திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதவி துறப்பு, 2009

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஈழத் தமிழர்கள் மீது இலங்கை அரசு நடாத்தும் இன அழிவுக்கு எதிராகவும் அதற்கு இந்திய அரசு வழங்கிய படைத்துறை தொழில்நுட்ப உதவிக்கு எதிராகவும் திமுக சேர்த 13 நாடாளுமன்ற உறுப்பினர்கள் அக்டோபர் 18, 2008 அன்று பதவி விலகல் கடிதத்தை கருணாநிதியிடம் வழங்கினார்கள்.. இதற்கு முன்னதாக திமுகவின் இந்திய நாடாளுமன்ற மேலவை உறுப்பினரும், தமிழ்நாடு முதல்வர் கருணாநிதியின் மகளுமான கனிமொழி கருணாநிதி பதவி விலகல் கடிதத்தை கருணாநிதியிடம் வழங்கினார். [1]

இந்த பதவி துறப்பு கடிதம் சபாநாயகரிடம் கையளிக்கப்பட்ட பின்னரே உறுதி பெறும் என்பது குறிக்கத்தக்கது. பதவி விலகல் கடிதம் சபாநாயகரிடம் கையளிக்கப்படாததால் அவர்கள் பதவி விலகல் நடைபெறவில்லை.

பதவி விலகல் முடிவில் மாற்றம்[தொகு]

திமுக-வின் மக்களவை உறுப்பினர் பதவி விலகல் முடிவை அடுத்து இந்தியாவின் வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி திமுக தலைவரும் தமிழக முதல்வருமான கருணாநிதியை அவரது இல்லத்தில் சந்தித்து பேசியதைத் தொடர்ந்து கருணாநிதி மக்களவை உறுப்பினர் பதவி விலகல் முடிவை மாற்றிக்கொண்டார். தன்னால் ஆளும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசுக்கு எந்த சிக்கலும் வராது என்று கருணாநிதி உறுதி கூறியதாக பிரணாப் முகர்ஜி கூறினார். [2]

மேற்கோள்கள்[தொகு]

  1. Tamil Nadu MPs hand in resignation letters over S.Lanka
  2. http://www.indianexpress.com/news/dmk-will-not-precipitate-crisis-in-upa-karunanidhi/378527/

வெளி இணைப்புகள்[தொகு]