உள்ளடக்கத்துக்குச் செல்

திப்பு சுல்தானின் கோடைக்கால அரண்மனை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அரண்மனையின் முன்தோற்றம்
பெங்களூரு கோட்டையில் உள்ள பழைய அரண்மனையின் தோற்றம், 1870இல்,ஆல்பர்ட் தாமஸ் பென் எடுத்த புகைப்படம்.
பெங்களூரில் உள்ள திப்பு அரண்மனையில் காணப்படும் பிரித்தானிய காலத்திய வேலைப்பாடு - ராபர்ட் ஹோம் (1752-1834)

திப்பு சுல்தானின் கோடைகால அரண்மனை (Tipu Sultan's Summer Palace) என்பது இந்தியாவின் பெங்களூரில் அமைந்துள்ளது. இது, மைசூர் ஆட்சியாளர் திப்பு சுல்தானின் கோடைகால இல்லமாக இருந்தது. மேலும் இந்தோ-இசுலாமிய கட்டிடக்கலைக்கு ஒரு எடுத்துக்காட்டாக திகழ்கிறது. ஹைதர் அலி பெங்களூர் கோட்டையின் நிலபரப்பில் இதன் கட்டுமானத்தைத் தொடங்கினார், மேலும் இது 1791 இல் திப்பு சுல்தானின் ஆட்சியில் நிறைவடைந்தது. நான்காவது ஆங்கிலோ-மைசூர் போரில் திப்பு சுல்தான் இறந்த பிறகு, பிரித்தானிய நிர்வாகம் 1868 இல் அட்டாரா கச்சேரிக்குச் செல்வதற்கு முன்பு அரண்மனையை அதன் செயலகத்திற்காகப் பயன்படுத்தியது. இன்று இந்திய தொல்பொருள் ஆய்வு மையம் பழைய பெங்களூரின் மையத்தில் கலாசிபல்யம் பேருந்து நிலையத்திற்கு அருகில் அமைந்துள்ள இந்த அரண்மனையை சுற்றுலாத் தலமாக பராமரிக்கிறது.

அரண்மனியின் அமைப்பு

[தொகு]

இந்த அரண்மணை முற்றிலும் தேக்கு மரத்தை பயன்படுத்தி கட்டப்பட்டது. மேலும், தூண்கள், வளைவுகள் மற்றும் நீண்ட தாழ்வாரங்களினால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. திப்பு சுல்தான் தனது தர்பாரை (நீதிமன்றம்) மேல் மாடியின் கிழக்கு மற்றும் மேற்கு நோக்கிய முகப்புகளில் இருந்து நடத்தியதாக நம்பப்படுகிறது. முதல் தளத்தின் மூலைகளில் நான்கு சிறிய அறைகள் உள்ளன. அவை ஜெனானா குவார்ட்டர்ஸ் எனப்படுகின்றன.[1] அரண்மனையின் சுவர்களில், அழகிய மலர் உருவங்கள் அலங்கரிக்கும் விதமாக வரையப்பட்டுள்ளது.

தங்க சிம்மாசனம்

[தொகு]

திப்பு சுல்தானால் காட்சிப்படுத்தப்பட்ட பெரிய சிம்மாசனத்தின் ஓவியத்தையும் இந்த தளம் கொண்டுள்ளது. இது, தங்கத் தகடுகள் மற்றும் விலைமதிப்பற்ற மரகதக் கற்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. திப்பு, பிரித்தானிய இராணுவத்தை முற்றிலுமாக தோற்கடிக்கும் வரை அதைப் பயன்படுத்த மாட்டேன் என்று சபதம் செய்திருந்தார். திப்பு சுல்தானின் மரணத்திற்குப் பிறகு, ஆங்கிலேயர்கள் இந்த சிம்மாசனத்தை அப்புறப்படுத்தி, அதன் பாகங்களை ஏலம் எடுத்தனர்.

    

அருங்காட்சியகம்

[தொகு]

திப்பு சுல்தான் மற்றும் அவரது நிர்வாகத்தின் பல்வேறு சாதனைகளை வெளிப்படுத்தும் ஒரு சிறிய அருங்காட்சியகமாக தரை தளத்தில் உள்ள அறைகள் மாற்றப்பட்டுள்ளன. அக்கால மக்கள் மற்றும் இடங்களின் புதிதாக செய்யப்பட்ட உருவப்படங்கள் உள்ளன. லண்டனில் உள்ள விக்டோரியா மற்றும் ஆல்பர்ட் அருங்காட்சியகத்தில் இருக்கும் திப்புவின் புலியின் பிரதி உள்ளது. திப்பு சுல்தானின் உடைகள் மற்றும் அவரது கிரீடம் வெள்ளி மற்றும் தங்க பீடங்களில் உள்ளன. ஹைதர் அலிக்கு ஒரு ஜெனரல் கொடுத்த வெள்ளிப் பாத்திரங்களும் காட்சிப் படுத்தப்பட்டுள்ளது.

பராமரிப்பு

[தொகு]

கர்நாடக அரசின் தோட்டக்கலைத் துறை இந்த அரண்மனைக்கு முன்னால் உள்ள பகுதியை ஒரு தோட்டமாகவும், நீண்ட புல்வெளியாகவும் பராமரிக்கிறது.

படத்தொகுப்பு

[தொகு]

ஜேம்ஸ் ஹண்டரின் ஓவியங்கள்

[தொகு]

ஜேம்ஸ் ஹண்டர் என்பவர், ராயல் பீரங்கி படையில் லெப்டினெண்டாக பணியாற்றினார். இவர் ஒரு இராணுவ ஓவியர் ஆவார். இவரது ஓவியங்கள் இராணுவ மற்றும் அன்றாட வாழ்க்கையின் அம்சங்களை சித்தரித்தன. ஹண்டர் பிரித்தானிய இந்திய ராணுவத்தில் பணியாற்றினார். மேலும், திப்பு சுல்தான் பிரச்சாரங்களில் பங்கேற்றார்.

பெங்களூர், மைசூர், ஓசூர், காஞ்சீபுரம், சென்னை, ஆற்காடு, ஸ்ரீபெரும்புதூர், உள்ளிட்ட தென்னிந்தியாவின் வெவ்வேறு நிலப்பரப்புகளை ஹண்டர் வரைந்துள்ளார். இந்த ஓவியங்கள் 1802-05 க்கு இடையில் லண்டனின் எட்வர்ட் ஓர்ம் அவர்களால் வெளியிடப்பட்ட 'வண்ண செதுக்கல்களால் அலங்கரிக்கப்பட்ட பண்டைய மற்றும் நவீன இந்தியாவின் சுருக்கமான வரலாறு' மற்றும் 'மைசூர் இராச்சியத்தில் உள்ள அழகிய காட்சிகள்' ஆகியவற்றில் வெளியிடப்பட்டன.[2]

ஹண்டர் இந்தியாவில் 1792 இல் இறந்தார்.[3] பெங்களூர் அரண்மனையில் உள்ள அவரது சில ஓவியங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

குறிப்புகள்

[தொகு]
  1. "Tipu Sultan Summer Palace". Trip2blr.Com. Archived from the original on 5 ஆகஸ்ட் 2019. பார்க்கப்பட்ட நாள் 18 September 2017. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  2. Hunter, James. A Street Leading To The Palace Of Bangalore. p. Plate 11. பார்க்கப்பட்ட நாள் 20 February 2015.
  3. Ebinesan, J (2006). "James Hunter's Bangalore". பார்க்கப்பட்ட நாள் 21 January 2015.

வெளி இணைப்புகள்

[தொகு]
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Tipu Sultan's Summer Palace
என்பதில் ஊடகங்கள் உள்ளன.