திபெத்திய கலை

திபெத்திய கலை (Tibetan art) 20 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதிக்கு முன்னர் உருவாக்கப்பட்ட எஞ்சியிருக்கும் திபெத்திய கலைகளில் பெரும்பாலானவை மத ரீதியானவை. தங்கா, துணி ஓவியங்கள், பெரும்பாலும் குவாச் அல்லது அலங்கார வண்ணப்பூச்சு என விவரிக்கப்படும் நுட்பத்தில்,[1] திபெத்திய பௌத்த சுவர் ஓவியங்கள், மற்றும் வெண்கலத்திலான சிறிய சிலைகள், அல்லது களிமண், ஸ்டக்கோ அல்லது மரத்தில் பெரிய சிலைகள் போன்றவை இதன் முக்கிய வடிவங்களாக உள்ளன. அவை திபெத்திய பௌத்த மத நடைமுறைக்குள் பயன்படுத்த மத நிறுவனங்கள் அல்லது பக்தியுள்ள நபர்களால் நியமிக்கப்பட்டன. மேலும் அவை பெரும்பாலும் அறியப்படாத துறவிகள் மற்றும் சாதாரண கலைஞர்களால் பெரிய பட்டறைகளில் தயாரிக்கப்பட்டன. புர்பா அல்லது சடங்கு கத்தி[2] போன்ற பல்வேறு வகையான மதம் சார்ந்தப் பொருட்கள், நேர்த்தியாக தயாரிக்கப்பட்டு ஆடம்பரமாக அலங்கரிக்கப்ட்டன. மதச்சார்பற்ற பொருள்கள், குறிப்பாக நகைகள் மற்றும் ஆடைகளும் தயாரிக்கப்பட்டன. ஆடை வடிவமைப்பில் சீன தாக்கங்கள் வலுவாக இருந்தன.[3]

ஓவிய பாணிகள்
[தொகு]இமயமலை கலை என்பது பூட்டான், நேபாளம், இலடாக்கு, காஷ்மீர் மற்றும் மங்கோலியா மற்றும் சீனாவின் அண்டை பகுதிகளின் கலைகளுடன் சேர்ந்து திபெத்திய கலைக்கான ஒட்டுமொத்த சொல்லாகும்.[4] சீன-திபெத்திய கலை என்பது திபெத்திய பாணியில் படைப்புகளைக் குறிக்கிறது. மேலும், சீனா அல்லது திபெத்தில் தயாரிக்கப்பட்ட திபெத்திய பௌத்த உருவப்படங்களுடன், பெரும்பாலும் சீன பேரரசர்களின் ஆதரவால் இவை உருவாகக்ப்பட்ட.து. கலைஞர்கள் திபெத்திய மற்றும் சீனர்களின் கலவையாக இருந்ததாகத் தெரிகிறது, நேபாளத்தைச் சேர்ந்த சில நெவாரிகளும்[5] இதில் அடங்கும். உற்பத்தி செய்யும் இடம் பெரும்பாலும் இருவருக்கும் இடையில் நிச்சயமற்றதாக இருந்தது.

பின்னணி
[தொகு]திபெத்திய மதக் கலை "கிட்டத்தட்ட நம்பமுடியாத அளவிற்கு பழமைவாதமானது" என்று விவரிக்கப்பட்டுள்ளது. இது 12 ஆம் நூற்றாண்டில் முடிவடைந்த "இந்தியாவின் பௌத்தக் கலையின் கடைசி கட்டத்தின் வடிவங்கள் மற்றும் உருவப்படங்களின் நிலைத்தன்மையை" பெருமளவில் குறிக்கிறது. இது வடகிழக்கு இந்தியாவின் பால-சென் கலை, திபெத்துக்கு ஒப்பீட்டளவில் நெருக்கமாக இருந்தது. மேலும் பீகாரில் உள்ள நாளந்தாவைச் சேர்ந்த பௌத்த அறிஞர் அதிசர் போன்ற முக்கிய நபர்களின் இருப்பிடமாக இருந்தது. இந்தியாவில் பௌத்தம் வீழ்ச்சியடைந்த பிறகு, இந்தக் காலகட்டத்திலோ அல்லது அதற்கு முந்தைய காலத்திலோ இந்திய பௌத்தக் கலைகளிலிருந்து நினைவுச்சின்ன சிற்பங்களைத் தவிர மிகக் குறைவாகவே எஞ்சியுள்ளன. மேலும் கலை வரலாற்றாசிரியர்கள் இந்த மறைந்த கலாச்சாரத்தைப் பற்றி திபெத்திய படைப்புகளிலிருந்து அதிகம் கண்டுபிடிக்க வேண்டும்.[6] பல நூற்றாண்டுகளாக திபெத்தியக் கலை மீதான பிற தாக்கங்கள் சீன மற்றும் நேபாள பௌத்தக் கலைகளிலிருந்து வந்தன.[7] 14 ஆம் நூற்றாண்டிலிருந்து சில தங்கா [8] காலகட்டங்களில் சீன ஓவியத்திலிருந்து நிலப்பரப்பு பின்னணிகள் ஏற்றுக்கொள்ளப்பட்டன. மேலும் 1700 ஆம் ஆண்டு வாக்கில் சீன அலங்கார பாணிகள் ஆதிக்கம் செலுத்தின.[9]
பொதுவாக மிக உயர்ந்த தொழில்நுட்ப திறனைக் கொண்ட வண்ணமயமான தங்கா மற்றும் சிறிய வெண்கலங்களில் (பெரும்பாலும் முலாம் பூசப்பட்ட-வெண்கல) உருவாக்கப்பட்டவை சிறந்த சாதனைகளாகக் கருதப்படுகின்றன. இவை பொதுவாக தனிப்பட்ட படைப்புகளாகும். அவை மடாலயங்களுக்குள் மட்டுமே காணப்பட்டன. மேலும் பெரும்பாலும் தியானத்திற்காக குறிப்பாக வடிவமைக்கப்பட்டன. மேலும் பொது கலைகளில் பிரார்த்தனை மண்டபங்களுக்கான பெரிய சிலைகள், திபெத்திய பண்டிகைகளின் போது தங்கா சுவர்களில் தற்காலிகமாக வைக்கப்படும் பெரிய அலங்காரத் துணிகள் மற்றும் தற்காலிக மணல் மண்டலங்கள் ஆகியவை பொதுக் கலைகளில் அடங்கும்.
இதனையும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ Effectively the same thing
- ↑ Rowland, 271
- ↑ Rowland, 271
- ↑ Guy, John. "Arts of the Greater Himalayas: Kashmir, Tibet, and Nepal." In Heilbrunn Timeline of Art History. New York: The Metropolitan Museum of Art, 2000–. online (May 2021)
- ↑ Rhie and Thurman, 277, 392
- ↑ Rowland, 268–269, 268 quoted; Kossack and Singer, 4, 11–14
- ↑ Rowland, 266–267
- ↑ Rhie and Thurman, 52, 64
- ↑ Rowland, 270
- Behrend, Kurt A., Tibet and India: Buddhist Traditions and Transformations, 2014, Metropolitan Museum of Art, ISBN 9781588395498, 1588395499, google books
- Berger, Patricia, Empire of Emptiness, Buddhist Art and Political Authority in Qing China, 2003, University of Hawaii Press, ISBN 9780824862367, google books
- Debreczeny, Karl, "Faith and Empire: An Overview", in Faith and Empire: Art and Politics in Tibetan Buddhism, 2019, Rubin Museum, New York
- "HAR", Himalayan Art Resources, education and research database and virtual museum of Tibetan art
- Jing, Anning. “Financial and Material Aspects of Tibetan Art under the Yuan Dynasty.” Artibus Asiae, vol. 64, no. 2, 2004, pp. 213–41. JSTOR
- Kossack, Stephen M, Singer, Jane Casey, Sacred Visions: Early Paintings from Central Tibet, 1998, an exhibition catalogue from The Metropolitan Museum of Art (fully available online as PDF)
- Pal, Pratapaditya (with Hugh Richardson), Art of Tibet: A Catalogue of the Los Angeles County Museum of Art Collection, 1983, Los Angeles County Museum of Art, ISBN 9780875871127
- Rhie, Marylin and Thurman, Robert (eds):Wisdom And Compassion: The Sacred Art of Tibet, 1991, Harry N. Abrams, New York (with 3 institutions), பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0810925265
- Rowland, Benjamin, The Art and Architecture of India: Buddhist, Hindu, Jain, 1967 (3rd edn.), Pelican History of Art, Penguin, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0140561021
- Schaik, Sam van, Tibet: A History, 2011, Yale University Press, ISBN 9780300154047,google books
மேலும் படிக்க
[தொகு]- Chandra, Lokesh (1996). Transcendental art of Tibet. New Delhi: International Academy of Indian Culture and Aditya Prakashan.
- von Schroeder, Ulrich. 1981. Indo-Tibetan Bronzes. (608 pages, 1244 illustrations). Hong Kong: Visual Dharma Publications Ltd. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 962-7049-01-8
- von Schroeder, Ulrich. 2001. Buddhist Sculptures in Tibet. Vol. One: India & Nepal; Vol. Two: Tibet & China. (Volume One: 655 pages with 766 illustrations; Volume Two: 675 pages with 987 illustrations). Hong Kong: Visual Dharma Publications, Ltd. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 962-7049-07-7
- von Schroeder, Ulrich. 2006. Empowered Masters: Tibetan Wall Paintings of Mahasiddhas at Gyantse. (p. 224 pages with 91 colour illustrations). Chicago: Serindia Publications. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1-932476-24-5
- von Schroeder, Ulrich. 2008. 108 Buddhist Statues in Tibet. (212 p., 112 colour illustrations) (DVD with 527 digital photographs). Chicago: Serindia Publications. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 962-7049-08-5
வெளி இணைப்புகள்
[தொகு]- [1], Tibetan Art Forms: Menluk, Khyenluk and Gardri
- Mechak Center for Contemporary Tibetan Art
- Tibetan Painting
