திம்மாபுரம் அரசு தோட்டக்கலை பண்ணை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

திம்மாபுரம் அரசு தோட்டக்கலை பண்ணை என்பது தமிழ்நாட்டின், கிருஷ்ணகிரி மாவட்டம் திம்மாபுரம் என்ற ஊரில் செயல்படும் ஒரு அரசு தோட்டக்கலை பண்ணை ஆகும்.

இந்தப் பண்ணையானது கிருஷ்ணகிரியில் இருந்து எட்டு கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள திம்மாபுரம் என்னும் சிறிய கிராமத்தில் தேசிய நெடுஞ்சாலையோரம் அமைந்துள்ளது. இந்தப் பண்ணை 1952 ஆம் ஆண்டு அமைக்கப்பட்டது.[1] இது 9.69 எக்டர் பரப்பளவில் அமைந்துள்ள இப்பண்ணையில், செடி வளர்க்கும் பணியில், 39 பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.

இப்பண்ணையில், உயர்ரக மா ஒட்டு செடிகளான ஜகாங்கீர், ஹீமாயுதின், இமாம்பசந்த், சேலம் பெங்களூரா, பஞ்சவர்ணம், செருகு போன்றவை தனித்தனியாக வைக்கப்பட்டு, ஒட்டு வைக்கப்படுகிறது. மேலும் இங்கு புளி, நெல்லி, மாதுளை, பலா மற்றும் வீட்டு தோட்டங்களுக்கு தேவையான கருவேப்பிலை, முருங்கை மற்றும் குரோட்டன்ஸ் எனப்படும் அலங்கார செடிகள் உற்பத்தி செய்யப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன. இங்கு உற்பத்தி செய்யப்படும் செடிகள், தனியார் நர்சரி கார்டனில் உற்பத்தி செய்யப்படும் செடிகளை காட்டிலும் தரம் வாய்ந்ததாகவும், விலை குறைவாகவும் உள்ளதால் தமிழகத்தில் கோவை, சேலம், தர்மபுரி, வேலூர், திருச்சி, நாமக்கல், கரூர் போன்ற மாவட்டங்களை சேர்ந்த விவசாயிகள், இங்கு வந்து செடிகளை வாங்கி செல்கின்றனர். ஆண்டுதோறும், 35 ஆயிரம் உயர்ரக ஒட்டு மா செடிகளும், 6,500 புளியஞ்செடிகளும், 3,500 சப்போட்டா செடிகளும், 3,000 கொய்யா செடிகளும் உற்பத்தி செய்யப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. உரிகம் ரக புளியஞ் செடிகள் கடல் ஓரம் உள்ள நிலத்தை தவிர, மற்ற அனைத்து வகை நிலங்களிலும் செழித்து வளர்ந்து அதிக லாபம் தரும் என்பதால், அதிகம் விற்பனை செய்யப்படுகிறது.[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. அசராங்கப் பழத்தோட்டம், திம்மாபுரம் (1961). சேலம் மாவட்டம். சென்னை: பாரி நிலையம். பக். 38. 
  2. "அரசு பண்ணையில் ரூ. 32 லட்சத்தில் செடிகள் விற்பனைக்கு இலக்கு". செய்தி. தினமலர் (2014 ஆகத்து 9). பார்த்த நாள் 28 செப்டம்பர் 2017.