திபாங்கு அணை
திபாங்கு பல்நோக்குத் திட்டம் Dibang Multipurpose Project | |
---|---|
நாடு | இந்தியா |
புவியியல் ஆள்கூற்று | 28°20′15″N 95°46′15″E / 28.33750°N 95.77083°E |
நிலை | திட்டமிடப்பட்டுள்ளது |
உரிமையாளர்(கள்) | தேசிய நீர் மின்னாற்றல் ஆணையம் |
அணையும் வழிகாலும் | |
வகை | கற்காரை புவியீர்ப்பு |
தடுக்கப்படும் ஆறு | திபாங்கு ஆறு |
உயரம் | 278 m (912 அடி) |
மின் நிலையம் | |
சுழலிகள் | 12 x 250 மெகா வாட்டு பிரான்சிசு வகை சுழலி |
நிறுவப்பட்ட திறன் | 2880 மெகா வாட்டு[1] |
திபாங்கு அணை (Dibang Dam) இந்தியாவின் அருணாச்சலப் பிரதேசத்தில் உள்ள திபாங்கு பள்ளத்தாக்கு மாவட்டத்தில் அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. கற்காரை புவியீர்ப்பு வகை அணையாக இது கட்டப்படும். இவ்வாறு கட்டப்பட்டால்,[2] இது இந்தியாவின் மிகப்பெரிய அணையாகத் திகழும். 288 மீட்டர் (945 அடி) உயரமுள்ள உலகின் மிக உயரமான கற்காரை புவியீர்ப்பு அணையாகவும் சிறப்பு பெறும். 3,000 மெகாவாட் வரை நீர்மின்சாரத்தை வழங்கவும், திபாங் பள்ளத்தாக்கில் வெள்ளத்தை கட்டுப்படுத்தவும் திபாங் அணை உதவும்.[3]
வரலாறு
[தொகு]திபாங்கு அணைக்கான அடிக்கல் 2008 ஆம் ஆண்டு சனவரி மாதம் 31 அன்று பிரதமர் மன்மோகன் சிங்கால் நாட்டப்பட்டது. ஆனால், இத்திட்டத்தின் கட்டுமானப் பணிகள் இன்னும் தொடங்கப்படவில்லை. 2013 ஆம் ஆண்டில் சுற்றுச்சூழல் மற்றும் வன அமைச்சகம் இத்திட்டத்தின் விண்ணப்பத்தை நிராகரித்தது. ஆனால் தேசிய நீர் மின்னாற்றல் ஆணையம் விண்ணப்பத்தை 2014 ஆம் ஆண்டு மீண்டும் சமர்ப்பித்தது. மேலும் அணை தன் தற்காலிக எதிர்மறையான சுற்றுச்சூழல் தாக்கங்கள் மற்றும் இடு மிசுமி பழங்குடியின மக்களின் கட்டாய இடமாற்றம் போன்ற காரணங்களுக்காக உள்ளூர் மற்றும் பன்னாட்டு அமைப்புகளின் எதிர்ப்பின் கீழ் உள்ளது.[4]
மோடி அரசாங்கம் 2019 ஆம் ஆண்டு அணை கட்டும் திட்டத்திற்கு புதுப்பிக்கப்பட்ட அனுமதியை வழங்கியது.[5] வெள்ளக் கட்டுப்பாடும், மின் உற்பத்தியும் திட்டத்தின் முக்கிய நோக்கங்களாகும். 2020 ஆம் ஆண்டு நிலவரப்படியும் அசாம், அருணாசலப் பிரதேசப் பகுதிகளில் உள்ள இரண்டு பெரிய அணை திட்டங்களான திபாங்கு மற்றும் தாழ் சுபன்சிரி ஆகிய இரு அணை திட்டங்களிலும் கட்ட்டுமான வேலைகள் முன்னேறவில்லை.[6][7]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Features". NHPC. பார்க்கப்பட்ட நாள் 6 August 2011.
- ↑ Dibang Power Project. ProcessRegister.com. Retrieved 16 June 2013.
- ↑ "Dibang Hydroelectric project yet to get nod". Live Mint. 31 January 2008. Retrieved 16 June 2013.
- ↑ "Fresh shot at Dibang dam". The Telegraph - India. 21 April 2014. பார்க்கப்பட்ட நாள் 18 May 2014.
- ↑ Pisharoty, Sangeeta Barooah (22 July 2019). "Explainer | The Controversy Surrounding Dibang Dam, India's Largest Hydropower Project". The Wire. பார்க்கப்பட்ட நாள் 2021-06-16.
{{cite web}}
: CS1 maint: url-status (link) - ↑ Talukdar, Sandipan (Nov 28, 2018). "Big Dams in Arunachal-Assam Border likely to Resume Work after NGT Green Signal". NewsClick. https://www.newsclick.in/big-dams-arunachal-assam-border-likely-resume-work-after-ngt-green-signal. பார்த்த நாள்: 27 December 2018.
- ↑ Aggarwal, M., 2019. Hydropower: Dibang Dam Approval And Dam Safety. Mongabay-India. Available at: https://india.mongabay.com/2019/07/hydropower-projects-come-back-in-focus-with-dibang-dam-push-and-the-dam-safety-bill (Accessed 18 September 2020).
வெளியிணைப்புகள்
[தொகு]- Dibang Project at NHPC