தினமும் என்னை கவனி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
தினமும் என்னை கவனி
இயக்கம்ஏ. ஆர். இரமேஷ்
தயாரிப்புதமிழ் பாத்திமா
கதைஏ. ஆர். இரமேஷ்
ஈ. இராமதாஸ் (உரையாடல்)
இசைசிற்பி (இசையமைப்பாளர்)
நடிப்பு
ஒளிப்பதிவுஇராஜராஜன்
படத்தொகுப்புஜி. ஜெயசந்திரன்
கலையகம்தமிழன்னை சினி கிரியேசன்
வெளியீடுஏப்ரல் 14, 1997 (1997-04-14)
ஓட்டம்135 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

தினமும் என்னை கவனி (Dhinamum Ennai Gavani) என்பது 1997 ஆண்டைய தமிழ் துப்பறியும் திரைப்படம் ஆகும். இதை ஏ. ஆர். இரமேஷ் இயக்க, ராம்கி, சங்கவி, பிரகாஷ் ராஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். தமிழ் பாத்திமா தயாரித்த இப்படத்திற்கு, சிற்பி இசை அமைத்துள்ளார். இப்படமானது 1997 ஏப்ரல் 14 அன்று வெளியிடப்பட்டது. படம் வணிக ரீதியாக தோல்வியடைந்தது. [1] [2] [3] [4]

கதை[தொகு]

ரோலக்ஸ் ( பிரகாஷ் ராஜ் ) ஒரு புத்திசாலி சர்வதேச கடத்தல்காரன். அச்சமற்ற உதவி ஆணையர் ஜெய்குமார் ( ராம்கி ) அவரைக் கைது செய்து சிறைக்கு அனுப்புகிறார். ஆழமான காதல் புரியும் ஜெய் குமாரும், ராஜியும் ( சங்கவி ) திருமணம் செய்து கொள்கிறார்கள். தன்னை சிறைக்கு அனுப்பிய ஜெய்குமாரை தனது வழியில் பழிவாங்க ரோலெக்ஸ் விரும்புகிறார். அதன்பிறகு, அவர் சிறையிலிருந்து தப்பித்து, தான் இறந்துவிட்டதாக அனைவரையும் நம்ப வைக்கிறார். பின்னர் என்ன நடந்தது என்பது கதையின் முக்கிய அம்சமாக அமைகிறது.

நடிகர்கள்[தொகு]

இசை[தொகு]

படத்தின் பின்னணி இசை மற்றும் பாடல் இசையை திரைப்பட இசையமைப்பாளர் சிற்பி அமைத்துள்ளார். 1997 ஆம் ஆண்டில் வெளியான இதன் பாடல் பதிவில் காமகோடியான், பழனி பாரதி, அறிவுமதி ஆகியோரால் எழுதப்பட்ட வரிகளுடன் நான்கு பாடல்கள் உள்ளன.

டெண் பாடல் பாடகர் (கள்) காலம்
1 'காலேஷ் என் கையிலே' அனுராதா ஸ்ரீராம், குழுவினர் 4:56
2 'பத்திகிச்சிம்மா பம்பர வயசு' மனோ, சுவர்ணலதா, குழுவினர் 3:50
3 'செவ்வந்தி தோட்திலே' பி. உன்னிகிருஷ்ணன், சித்ரா 4:25
4 'வா வா பாட்டா' அனுராதா ஸ்ரீராம், குழுவினர் 4:27

குறிப்புகள்[தொகு]

  1. "Find Tamil Movie Dhinamum Ennai Gavani". jointscene.com. மூல முகவரியிலிருந்து 2012-04-29 அன்று பரணிடப்பட்டது.
  2. "Filmography of dhinamum ennai gavani". cinesouth.com. மூல முகவரியிலிருந்து 2010-05-28 அன்று பரணிடப்பட்டது.
  3. "Dhinamum Ennai Gavani (1997)". gomolo.com.
  4. "A-Z (II) - INDOlink". indolink.com. மூல முகவரியிலிருந்து 28 January 2015 அன்று பரணிடப்பட்டது.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தினமும்_என்னை_கவனி&oldid=3126082" இருந்து மீள்விக்கப்பட்டது