திம்பிள் சோபடே
திம்பிள் சோபடே (டிம்பிள் சோபடே) | |
---|---|
பிறப்பு | புனே, மகாராட்டிரம், இந்தியா |
தேசியம் | இந்தியர் |
மற்ற பெயர்கள் | திம்பிள் சோப்ரா, திம்பிள் சோப்டே |
பணி | நடிகை |
செயற்பாட்டுக் காலம் | 2011–முதல் |
திம்பிள் சோபடே (Dimple Chopade) என்பவர் ஓர் இந்திய நடிகை. இவர் தெலுங்கு, கன்னடம், தமிழ்த் திரைப்படங்களில் நடித்து வருகிறார்.[1][2]
இளமை
[தொகு]திம்பிள் இந்தியாவின் மகாராட்டிர மாநிலம் புனேவில் பிறந்தார். புனேவில் உள்ள சிம்பையாசிசு சர்வதேசப் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றார்.[1] இவர் குதிரைச் சவாரி, மல்லர் கம்பம் ஆகியவற்றைக் கற்றுக்கொண்டார்.[1]
தொழில்
[தொகு]புனே திரைப்பட நிறுவனத்தில் திரைப்பட உருவாக்கத்தில் ஒரு குறுகிய படிப்பை முடித்த பிறகு, டிம்பிள், மராத்தி நாடக அரங்கில் தனது முயற்சியை மேற்கொண்டார். இவருக்கு 18 வயதாக இருந்தபோது ஒரு கன்னடப் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.[1] அந்தப் படம் சிகிமுத்து இன்னும் வெளியாகவில்லை என்றாலும், மேலும் நான்கு கன்னடப் படங்களில் நடித்தார். இவரது முதல் திரைப்படம் 2011-இல் வெளியான கோட் ஆகும்.[3]
சந்தீப் கிசன் கதாநாயகனாக நடித்த 'யாருடா மகேஷ்' படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார்.[4] இவர் மோகனுடன் கன்னடப் படமான நந்தாராவில் நடித்துள்ளார்.[5][6]
திரைப்படவியல்
[தொகு]ஆண்டு | திரைப்படம் | கதாபாத்திரம் | மொழி | குறிப்புகள் |
---|---|---|---|---|
2011 | கோட் | கன்னடம் | திம்பிள் சோப்ராவாக | |
2013 | யாருடா மகேஷ் | சிந்தியா | தமிழ் | |
காதல் | அனு | தெலுங்கு | ||
சத்ரு (2013 திரைப்படம்) | கன்னடம் | |||
சிகி முத்து | ||||
2014 | பிஸ்கெட் | தீக்ஷா | தெலுங்கு | |
கிரீன் சிக்னல் | மீரா | |||
கல்கண்டு | கார்த்திகா | தமிழ் | ||
2015 | துங்கபத்ரா | கௌரி | தெலுங்கு | |
ஜெயிக்கிர குதிர | தமிழ் | |||
2016 | கிருஷ்ணாஷ்டமி | பிரியா | தெலுங்கு |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 1.2 1.3 Gupta, Rinku (23 April 2013). "I want to do an action flick: Dimple Chopade". The New Indian Express. Archived from the original on 18 September 2013. Retrieved 24 July 2013.
- ↑ "Prajwal happy about Kote". Sify. 11 February 2011. Archived from the original on 12 February 2011. Retrieved 24 July 2013.
- ↑ "Dimple wants more offers in South". Sify. 14 February 2011. Archived from the original on 11 October 2014. Retrieved 24 July 2013.
- ↑ "Dimple Chopade debuts in Tamil". Deccan Chronicle. 17 January 2013. Archived from the original on 9 October 2013. Retrieved 2 September 2013.
- ↑ "Red Carpet Reels back with Kokila Mohan's 'Nanthara'". CNN-IBN. Archived from the original on 8 October 2014.
- ↑ "Nanthara Ready". Indiaglitz.com.