தினா சனிச்சர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
1889-1894 ஆம் ஆண்டுகளில் சனிச்சர்

தினா சனிச்சர் (Dina Sanichar) ஒரு காடு வாழ் குழந்தையாவார். இவர் 1866 முதல் 1894 வரையான காலத்தில் வாழ்ந்துள்ளார். 1872 ஆம் ஆண்டில் இந்தியாவின் உத்தரப்பிரதேசத்தில் உள்ள ஆக்ரா நகருக்கு அருகில் சிக்கந்திராவில் ஒரு குகையில் ஓநாய்களுக்கிடையில் 10 வயதாக இருந்தபோது இவர் கண்டறியப்பட்டார். புலந்த்சார் வேட்டைக்காரர்கள் இவரை அப்போது கண்டுபிடித்தனர்.[1][2] இருபது ஆண்டுகளுக்கும் மேலாக மற்ற மனிதர்களிடையே தினா சேர்ந்து வாழ்ந்தார். புகைப்பிடிக்க கற்றுக் கொண்டாலும் கடைசி வரை பேச மட்டும் கற்றுக் கொள்ளவில்லை. வாழ்நாள் முழுவதும் பலவீனமடைந்தவராகவே இருந்தார்..[1][3]

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=தினா_சனிச்சர்&oldid=3796675" இலிருந்து மீள்விக்கப்பட்டது