021-11-29.
- ↑ Khajane, Muralidhara (2014-08-01). "Thimmalapura to get conservation reserve status" (in en-IN). The Hindu. https://www.thehindu.com/news/national/karnataka/thimmalapura-to-get-conservation-reserve-status/article6273036.ece.
- ↑ "Thimmalapura Likely to be Declared Sloth Bear Sanctuary". The New Indian Express. Retrieved 2021-11-29.