திபு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை

ஆள்கூறுகள்: 25°49′42″N 93°25′29″E / 25.828347°N 93.424794°E / 25.828347; 93.424794
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
திபு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை
Diphu Medical College and Hospital cum Research Institute
ஆங்கிலத்தில் குறிக்கோளுரை
யாரும் நோயால் பாதிக்கப்படக்கூடாது
வகைமருத்துவக் கல்லூரி
உருவாக்கம்25 நவம்பர் 2019
(4 ஆண்டுகள் முன்னர்)
 (2019-11-25)
முதல்வர்மருத்துவர் சுமித்ரா ஆக்கெர்[1]
பட்ட மாணவர்கள்100
அமைவிடம், ,
782460
,
வளாகம்துணை நகரம்
சேர்ப்புசிறீமந்தா சங்கரதேவா சுகாதார அறிவியல் பல்கலைக்கழகம்
இந்திய மருத்துவக் கழகம்
இணையதளம்dmcassam.in
திபு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை is located in அசாம்
திபு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை
Location in அசாம்
திபு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை is located in இந்தியா
திபு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை
திபு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை (இந்தியா)

திபு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை (Diphu Medical College and Hospital) இந்தியாவின் அசாம் மாநிலம் திபுவில் அமைந்துள்ள மருத்துவமனையுடன் கூடிய ஒரு மருத்துவக் கல்லூரி ஆகும். [2] [3] [4] 2019 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 25 ஆம் தேதி முதல் செயல்படத் தொடங்கியது. அசாம் மாநிலத்தின் 7 ஆவது மருத்துவக் கல்லூரியான இது அசாம் மாநில சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் கீழ் செயல்படுகிறது.. இந்திய மருத்துவக் கவுன்சிலால் அங்கீகரிக்கப்பட்டு, கவுகாத்தியில் உள்ள சிறீமந்தா சங்கரதேவா சுகாதார அறிவியல் பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்டுள்ளது..

வரலாறு[தொகு]

2011 ஆம் ஆண்டு சனவரி மாதம் 19 ஆம் தேதியன்று இமந்த பிசுவா சர்மா அடிக்கல் நாட்டியதன் மூலம் கட்டுமானம் கல்லூரியின் தொடங்கப்பட்டது. [2] [5] 2017 ஆம் ஆண்டில், கல்லூரியின் தற்போதைய பணிக்கான நிதி 156.55 கோடி ரூபாயிலிருந்து 209 கோடி இந்திய ரூபாயாக உயர்த்தப்பட்டது. [3] [4] [6] [7] கட்டுமானம் 2012 ஆம் ஆண்டு முதல் தொடங்கியது. ஆனால் கட்டிடக்கலை வடிவமைப்பு மூன்று முறை திருத்தப்பட்டதால், கல்லூரிக்கான இறுதித் திட்டம் 28 ஏப்ரல் 2018 அன்று பெறப்பட்டது. [8]

பிரம்மபுத்ரா உள்கட்டமைப்பு நிறுவனம் அசாம் இல்சு மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் கட்டுமானப் பணியில் ஈடுபட்டுள்ளது. [9] 2019 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 21 ஆம் தேதியன்று அசாம் இல்சு மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் பொது மக்களின் நலன் கருதி திபு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை எனப் பெயர் மாற்றப்பட்டது..

கல்லூரி[தொகு]

சிறுவர்கள், பெண்கள் மற்றும் செவிலியப் பணியாளர்களுக்கு தலா 204 இருக்கைகள் (102 அறைகள்), [10] ஒரு நவீன நூலகம் மற்றும் குளிரூட்டப்பட்ட விரிவுரை மண்டபம் போன்ற வசதிகள் இக்கல்லூரியில் உள்ளன. தற்போது கல்லூரியானது ஒரு கல்வியாண்டுக்கு 100 இளங்கலை மாணவர்களைக் கொண்டு செயல்படுகிறது. [2] [11]

மருத்துவமனை[தொகு]

மருத்துவமனையில் தற்போது 300 படுக்கைகள் உள்ளன. அவசர ஊர்தி உட்பட 24x7 மணிநேர அவசர சேவைகள். கோவிட்-19 பரிசோதனை மற்றும் நோயறிதல் வசதி, தீவிர சிகிச்சை பிரிவு, அறுவை சிகிச்சை அரங்கம், இரத்த வங்கி, எக்சு கதிர் மற்றும் மீயொலி , கதிரியக்கவியல்,மருத்துவ ஆய்வகம், மருந்தகம் போன்றவற்றுடன் நவீன சமையலறையும் இடம்பெற்றுள்ளது.[12]

மருத்துவமனையில் திங்கள் முதல் சனிக்கிழமை வரை காலை 8 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை வெளிநோயாளர் பிரிவு செயல்படுகிறது. [12] நோயாளிகள் மாலை 4 மணி முதல் 6 மணி வரை (மாலை). [13] வரை பார்வையிடப்படுகிறார்கள்.

படக்காட்சியகம்[தொகு]

தேசிய நெடுஞ்சாலை-329 இல் நுழைவு வாயில்

மேலும் பார்க்கவும்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Diphu Medical College to start functioning from Nov 25". The Hills Times (in ஆங்கிலம்). 2011-01-20. Archived from the original on 25 March 2020. பார்க்கப்பட்ட நாள் 2020-03-25.
  2. 2.0 2.1 2.2 "Foundation of Diphu Medical College laid". Karbi Information Network (in ஆங்கிலம்). 2011-01-20. Archived from the original on 2018-12-26. பார்க்கப்பட்ட நாள் 2018-12-26."Foundation of Diphu Medical College laid".
  3. 3.0 3.1 "Medical, engg seats in state increase - Times of India". The Times of India. Archived from the original on 2016-12-16. பார்க்கப்பட்ட நாள் 2018-12-26.
  4. 4.0 4.1 "Enhancement Of The Existing Work Order Of Rs. 156.55 Crores To 209 Crores For The Construction Of Diphu Medical College;,Diphu Guwahati". @businessline (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2018-12-26.
  5. "Website of FAAMCH". faamcassam.co.in. Archived from the original on 2017-07-06. பார்க்கப்பட்ட நாள் 2018-12-26.
  6. "Status of Centrally Sponsored Scheme | Directorate of Medical Education | Government Of Assam, India". dme.assam.gov.in. பார்க்கப்பட்ட நாள் 2018-12-26.
  7. "BRIEF-Brahmaputra Infrastructure says order enhancement for..." (in en). 2017-04-19. https://in.reuters.com/article/brief-brahmaputra-infrastructure-says-or-idINFWN1HR013. 
  8. Express, Drongo. "Health Minister Piyush Hazarika conduct inspection on the ongoing Hills Medical College at Diphu | The Drongo Express" (in அமெரிக்க ஆங்கிலம்). Archived from the original on 2018-12-26. பார்க்கப்பட்ட நாள் 2018-12-26.
  9. "Brahmaputra Infrastructure's JV bags order worth Rs 98.41 crore - Brahmaputra Infrastructure Ltd. Latest News". www.moneyworks4me.com. Archived from the original on 2018-12-26. பார்க்கப்பட்ட நாள் 2018-12-26.
  10. v
  11. "The Assam Tribune Online". www.assamtribune.com. Archived from the original on 2017-01-13. பார்க்கப்பட்ட நாள் 2018-12-26.
  12. 12.0 12.1 "Diphu Medical College & Hospital"."Diphu Medical College & Hospital".
  13. "Diphu Medical College & Hospital".

புற இணைப்புகள்[தொகு]