தினேஷ் சந்திர சென்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தினேஷ் சந்திர சென்
Dinesh Chandra Sen
பிறப்பு(1866-11-03)3 நவம்பர் 1866
சூபார் கிராமம், டாக்கா மாவட்டம், வங்காளதேசம்)
இறப்பு20 நவம்பர் 1939(1939-11-20) (அகவை 73)
கொல்கத்தா, வங்காள மாகாணம்
தேசியம்இந்தியர்
படித்த கல்வி நிறுவனங்கள்ஜகன்னாத் பல்கலைக்கழகம்
டாக்கா கல்லூரி
விருதுகள்ஜெகத்தரிணி தங்கப் பதக்கம்

ராய் பகதூர் தினேஷ் சந்திர சென் (ஆங்கிலம்: Dinesh Chandra Sen; வங்காள மொழி: দীনেশ চন্দ্র সেন)(3 நவம்பர் 1866 - 20 நவம்பர் 1939)[1] என்பவர் பெங்காலி எழுத்தாளர், கல்வியாளர் மற்றும் இந்தியத் துணைக் கண்டத்தைச் சேர்ந்த வங்காள நாட்டுப்புறவியல் ஆராய்ச்சியாளர் ஆவார். இவர் நிறுவன ஆசிரிய உறுப்பினராகவும், கொல்கத்தா பல்கலைக்கழகத்தின் பெங்காலி மொழி மற்றும் இலக்கியத் துறையின் ராம்தானு லஹிரி ஆராய்ச்சி உறுப்பினராகவும் இருந்தார். இவர் 1939-ல் கல்கத்தாவில் இறந்தார்.

ஆரம்ப வாழ்க்கை மற்றும் குடும்பம்[தொகு]

சென் ஈசுவர் சந்திர சென் மற்றும் ரூபலதா தேவிக்கு சுவாபூர் கிராமத்தில் (இன்றைய வங்காளாதேசத்தின் டாக்கா மாவட்டத்தில்) பிறந்தார். இவரது தாயின் குடும்பம் மணிகஞ்ச் மாவட்டத்தில் உள்ள போக்ஜூரியைச் சேர்ந்தது.[2] ஹிராலால் சென் இவரது உறவினர் ஆவார். இவரது பேரன் சமர் சென் ஒரு பிரபலமான வங்காளக் கவிஞர்.

கல்வி மற்றும் தொழில்[தொகு]

1882-ல், டாக்காவில் உள்ள ஜகன்னாத் பல்கலைக்கழகத்தில் தனது பல்கலைக்கழக நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற்றார். 1885-ல், டாக்கா கல்லூரியில் தனது எப். ஏ. தேர்வில் தேர்ச்சி பெற்றார். இவர் 1889ஆம் ஆண்டில் ஒரு தனியார் மாணவராக ஆங்கில இலக்கியத்தில் ஹானர்ஸுடன் தனது இளங்கலை தேர்வில் தேர்ச்சி பெற்றார். 1891-ல், இவர் கொமிலா நகரில் உள்ள விக்டோரியா பள்ளியின் தலைமை ஆசிரியரானார். 1909-13 காலகட்டத்தில், கொல்கத்தா பல்கலைக்கழகத்தில் புதிதாக நிறுவப்பட்ட பெங்காலி மொழி மற்றும் இலக்கியத் துறையில் பேராசிரியராக இருந்தார். 1913-ல், இவர் இதே துறையில் இராம்தானு லஹிரி ஆராய்ச்சி உறுப்பினரானார். 1921-ல், கொல்கத்தா பல்கலைக்கழகம் இவரது பணியைப் பாராட்டி இலக்கிய முனைவர் பட்டம் வழங்கியது. வங்காள இலக்கியத்தில் இவர் ஆற்றிய பங்களிப்பிற்காக 1931-ல் ஜகத்தரிணி தங்கப் பதக்கம் பெற்றார். பின்னர் 1932-ல் பணியிலிருந்து ஓய்வு பெற்றார்.[1]

வெளியீடுகள்[தொகு]

இவர் வங்காள நாட்டுப்புறக் கதைகளைச் சேகரித்துத் தொகுக்கும் பணியினை மேற்கொண்டார். சந்திர குமார் தேவுடன் இணைந்து, 21 நாட்டுப்புற கதைப்பாடல் தொகுப்பான மைமென்சிங் கிதிகாவை (மைமென்சிங் மாவட்ட கதைப்பாடல்கள்) வெளியிட்டார்.

பெங்காலி மொழியில்[தொகு]

  • பங்களா பாசா ஓ சாஹித்யா (1896)
  • டின் பந்து (மூன்று நண்பர்கள்) (1904)
  • ராமாயண கதை ( ராமாயணக் கதைகள்) (1904)
  • பெஹுலா (ஒரு நாட்டுப்புறக் கதை) (1907)
  • சதி (1907)
  • புல்லாரா (1907)
  • ஜடா பாரத் (1908)
  • சுகதா (கட்டுரைகளின் தொகுப்பு) (1912)
  • கிரிஹாஸ்ரீ (1916)
  • நில்மானிக் (1918)
  • முக்தா சூரி (1920)
  • சரல் பங்களா சாகித்யா (1922)
  • வைடிக் பாரத் (வேத இந்தியா: வேதங்களின் கதைகளை அடிப்படையாகக் கொண்டது) (1922)
  • கரேர் கதா ஓ யுகசாஹித்யா (சுயசரிதை படைப்பு) (1922)
  • அலோகே அந்தரே (1925)
  • சௌகிர் விடம்பனா (1926)
  • ஓபரர் அலோ (1927)
  • பௌராணிகி (புராணங்களின் கதைகள்) (1934)
  • பிரஹத் பங்கா (மாபெரும் வங்காளம்: ஒரு சமூக வரலாறு) இரண்டு தொகுதிகளில் (1935)
  • அசுதோஷ் ஸ்மிருதி கதா (1936)
  • ஷியாமல் ஓ கஜ்ஜல் (1936)
  • படாவலி மாதுர்யா (1937)
  • புரதானி (1939)
  • பங்களார் பூரணரி (1939)
  • பிரச்சின் பங்களா சாஹித்யே முசல்மானர் அவதன் (1940)
  • ராக்கலேர் ராஜ்கி

ஆங்கிலத்தில்[தொகு]

  • ஹிஸ்டரி ஆப் பெங்காலி லாங்குவேஜ் அண்டு லிட்டிரேச்சர்-பெங்காலி மொழி மற்றும் இலக்கிய வரலாறு (1911)
  • சதி (1916)
  • தி வைசுணவ லிட்ரேச்சர் ஆப் மெடிவெல் பெங்கால்-இடைக்கால வங்காளத்தின் வைஷ்ணவ இலக்கியம் (1917)
  • சைத்தன்யா அண்டு கிசு கம்பெனியந்சைதன்யா மற்றும் அவரது தோழர்கள் (1917)
  • தி போல்க் லிட்டிரேச்சர் ஆப் பெங்கால்-வங்காளத்தின் நாட்டுப்புற இலக்கியம் (1920)
  • தி பெங்காலில் ராமாயனா-பெங்காலி ராமாயணம் (1920)
  • பெங்காலி புரோசு ஸ்டைல்-பெங்காலி உரைநடை நடை, 1800-1857 (1921)
  • சைத்தன்யா ஆண்டு கிஸ் ஏஜ்-சைதன்யாவும் அவரது வயதும் (1922)
  • ஈஸ்ட்ரன் பெங்கால் பல்லாடுசு-கிழக்கு பெங்கால் பாலாட்ஸ் நான்கு தொகுதிகளில் (1923-1932)
  • கிளிம்சசு ஆப் பெங்கால் லைப்-வங்காள வாழ்க்கையின் காட்சிகள் (1925)

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 Sengupta, Subodh Chandra (ed.) (1988) Sansad Bangali Charitabhidhan (in Bengali), Kolkata: Sahitya Sansad, p.208
  2. Huq, Syed Azizul (2012). "Sen, Raibahadur Dineshchandra". in Sirajul Islam; Jamal, Ahmed A.. Banglapedia: National Encyclopedia of Bangladesh (Second ). Asiatic Society of Bangladesh. http://en.banglapedia.org/index.php?title=Sen,_Raibahadur_Dineshchandra. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=தினேஷ்_சந்திர_சென்&oldid=3650061" இலிருந்து மீள்விக்கப்பட்டது