திபெத்திய உப்புக்கொத்தி
| திபெத்திய உப்புக்கொத்தி | |
|---|---|
| உயிரியல் வகைப்பாடு | |
| திணை: | |
| பிரிவு: | |
| வகுப்பு: | |
| வரிசை: | |
| குடும்பம்: | சாராத்ரிடே
|
| பேரினம்: | அனார்சின்கசு
|
| இனம்: | அ. அட்ரிப்ரான்சு
|
| இருசொற் பெயரீடு | |
| அனார்சின்கசு அட்ரிப்ரான்சு (வாக்ளர், 1829) | |
| வேறு பெயர்கள் | |
|
சராதிரியசு அட்ரிப்ரான்சு | |
திபெத்திய உப்புக்கொத்தி என்பது உப்புக்கொத்திப் (அனார்சின்கசு அட்ரிப்ரான்சு) பறவைக் குடும்பத்தினைச் சேர்ந்த ஒரு சிறிய பறவையாகும். இது பாமிர் மலைகள், தியான் சான், திபெத்திய பீடபூமி, தெற்கு மங்கோலியா, கிழக்கு தென்னாப்பிரிக்கா, தெற்கு, கிழக்கு, தென்கிழக்கு ஆசியா குளிர்காலத்தில் இனப்பெருக்கம் செய்கிறது.
இது முன்பு சைபீரிய (சின்ன உப்புக்கொத்தி) சிற்றினத்துடன் குறிப்பிட்டதாகக் கருதப்பட்டது. மேலும் மூன்று இது துணையினங்களை உள்ளடக்கியது. இவை: திபெத்தில் இனப்பெருக்கம் செய்யும் அ. அ. அட்ரிப்ரான்சு, பாமிர் மலைகளில் இனப்பெருக்கம் செய்யும் அ. ஆ பாமினென்சிசு, கிங்காயில் இனப்பெருக்கம் செய்யும் அ. ஆ. சுகேஃபெரி ஆகும்.[2]
2022ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட ஓர் ஆய்வில், சின்ன உப்புக்கொத்தி, "மங்கோலசு" குழு பெரிய மணல் உப்புக்கொத்தியின் சகோதரக் குழு என்றும், "அட்ரிஃப்ரான்கள்" குழு இவற்றின் சகோதர குழுவாகவும் உள்ளது என்றும் முன்மொழியப்பட்டது. எனவே சின்ன உப்புக்கொத்தி வகைப்பாட்டியலில் பிரிவுத் தேவைப்பட்டது. வகைப்பாட்டியலானார்கள் இவற்றுக்குப் புதிய விலங்கியல் பெயரினைப் பொதுவான ஆங்கிலப் பெயருடன் பரிந்துரைத்தனர்.[3]
- சைபீரிய உப்புக்கொத்தி (அனார்சின்கசு மங்கோலசு) அ. ம. மங்கோலசு, அ. ம இசுடிக்மன்னி
- திபெத்திய உப்புக்கொத்தி (அனார்சின்கசு அட்ரிபிரான்சு) அ. அ. அட்ரிபிரான்சு, அ. அ பாமினென்சிசு, அ. அ இசுகேபெரி
- பாலைவன உப்புக்கொத்தி (அனார்சின்கசு லெசுனுலால்டி) தற்போது மணல் உப்புக்கொத்தி
பன்னாட்டுப் பறவையியல் நிபுணர்கள் சங்கம் 2023ஆம் ஆண்டில் சின்ன உப்புக்கொத்தி வகைபிரித்தல், மறுபெயரை ஏற்றுக்கொண்டது. திபெத்திய உப்புக்கொத்தியினை ஒரு முழு சிற்றினமாக நிலைநிறுத்தியது.[2]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ BirdLife International (2023). "Charadrius atrifrons". IUCN Red List of Threatened Species 2023: e.T230026276A154673176. https://www.iucnredlist.org/species/230026276/154673176. பார்த்த நாள்: 12 December 2023.
- ↑ 2.0 2.1 Gill, Frank; Donsker, David, eds. (2023). "Buttonquail, thick-knees, sheathbills, plovers, oystercatchers, stilts, painted-snipes, jacanas, Plains-wanderer, seedsnipes". World Bird List. International Ornithologists' Union. Retrieved 12 December 2023.
- ↑ Wei, Chentao; Schweizer, Manuel; Tomkovich, Pavel S; Arkhipov, Vladimir Yu; Romanov, Michael; Martinez, Jonathan; Lin, Xin; Halimubieke, Naerhulan et al. (2022-03-25). "Genome-wide data reveal paraphyly in the sand plover complex ( Charadrius mongolus/leschenaultii )" (in en). Ornithology 139 (2): ukab085. doi:10.1093/ornithology/ukab085. பன்னாட்டுத் தர தொடர் எண்:0004-8038. https://academic.oup.com/auk/article/doi/10.1093/ornithology/ukab085/6527443.