உள்ளடக்கத்துக்குச் செல்

தினக்குரல் (மலேசியா)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தினக்குரல்
தினக்குரல் மலேசியா
வகைநாளிதழ்
வடிவம்அகண்ட தாள்
உரிமையாளர்(கள்)அருள்குமார் ஆதி குமணன்
ஆசிரியர்பி.ஆர்.இராசன்
நிறுவியது09.02.2012
அரசியல் சார்புகட்சி சாரா
மொழிதமிழ்
தலைமையகம்சாலான் ஈப்போ
கோலாலம்பூர்
மலேசியா
விற்பனை31,000 (நாளொன்றுக்கு)
55,000 (ஞாயிறு)

தினக்குரல் மலேசியாவில் இருந்து வெளிவரும் தமிழ் நாளிதழ். 2012 பிப்ரவரி 9-இல் இருந்து வெளியீடு செய்யப் படுகிறது.[1] இதன் தலைமை ஆசிரியர் பி.ஆர்.இராசன். 36 ஆண்டுகள் இதழியல் அனுபவம் உடையவர். நிர்வாக இயக்குனர் அருள்குமார். இவர் காலஞ்சென்ற மலேசிய நண்பன் தலைமை ஆசிரியர் ஆதி குமணன் அவர்களின் புதல்வராவார்.

நாள்தோறும் 31,000 பிரதிகளும், ஞாயிற்றுக் கிழமைகளில் 47,000 பிரதிகளும் அச்சிடப் படுகின்றன. இந்த நாளேட்டின் அலுவலகம், கோலாலம்பூர், சாலான் ஈப்போ, பத்து காம்ப்ளெக்சில் உள்ளது. மலேசிய இந்திய சமூகத்தை வாழ்க்கையின் எல்லா நிலைகளிலும் உயர்த்துவதைத் தினக்குரல் நோக்கமாகக் கொண்டிருக்கிறது.

மலேசியத் தமிழர்களுக்காக மலேசியா, தமிழ்நாடு, இலங்கை, இந்திய நாட்டு செய்திகள், மற்றும் உலகச் செய்திகளை இந்த செய்தித்தாள் வெளியிடுகிறது. ஏற்கனவே, மலேசியா நாட்டில் தமிழ் நேசன், மலேசிய நண்பன், மக்கள் ஓசை என மூன்று தமிழ் நாளேடுகள் உள்ளன. நான்காவதாக தினக்குரல் வருகிறது. இந்த நாளிதழைத் தொடர்ந்து நம் நாடு, தமிழ் மலர் ஆகிய இரு நாளிதழ்களும் வெளிவருகின்றன.

மேற்கோள்கள்

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=தினக்குரல்_(மலேசியா)&oldid=3590985" இலிருந்து மீள்விக்கப்பட்டது