உள்ளடக்கத்துக்குச் செல்

திப்ருகர் ராஜ்தானி விரைவுவண்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
திப்ருகர் புதுதில்லி ராஜ்தானி விரைவுவண்டி
Dibrugarh - New Delhi Rajdhani Express
கண்ணோட்டம்
வகைராஜ்தானி விரைவுவண்டி
நிகழ்நிலைஇயக்கத்தில்
நிகழ்வு இயலிடம்அசாம், நாகாலாந்து, மேற்கு வங்காளம், பீகார், உத்தரப் பிரதேசம், டெல்லி
நடத்துனர்(கள்)வடக்கு ரயில்வே
வழி
தொடக்கம்திப்ருகர் நகரம்
முடிவுபுது டெல்லி
ஓடும் தூரம்(கான்பூர் வழியாக) 2444 கி.மீ, (லக்னோ வழியாக) 2461 கி.மீ
சராசரி பயண நேரம்37 மணி 35 நிமிடங்கள் (12423 வண்டிக்கு) , 38 மணி 50 நிமிடங்கள்(12424 வண்டிக்கு)
சேவைகளின் காலஅளவுநாள்தோறும்
பயணச் சேவைகள்
வகுப்பு(கள்)AC 1st Class, AC 2 Tier, AC 3 Tier
இருக்கை வசதிAvailable
படுக்கை வசதிAvailable
Auto-rack arrangementsAvailable
உணவு வசதிகள்Available (included in the ticket)
காணும் வசதிகள்LHB Coaches
சுமைதாங்கி வசதிகள்Available
தொழில்நுட்பத் தரவுகள்
பாதை1,676 மிமீ (5 அடி 6 அங்)
வேகம்130 km/h (81 mph) maximum
65 km/h (40 mph), excluding halts
வழிகாட்டுக் குறிப்புப் படம்

திப்ருகர் ராஜ்தானி விரைவுவண்டி, இந்திய ரயில்வேயினால் செயல்படுத்தப்படும் ராஜ்தானி விரைவுவண்டி ரயில்களின் குழுமத்தில் ஒரு முன்னோடியாகும். இது இந்தியாவின் தலைநகரான புது டெல்லியினை, குவஹாத்தி, திப்ருகர் ஆகிய நகரங்களுடன் இணைக்கிறது.

கோச் விவரங்கள்

[தொகு]

பின்வரும் அமைப்பின்படி ராஜ்தானி எக்ஸ்பிரஸின் கோச்சுகள் அமைக்கப்பட்டுள்ளன.

Loco 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 14 15 16 17 18 19 20 21
EOG H1 PC1 A1 A2 A3 A4 PC2 B1 B2 B3 B4 B5 B6 B7 B8 B9 B10 B11 EOG

இந்த ரயிலுக்குப் பயன்படுத்தப்படும் எஞ்சின்:

இதேபோன்றே திரும்பி வரும்போதும் செயல்படுத்தப்படுகிறது. மூன்று ராஜ்தானி வண்டிகளில் இந்த திப்ருகர் ராஜ்தானி வண்டியையே பயணிகள் பெரும்பாலும் பயன்படுத்துகின்றனர். இதன் காரணமாக இந்த ரயிலுக்கான போட்டியும் மக்களிடம் சற்று அதிகமாகவே நிலவுகிறது. புது டெல்லியில் இருந்து திப்ருகர் செல்வதற்கான சிறந்த ரயில்சேவை இதுவாகும். இந்த ரயில் புதிய ரேக்குகளில் LHB உதவியுடன் இயங்குகிறது.

12435 / 12436 திப்ருகர் ராஜ்தானி எக்ஸ்பிரஸ்

[தொகு]

12435 / 12436 என்ற எண் கொண்ட வண்டி, ஞாயிறு, வியாழன் என வாரத்திற்கு இரண்டு நாட்கள் புது டெல்லியில் இருந்து திப்ருகர் நகரத்திற்கும் (12436), திங்கள், வெள்ளிக் கிழமைகளில் திப்ருகர் நகரத்திலிருந்து புது டெல்லிக்கும் (12435) செயல்படுகிறது. புது டெல்லியில் இருந்து திப்ருகர் நகரத்திற்கு இடைப்பட்ட தொலைவான 2503 கிலோ மீட்டரை, 44 மணிநேரமும் 45 நிமிடங்களும் பயணித்து இலக்கை சென்றடைகிறது. அதேபோல் திரும்பி வரும்போது திப்ருகர் நகரத்தில் இருந்து புது டெல்லிக்கு 42 மணிநேரமும் 25 நிமிடங்களும் பயணித்து 2502 கிலோ மீட்டரைக் கடக்கிறது. இந்த ரயில், இந்திய ரயில்வே அமைப்பின் வடக்கு ரயில்வேயினைச் சேர்ந்தது.

வண்டி எண் 12423 / 12424 ரயிலைக் காட்டிலும் இந்த ரயிலின் பயண நேரம் ஆறு மணி நேரங்கள் அதிகமாவதால் பயணிகள் இந்த ரயிலை குறைவாகவே விரும்புகின்றனர்.[1] மேலும், 12423 / 12424 என்ற வண்டியுடன் ஒப்பிட்டுப் பார்க்கும்போது அதிவேக ரயில்பாதை வழித்தடங்களில் இது செல்ல முடியாததால் இதன் வேகம் அந்த வண்டியை விடக் குறைவு. அத்துடன் இதன் பயணம் நேரம், புர்வோட்டர் சம்பார்க் க்ராண்டி எக்ஸ்பிரஸை விடவும் அதிகம். இருப்பினும், ராஜ்தானி எக்ஸ்பிரஸின் ரயில் குழுமத்தில் இருப்பதால் மதிப்புமிக்கதாகக் கருதப்படுகிறது.

இதில் பயன்படுத்தப்படும் எஞ்சின் :

  • புது டெல்லி – பரௌனி: துக்லகபாத்திலிருந்து WDM-3A டீசல் எஞ்சின் நிறுத்தம்
  • பரௌனி – திப்ருகர்: சிலிகுரியிலிருந்து WDP-4 அல்லது WDP-4B டீசல் எஞ்சின் நிறுத்தம்

இதேபோன்றே திரும்பி வரும்போதும் இதே எஞ்சின் வகைகளைத்தான் பயன்படுத்துகிறது. இது ஒருதிசை ரயில் மட்டுமே. வாரத்திற்கு இருமுறை புது டெல்லியில் இருந்து திப்ருகர் நகரத்திற்கு இயக்கப்படுகிறது, அதேபோல் திப்ருகரிலிருந்து புது டெல்லிக்கும் இயக்கப்படுகிறது.[2]

12235 / 12236 திப்ருகர் ராஜ்தானி எக்ஸ்பிரஸ்

[தொகு]

வண்டி எண் 12235 ரயிலானது, திப்ருகருக்கும் புது டெல்லிக்கும் இடைப்பட்ட தூரத்தினை (2501 கிலோ மீட்டர்) 42 மணி நேரத்தில் கடக்கிறது. வண்டி எண் 12236 ரயிலானது, புது டெல்லிக்கும் திப்ருகருக்கு இடைப்பட்ட தூரத்தினை (2502 கிலோ மீட்டர்) 44 மணி நேரத்தில் கடக்கிறது. இந்த ரயில், இந்திய ரயில்வே அமைப்பின் வடக்கு ரயில்வேயினைச் சேர்ந்தது. செவ்வாய் கிழமைதோறும், காலை 9.30 மணியளவில் புது டெல்லி ரயில்நிலையத்தில் பதினாறாவது நடைமேடையில் புறப்பட்டு, திப்ருகர் ரயில்நிலையத்தின் முதலாவது நடைமேடைக்கு அருகில், வியாழக் கிழமை காலை 5.30 மணிக்கு சென்றடையும். திரும்ப வரும்போது திப்ருகரிலிருந்து முதலாம் நடைமேடையில், வியாழக் கிழமை இரவு 7.25 க்கு புறப்பட்டு புது டெல்லியில் முதலாம் நடைமேடைக்கு அருகில் மதியம் 1:45 மணிக்கு சென்றடைகிறது. இதில் பயன்படுத்தப்படும் எஞ்சின் வகை: SGUJ WDP-4/4B அல்லது LKO WDM-3A.[3]

Ghaziabad WAP-4 hauling the 12424 Dibrugarh Rajdhani express

வழியும் நிறுத்தங்களுக்கான நேரமும்

[தொகு]

இந்த தொடர்வண்டி புறப்படும் நேரமும் வழியும் பின்வருமாறு:[4]

'
எண் நிலையத்தின் பெயர்
(குறியீடு)
வரும் நேரம் புறப்படும் நேரம் நிற்கும் நேரம்
(நிமிடங்கள்)
கடந்த தொலைவு
(கி.மீ)
நாள் பாதை
1 புது டெல்லி (NDLS) தொடக்கம் 13:55 0 0 1 1
2 கான்பூர் சென்ட்ரல் (CNB) 18:34 18:39 5 440 1 1
3 அலஹாபாத் சந்திப்பு(ALD) 20:39 20:42 3 634 1 1
4 முகல்சராய் சந்திப்பு (MGS) 22:45 22:55 10 786 1 1
5 பாட்னா சந்திப்பு (PNBE) 02:00 02:10 10 998 2 1
6 பரவுனி சந்திப்பு (BJU) 04:25 04:45 20 1108 2 1
7 நவுகச்சியா (NNA) 06:30 06:32 2 1231 2 1
8 கட்டிஹார் சந்திப்பு (KIR) 07:40 07:50 10 1288 2 1
9 கிஷன்கஞ்சு (KNE) 09:10 09:12 2 1384 2 1
10 புது ஜல்பைகுரி (NJP) 10:45 11:05 20 1471 2 1
11 புது கூச் பேஹர் (NCB) 13:10 13:12 2 1597 2 1
12 கோக்ராஜார் (KOJ) 14:23 14:25 2 1695 2 1
13 புது போங்கைகான் (NBQ) 15:00 15:02 2 1722 2 1
14 குவஹாத்தி (GHY) 17:20 17:45 25 1879 2 1
15 லம்டிங்க் சந்திப்பு (LMG) 21:00 21:02 2 2060 2 1
16 திபு (DPU) 21:33 21:35 2 2092 2 1
17 திமாப்பூர் (DMV) 22:15 22:20 5 2129 2 1
18 மரியானி சந்திப்பு (MXN) 00:40 00:50 10 2237 3 1
19 புது தின்சுகியா சந்திப்பு (NTSK) 03:30 03:40 10 2393 3 1
20 திப்ருகர் நகரம் (DBRT) 04:50 முடிவு 0 2438 3 1

குறிப்புகள்

[தொகு]
  1. "New-delhi Dibrugarh Town Rajdhani Express". Indiarailinfo.
  2. "12435/Dibrugarh Town-New Delhi Rajdhani Express". Indiarailinfo.
  3. "12235/Dibrugarh - New Delhi Rajdhani Express". Indiarailinfo.
  4. "Dibrugarh Rajdhani Express". Cleartrip. Archived from the original on 2015-05-27. பார்க்கப்பட்ட நாள் 2015-01-13.