தினேசு நந்தினி டால்மியா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தினேசு நந்தினி டால்மியா
பிறப்பு(1928-02-16)16 பெப்ரவரி 1928
உதயப்பூர், உதய்ப்பூர் மாநிலம், பிரித்தானிய இந்தியாவின் மாகாணங்களும், ஆட்சிப் பகுதிகளும்
இறப்பு25 அக்டோபர் 2007(2007-10-25) (அகவை 79)
தில்லி, இந்தியா
மற்ற பெயர்கள்தினேசு நந்தினி சோர்டியா
பணிகவிஞர்
சிறுகதை எழுத்தாளர்
புதின ஆசிரியர்
அறியப்படுவதுஇந்தி இலக்கியம்
வாழ்க்கைத்
துணை
இராம்கிருட்டிணா டால்மியா
விருதுகள்பத்ம பூசண்
சக்சேரியா விருது
மகிலா சக்திஸ்கரன் புரஸ்காரம்
பிரேம் சந்த் விருது

தினேசு நந்தினி டால்மியா (Dinesh Nandini Dalmia) என்பவர் (பிறப்பு:1928 பிப்ரவரி 16 - இறப்பு: 2007 அக்டோபர் 25) இவர் ஓர் இந்திய கவிஞரும், சிறுகதை எழுத்தாளரும் மற்றும் இந்தி இலக்கியத்தின் புதின ஆசிரியருமாவார். [1] இவர் டால்மியா குழுமத்தின் நிறுவனர் இராம்கிருட்டிணா டால்மியாவின் ஐந்தாவது மனைவியாக இருந்தார். டால்மியாவின் முந்தைய நான்கு மனைவிகளில் மூன்று பேர் இன்னும் உயிருடன் இருக்கின்றனர். இவரை ஐந்தாவது மனைவியாக திருமணம் செய்து கொண்டார். ஆயினும்கூட, இவர் பாலின பாகுபாடு மற்றும் பர்தா முறைக்கு எதிராக தன்னை நிலைநிறுத்திக் கொண்டார். மேலும் பெண்கள் விடுதலையின் கருப்பொருளில் கவிதைகள், உரைநடை கவிதைகள், சிறுகதைகள் மற்றும் புதினங்களை வெளியிட்டார். [2] சப்னம், நிராச் ஆசா, முஜே மாப் காமா மற்றும் யே பி ஜூத் ஹை ஆகியவை இவரது குறிப்பிடத்தக்க படைப்புகளாகும். 2006 ஆம் ஆண்டில், இந்திய அரசு குடிமகன்களின் மூன்றாவது மிக உயர்ந்த கௌரவமான பத்ம பூசண் விருதை அவருக்கு வழங்கியது. [3] 2009 ஆம் ஆண்டில், இந்திய அஞ்சல் துறை இவரது நினைவாக ஒரு அஞ்சல் முத்திரையை வெளியிட்டது. [4]

சுயசரிதை[தொகு]

தினேசு நந்தினி டால்மியா, தினேசு நந்தினி சோர்டியா என்றப் பெயரில், 1928 பிப்ரவரி16, அன்று இந்திய மாநிலமான ராஜஸ்தானின் உதய்பூரில் பிறந்தார். [5] இவர் தனது 13 வயதில் தனது இலக்கிய நடவடிக்கைகளைத் தொடங்கினார். 1946 ஆம் ஆண்டில் டால்மியா குழுமத்தின் நிறுவனர் ராம்கிருஷ்ணா டால்மியாவை தனது 18ஆவது வயதில் திருமணம் செய்து கொண்ட பின்னரும், [6] முதுகலைப் பட்டம் பெற தனது படிப்பைத் தொடர்ந்தார். இதனால் ராஜஸ்தான் மாநிலத்தில் முதுகலை பட்டம் பெற்ற முதல் பெண்மணியானார். [7] இவர் தனது ஆரம்ப படைப்புகளை உரைநடை கவிதைகளாக எழுதினார். ஆனால் பின்னர் கவிதைகளை எழுதினா. இது நீராஷ் ஆஷாவுடன் தொடங்கி வரது முதல் வெளியிடப்பட்ட புத்தகம் ஷப்னம் ஆகும், இது இவருக்கு சாக்சீரியா விருதைப் பெற்றுத்தந்தது . [2] அதைத் தொடர்ந்து, சிறுகதைகள் மற்றும் புதினங்களையும் எழுதி, அவற்றில் 35 கவிதைத் தொகுப்புகளைத் தவிர 35 பதிப்புகளையும் வெளியிட்டார். [8] பூல் கா டார்ட், என்ற ஒரு ஆவணப்படம், அதே பெயரில் இவரது படைப்புகளில் தயாரிக்கப்பட்டுள்ளது. [9]

பணிகள்[தொகு]

டால்மியா தனது கருத்துக்களில் ஒரு பெண்ணியவாதி என்று அறியப்பட்டார். பர்தா அமைப்பு மற்றும் பெண்களுக்கு எதிரான பாகுபாடு ஆகியவற்றை எதிர்த்தார். இவர் இந்தோ-சீனா நட்பு சங்கம், லேகிகா சங்கம் மற்றும் ஒப்பீட்டு மதம் மற்றும் இலக்கிய நிறுவனம் ஆகியவற்றில் உறுப்பினராக இருந்தார். ஒப்பீட்டு மதம் மற்றும் இலக்கிய நிறுவனத்தின் தலைவராகவும் பணியாற்றினார். [5] அவர் ரிச்சா என்ற இலக்கிய இதழின் நிறுவனர்களில் ஒருவராகவும், அதன் தலைமை ஆசிரியராக இருந்தார்.

கௌவரங்கள்[தொகு]

இவர் 2001 ஆம் ஆண்டில் இந்தி சாகித்திய அகாதமியின் மகிலா சச்திகரன் புரஸ்காரம் பெற்றார். இராணி துர்காவதி பல்கலைக்கழகம் 2005 ஆம் ஆண்டில் இவருக்கு மதிப்புறு முனைவர் பட்டத்தை வழங்கியது. அடுத்த ஆண்டு, இந்திய அரசு இவருக்கு குடிமகன்களின் மூன்றாவது கௌரவமான பத்ம பூசண் விருதினை வழங்கியது. [3] இவர் பிரேம் சந்த் விருதையும் பெற்றுள்ளார்.

இறப்பு மற்றும் மரியாதை[தொகு]

தினேசு நந்தினி டால்மியா 2007 அக்டோபர் 25 அன்று தனது 79 வயதில் தில்லியில் காலமானார். [6] புகழ்பெற்ற எழுத்தாளர் நீலிமா டால்மியா ஆதார் இவரது மகளாவார். [10] தில்லி நிர்வாகம் திலக் மார்க் என்ற ஒரு சந்தைக்கு தினேஷ் நந்தினி டால்மியா சௌக் என்று பெயரிட்டது. [7] இவருடனான ஒரு நேர்காணலை கமல் கிசோர் கோயங்கா 2002 இல் தினேஷ் நந்தினி டால்மியா சே பச்சித் என்ற தலைப்பில் வெளியிட்டார் . [11] இந்திய அஞ்சல் துறை 2009 இல் ஒரு நினைவு முத்திரையை வெளியிட்டது. [4]

குறிப்புகள்[தொகு]

  1. "Jinnah's Air India Shares and his Lavish Mansions". Organiser. 2016. பார்க்கப்பட்ட நாள் 7 June 2016.[தொடர்பிழந்த இணைப்பு]
  2. 2.0 2.1 "Dineshnandini Dalmia popularised Hindi literature till her last breath". The Hindu. 12 October 2009. பார்க்கப்பட்ட நாள் 7 June 2016.
  3. 3.0 3.1 "Padma Awards" (PDF). Ministry of Home Affairs, Government of India. 2016. Archived from the original (PDF) on 15 November 2014. பார்க்கப்பட்ட நாள் 3 January 2016.
  4. 4.0 4.1 "Stamps India- Dineshnandini Dalmia". Indian Stamp Ghar. 2016. Archived from the original on 8 ஆகஸ்ட் 2016. பார்க்கப்பட்ட நாள் 7 June 2016. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  5. 5.0 5.1 "Dineshnandini Dalmia on Stamp Sathi". Stamp Sathi. 2016. Archived from the original on 12 அக்டோபர் 2016. பார்க்கப்பட்ட நாள் 7 June 2016.
  6. 6.0 6.1 "Dalmia never lived at 10-Aurangzeb Road, writes daughter". Indian Express. 1 September 2009. பார்க்கப்பட்ட நாள் 7 June 2016.
  7. 7.0 7.1 "Tribute to a 'firebrand author'". The Hindu. 29 December 2008. பார்க்கப்பட்ட நாள் 7 June 2016.
  8. "Tilak Marg W-point named after Padma awardee". The Tribune. 29 December 2009. பார்க்கப்பட்ட நாள் 7 June 2016.
  9. "DOCUMENTARY FILM SCREENING "Phool Ka Dard"". Delhi Events. 2016. பார்க்கப்பட்ட நாள் 7 June 2016.
  10. "Neelima Dalmia Adhar". neelimadalmiaadhar.com. 2016. Archived from the original on 18 February 2016. பார்க்கப்பட்ட நாள் 7 June 2016.
  11. Dinesh Nandini Dalmiya Se Baatchit. Hindi Book Centre. https://www.amazon.in/dp/8185244650. 

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=தினேசு_நந்தினி_டால்மியா&oldid=3712342" இலிருந்து மீள்விக்கப்பட்டது