திம்புலாகலை ரஜ மகா விகாரை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
திம்புலாகலை ரஜ மகா விகாரை

திம்புலாகலை ரஜ மகா விகாரை இலங்கையின் பண்டைத் தலைநகரங்களுள் ஒன்றான பொலநறுவைக்கு தென்கிழக்கே 16 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. திம்புலாகலை மலைத்தொடர் பாறைகளைக் குடைந்து அமைக்கப்பட்ட பல குகைகளைக் கொண்டுள்ளது. இங்குள்ள பாறைகளில் பல பிராமிக் கல்வெட்டுக்களும் காணப்படுகின்றன. மத்திய காலத்தைச் சேர்ந்த இங்குள்ள துறவி வாழிடங்களும், மிகப்பழங்காலத்தைச் சேர்ந்த புனித இருப்பிடங்களும் சில பெறுமதியான சுவரோவியப் பகுதிகளைக் கொண்டுள்ளன. பொலநறுவை இராச்சியக் காலத்துக்குப் பின்னர் கைவிடப்பட்ட இந்தப் பௌத்த துறவிமடம், கித்தலாகம் சிறீ சீலங்கார தேரரின் முயற்சிகளால் 1950களில் திருத்தியமைக்கப்பட்டது. இவர் 1995ல் இறக்கும்வரை இவ்விகாரையின் தலைமைக் குருவாக இருந்தார்.[1][2]

மேற்கோள்கள்[தொகு]

  1. Punchihewa , Gamini G. (6 April 2008). "Life and times of Ven. Kitalagama Seelalankara Thera". Sunday Observer. பார்த்த நாள் 28 June 2014.
  2. Kulatunga , K.M.H.C.B. (26 May 2013). "Dimbulagala Hamuduruvo sacrificed his life for nation". Sunday Observer. பார்த்த நாள் 28 June 2014.