உள்ளடக்கத்துக்குச் செல்

திமிலைத்துமிலன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
திமிலைத்துமிலன்
பிறப்புசின்னயா கிருஷ்ணபிள்ளை
தேசியம்இலங்கைத் தமிழர்
அறியப்படுவதுவிரிவுரையாளர் , ஈழத்து எழுத்தாளர்

திமிலைத்துமிலன் (சின்னயா கிருஷ்ணபிள்ளை) ஈழத்துத் தமிழ் எழுத்தாளர். மூத்த கவிஞர். சிறந்த சிறுகதை, புதின எழுத்தாளர், ஓவியர், ஆய்வாளர், நாடகாசிரியர். இவர் மட்டக்களப்பு ஆசிரிய கலாசாலையில் பயிற்சி பெற்றுப் பட்டம் பெற்று அங்கேயே நீண்ட காலம் விரிவுரையாளராகக் கடமையாற்றி ஓய்வுபெற்றவர். இதுவரை 15 நூல்களை வெளியிட்டுள்ளார்.

குடும்பவிபரம்[தொகு]

இலங்கையில் மட்டக்களப்பில் திமிலைத்தீவில் பிறந்தவர். இவர் காலஞ்சென்ற கவிஞர்களான திமிலை மகாலிங்கம், திமிலைக் கண்ணன் ஆகியோரின் சகோதரர். திமிலைத் துமிலன் திமிலைத்தீவு புதூர் அரசினல் பள்ளிக்கூடத்தில் ஆசிரியராகப் பணியாற்றியவர்.[1]

விருதுகளும் பட்டங்களும்[தொகு]

இவரது கவித் திறனுக்காக இவர் பல பட்டங்களையும், விருதுகளையும் பெற்றுள்ளார். கவிமணி, கவியரசு, தமிழ் ஒளி, கவிதல பாஸ்கரன், கலாபூஷணம் ஆளுநர் விருது, கலைக்கழக விருது என்பன அவற்றுட் சிலவாகும். இவரது வழி தவறியவள் என்ற கவிதை சென்னை குழந்தை எழுத்தாளர் சங்கம் 1959 இல் நடத்திய குழந்தைக் கவிதைப் போட்டியில் முதற் பரிசு பெற்றது.[1] ஆனந்த விகடன் நடத்திய கவிதைப் போட்டியில் முதற் பரிசு பெற்றுள்ளார். இலங்கையில் நடைபெற்ற பல கவிதைப் போட்டிகளில் பல பரிசுகளைப் பெற்றுள்ளார். இவரது கவித்துறை ஆற்றலுக்காக 2009 இல் கிழக்குப் பல்கலைக்கழகம் இவருக்கு இலக்கிய கலாநிதிப் பட்டம் வழங்கிக் கெளரவித்தது. கனடியத் தமிழ் எழுத்தாளர் ஒன்றியம் 2009 நவம்பர் 9 இல் நிகழ்த்திய இவரது பவள விழாவிலே இவருக்கு செந்தமிழ்க் கவிமாமணி பட்டம் வழங்கிக் கெளரவித்தது.

ஓவியம்[தொகு]

இவர் ஈழத்துச் சஞ்சிகைகள் பலவற்றில் ‘கிருஷ்ணா’ என்ற பெயரில் எண்ணற்ற ஓவியங்களை வரைந்துள்ளார். வீரகேசரியில் 1950களில் தாரா என் தங்கை என்ற கவிதைச் சித்திரத் தொடர்கதையை வரைந்துள்ளார். கண்ணாடியில் இவர் வரைந்த ஓவியங்களைக் கொண்ட கண்காட்சி ஒன்று மட்டக்களப்பு ஆசிரிய கலாசாலையில் நடைபெற்றது.

புனைபெயர்கள்[தொகு]

வெளிவந்த நூல்கள்[தொகு]

 • நீரர மகளிர்
 • கொய்யாக்கனிகள்
 • நெஞ்சம் மலராதோ?
 • அழகுமுல்லை
 • மஞ்சுநீ மழைமுகில் அல்ல
 • எல்லம் எங்கள் தாயகம்
 • முத்தொள்ளாயிரம்
 • அணில்வால்
 • யாப்பும் அணியும்
 • தமிழ் இலக்கியம் கற்பித்தல்
 • திமிலைத்துமிலன் கவிதைகள் - காதல்
 • திமிலைத்துமிலன் கவிதைகள் - சமூகம்
 • பாவலர் ஆகலாம்
 • கருமணியிற் பாவாய்
 • ஈழத்துக் கல்விமரபில் எண்ணெய்ச் சிந்து

மேடையேற்றிய நாடகங்கள்[தொகு]

 • முத்தொள்ளாயிரம்
 • ஈடிபஸ்

மேற்கோள்கள்[தொகு]

 1. 1.0 1.1 "திமிலைத்துமிலனுக்கு தங்கப் பதக்கம்". ஈழநாடு. 5 டிசம்பர் 1959. 
தளத்தில்
திமிலைத்துமிலன் எழுதிய
நூல்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=திமிலைத்துமிலன்&oldid=3035300" இலிருந்து மீள்விக்கப்பட்டது