திமசுக்கு ஆளுநரகம்

ஆள்கூறுகள்: 33°30′47″N 36°17′31″E / 33.513°N 36.292°E / 33.513; 36.292
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
டமாஸ்கஸ் ஆளுநரகம்
مُحافظة دمشق
ஆளுநரகம்
சிரியாவில் டமாஸ்கசின் அமைவிடம்
சிரியாவில் டமாஸ்கசின் அமைவிடம்
ஆள்கூறுகள் (டமாஸ்கஸ்): 33°30′47″N 36°17′31″E / 33.513°N 36.292°E / 33.513; 36.292
நாடுசிரியா சிரியா
தலைநகரம்டமாஸ்கஸ்
அரசு
 • GovernorAdel al-Olabi
மக்கள்தொகை (2010 est.)
 • மொத்தம்1,711,000
நேர வலயம்கி.ஐ.நே. (ஒசநே+2)
 • கோடை (பசேநே)கி.ஐ.கோ.நே. (ஒசநே+3)
ஐ.எஸ்.ஓ 3166 குறியீடுSY-DI
மொழிகள்அரபு மொழி

திமிஷ்கு கவர்னரேட் (Damascus Governorate, அரபு மொழி: مُحافظة دمشقMuḥāfaẓat Dimashq ) என்பது சிரியாவின் பதினான்கு ஆளுநரகங்களில் (மாகாணங்களில்) ஒன்றாகும். இது ரிஃப் டிமாஷ்க் ஆளுநரகத்தால் முழுமையாக சூழப்பட்டுள்ளது. இது சிரியாவின் தலைநகரான திமிஷ்கு நகரம் மற்றும் யர்மௌக் முகாமின் புறநகர்ப் பகுதிகளை மட்டுமே கொண்டுள்ளது.

ஆளுநரகத்தின் பரப்பளவு 107 கிமீ 2 ஆகும். இது திமிஷ்கு நகரம் மற்றும் யர்மௌக் முகாம் ஆகியவற்றை உள்ளடக்கியது. இதன் மக்கள் தொகை 1,711,000 ஆகும்.

நிலவியல்[தொகு]

திமிஷ்கு ஒரு பீடபூமியின் முக்கிய இடத்தில் உள்ளது. இது கடல் மட்டத்திலிருந்து 680 மீ (2,230) உயரத்தில் உள்ளது. மேலும் இது மத்தியதரைக் கடலில் இருந்து 80 கிமீ (50 mi) தொலைவி்ல் உள்ளது. ஆண்டி லெபனான் மலைகளில் உருவாகும பரடா ஆறானது இப்பகுதிக்கு நீர் வழங்குகிறது. சிரியாவிற்கும் லெபனானுக்கும் இடையிலான எல்லையாக உள்ள ஆண்டி லெபனான் மலைகள், மத்திய தரைக்கடல் கடலில் இருந்து வரும் காற்றைத் தடுத்து மழை பெய்விக்கிறது. இதனால் திமிஷ்கு பகுதி மழை மறைவு பிரதேசமாகி சில நேரங்களில் வறட்சிக்கு ஆளாகிறது. என்றாலும், பண்டைய காலங்களில் இது பராடா நதியால் வளம்பெற்றது. மலையில் பனி உருகுவதன் மூலம் வரும் மலை ஓடைகளிலிருந்து இந்த ஆறு நீர்பெறுகிறது. திமிஷ்கு நகரம் கௌட்டாவால் சூழப்பட்டுள்ளது, இது ஒரு நண்செய் வேளாண் நிலமாகும். அங்கு பல வகையான காய்கறிகள், தானியங்கள், பழங்கள் பண்டைய காலங்களிலிருந்து பயிரிடப்பட்டு வருகின்றது.

ஆளுநரகம் 107 கிமீ 2, பரப்பளவைக் கொண்டுள்ளது. இதில் 79 கிமீ 2 நகர்ப்புறமாகும் (திமிஷ்கு 77, யர்மௌக் முகாம் 2), மீதமுள்ளவை காசியோன் மலைப்பகுதி ஆகும்.

காலநிலை[தொகு]

அண்டி லெபனான் மலைகளினால் மழை மறைவு பிரதேச [1] விளைவு மற்றும் கடல் நீரோட்டங்களின் காரணமாக திமிஷ்கில் கோப்பென் காலநிலை வகைப்பாட்டில் குளிர் பாலைவன காலநிலை ( BWk ) நிலவுகிறது [2] . குறைந்த ஈரப்பதத்துடன் கோடை காலம் வறண்டு வெப்பமாக இருக்கும். குளிர்காலம் குளிர்ச்சியாகவும் ஓரளவு மழையாகவும் இருக்கும்; பனிப்பொழிவு குறைவாக உள்ளது. ஆண்டு மழையளவு 130 mm (5 அங்) ஆகும். மழையானது அக்டோபர் முதல் மே வரை பொழிகிறது.

தட்பவெப்ப நிலைத் தகவல், Damascus (டமாஸ்கஸ் சர்வதேச விமான நிலையம்) 1981–2010
மாதம் சன பிப் மார் ஏப் மே சூன் சூலை ஆக செப் அக் நவ திச ஆண்டு
பதியப்பட்ட உயர்ந்த °C (°F) 24.0
(75.2)
29.0
(84.2)
34.4
(93.9)
38.4
(101.1)
41.0
(105.8)
44.8
(112.6)
46.0
(114.8)
44.6
(112.3)
42.0
(107.6)
37.8
(100)
31.0
(87.8)
25.1
(77.2)
46.0
(114.8)
உயர் சராசரி °C (°F) 12.6
(54.7)
14.5
(58.1)
19.0
(66.2)
24.7
(76.5)
30.1
(86.2)
34.6
(94.3)
37.0
(98.6)
36.8
(98.2)
33.9
(93)
28.1
(82.6)
20.1
(68.2)
14.3
(57.7)
25.5
(77.9)
தினசரி சராசரி °C (°F) 6.1
(43)
7.7
(45.9)
11.4
(52.5)
16.2
(61.2)
20.8
(69.4)
25.0
(77)
27.3
(81.1)
27.0
(80.6)
24.0
(75.2)
19.0
(66.2)
12.1
(53.8)
7.5
(45.5)
17.0
(62.6)
தாழ் சராசரி °C (°F) 0.7
(33.3)
1.9
(35.4)
4.3
(39.7)
7.9
(46.2)
11.4
(52.5)
15.0
(59)
17.9
(64.2)
17.7
(63.9)
14.4
(57.9)
10.3
(50.5)
4.8
(40.6)
1.7
(35.1)
9.0
(48.2)
பதியப்பட்ட தாழ் °C (°F) −12.2
(10)
−12.0
(10)
−8.0
(18)
−7.5
(18.5)
0.6
(33.1)
4.5
(40.1)
9.0
(48.2)
8.6
(47.5)
2.1
(35.8)
-3.0
(26.6)
−8.0
(18)
−10.2
(13.6)
−12.2
(10)
பொழிவு mm (inches) 25.0
(0.984)
26.0
(1.024)
20.0
(0.787)
7.0
(0.276)
4.0
(0.157)
1.0
(0.039)
0.0
(0)
0.0
(0)
0.3
(0.012)
6.0
(0.236)
21.0
(0.827)
21.0
(0.827)
131.3
(5.169)
ஈரப்பதம் 76 69 59 50 43 41 44 48 47 52 63 75 56
சராசரி பொழிவு நாட்கள் 8 8 6 3 2 0.1 0.1 0.1 0.2 3 5 7 42.5
சராசரி பனிபொழி நாட்கள் 1 1 0.1 0 0 0 0 0 0 0 0 0.2 2.3
சூரியஒளி நேரம் 164.3 182.0 226.3 249.0 322.4 357.0 365.8 353.4 306.0 266.6 207.0 164.3 3,164.1
Source #1: Pogoda.ru.net[3]
Source #2: NOAA (sunshine hours, 1961–1990)[4]

குறிப்புகள்[தொகு]

  1. Tyson, Patrick J. (2010). "SUNSHINE GUIDE TO THE DAMASCUS AREA, SYRIA" (PDF). www.climates.com. பார்க்கப்பட்ட நாள் 26 November 2010. {{cite web}}: Invalid |ref=harv (help)
  2. M. Kottek; J. Grieser; C. Beck; B. Rudolf; F. Rubel (2006). "World Map of the Köppen-Geiger climate classification updated". Meteorol. Z. 15: 259–263. doi:10.1127/0941-2948/2006/0130. http://koeppen-geiger.vu-wien.ac.at/pics/kottek_et_al_2006.gif. பார்த்த நாள்: 1 August 2013. 
  3. "The Climate of Damascus 1981–2010" (in Russian). Weather and Climate (Погода и климат). பார்க்கப்பட்ட நாள் 26 April 2017.{{cite web}}: CS1 maint: unrecognized language (link)
  4. "Damascus INTL Climate Normals 1961–1990". National Oceanic and Atmospheric Administration. பார்க்கப்பட்ட நாள் 26 April 2017.
"https://ta.wikipedia.org/w/index.php?title=திமசுக்கு_ஆளுநரகம்&oldid=3085688" இலிருந்து மீள்விக்கப்பட்டது