தித்வா புயல்
2025, நவம்பர் 28 உச்ச தீவிரத்திற்கு அருகில் தித்வா | |
| வானிலை வரலாறு | |
|---|---|
| தோற்றம் | 26 நவம்பர் 2025 |
| Remnant low | 3 திசம்பர் 2025 |
| கலைவு | 4 திசம்பர் 2025 |
| Cyclonic storm | |
| 3-நிமிடம் நீடித்தது (IMD) | |
| அதிகளவு காற்று | 75 km/h (45 mph) |
| குறைந்த அழுத்தம் | 1001 hPa (mbar); 29.56 inHg |
| Tropical storm | |
| 1-நிமிடம் நீடித்தது (SSHWS/JTWC) | |
| அதிகளவு காற்று | 65 km/h (40 mph) |
| குறைந்த அழுத்தம் | 1002 hPa (mbar); 29.59 inHg |
| ஒட்டுமொத்த விளைவுகள் | |
| இறப்புகள் | 647+ |
| காயப்பட்டோர் | 21+ |
| காணாமல்போனோர் | 183+ |
| சேதம் | >$1.64 பில்லியன் (2025 USD) |
| பாதிக்கப்பட்ட பகுதிகள் | |
பகுதி: 2025 வடக்கு இந்தியப் பெருங்கடல் சூறாவளிப் பருவம் | |
தித்வா சுறாவளிப் புயல் (Cyclonic Storm Ditwah) என்பது ஒரு பலவீனமான ஆனால் பேரழிவு தந்த ஒரு வெப்ப மண்டலச் சூறாவளியாகும், 2025 இது நவம்பர் பிற்பகுதியிலும் திசம்பர் தொடக்கத்திலும் இலங்கை, தென்னிந்தியா ஆகிய பகுதிகளில் பலத்த மழையைக் கொண்டு வந்தது. 2025 வடக்கு இந்தியப் பெருங்கடல் புயல் பருவத்தின் பதினான்காவது வெப்பமண்டலக் காற்றழுத்தத் தாழ்வு மற்றும் சூறாவளிப் புயலான தித்வா, நன்கு குறிக்கப்பட்ட குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்திலிருந்து தோன்றி, பின்னர் படிப்படியாக ஒரு சூறாவளிப் புயலாகத் தீவிரமடைந்து இலங்கையில் கரையைக் கடந்தது. பின்னர் தித்வா இலங்கையிலிருந்து நகர்ந்து வங்காள விரிகுடாவில் நுழைந்தது, அங்கு அது மீண்டும் தீவிரமடைந்து இந்தியாவின் சோழ மண்டலக் கடற்கரைக்கு இணையாக வரத் தொடங்கியது. 2025 நவம்பர் 30 அன்று, அதிகரித்து வந்த சாதகமற்ற சூழ்நிலைகள் காரணமாக இந்த அமைப்பு பலவீனமடையத் தொடங்கியது. புயல் தமிழ்நாடு, பாண்டிச்சேரி கடற்கரையில் நீடித்தது. அந்த நாளின் பிற்பகுதியில் அது ஒரு ஆழமான காற்றழுத்த தாழ்வு மண்டலமாக பலவீனமடைந்தது, திசம்பர் 2 ஆம் தேதி, இந்த அமைப்பு மேலும் ஒரு காற்றழுத்த தாழ்வு மண்டலமாக பலவீனமடைந்து திசம்பர் 3 ஆம் தேதி மீதமுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது.
தித்வாவின் பெரும்பாலான தாக்கம் இலங்கையிலேயே காணப்பட்டது. புயல் கடுமையான வெள்ளப்பெருக்கையும், நிலச்சரிவுகளையும் ஏற்படுத்தியது, 600-இற்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்தனர், பலர் காணாமல் போயினர். நாட்டில் $1.6 பில்லியன் டாலர்களுக்கு மேல் சேதத்தை ஏற்படுத்தியது. 2004 இந்தியப் பெருங்கடல் நிலநடுக்கம், சுனாமிக்குப் பிறகு நாட்டில் ஏற்பட்ட மிக மோசமான இயற்கை பேரழிவு இதுவாகும்.
வானிலை வரலாறு
[தொகு]
Tropical storm (39–73 mph, 63–118 km/h)
Category 1 (74–95 mph, 119–153 km/h)
Category 2 (96–110 mph, 154–177 km/h)
Category 3 (111–129 mph, 178–208 km/h)
Category 4 (130–156 mph, 209–251 km/h)
Category 5 (≥157 mph, ≥252 km/h)
Unknown
2025 நவம்பர் 26 அன்று ஒசநே 18:00 மணிக்கு (உள்ளூர் நேரம் பிற்பகல் 1230 மணிக்கு), இந்திய வானிலை ஆய்வுத் துறை, இலங்கையின் தென்கிழக்குக் கடற்கரையில் ஒரு நன்கு குறிக்கப்பட்ட குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியைக் கண்காணிக்கத் தொடங்கியது. இதற்குக் காரணம், அதிக கடல் மேற்பரப்பு வெப்பநிலை மற்றும் நடுத்தர அளவிலான செங்குத்து காற்று வெட்டு குறைவாக இருப்பது (மணிக்கு 10-15 கடல் மைல்கள்) போன்ற சாதகமான நிலைமைகள் ஆகும்.[1] இந்தக் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி மேலும் தீவிரமடைந்து, நவம்பர் 27 அன்று 00:00 UTC மணிக்கு முதலில் ஒரு ஆழமான காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாகவும், பின்னர் 06:00 UTC மணிக்கு ஒரு சூறாவளிப் புயலாகவும் மாறும். அப்போது அது தித்வா என்ற பெயரைப் பெற்றது.[2] இது ஏமன் வழங்கிய பெயர் ஆகும். தித்வா என்பது சோகோட்ரா தீவில் உள்ள தித்வா கடற்காயலைக் குறிக்கிறது. தித்வாவின் மேகங்கள் வளைந்த பட்டை வடிவத்தில் பெருகிய முறையில் ஒழுங்கமைக்கப்பட்டுள்ளன.[2]
தாக்கம்
[தொகு]இலங்கை
[தொகு]இலங்கையில் பெய்த கனமழையால் வெள்ளப்பெருக்கும், நிலச்சரிவுகளும் ஏற்பட்டன, இதன் விளைவாக 123 பேருக்கு மேல் இறந்தனர், 40 பேர் காயமடைந்தனர், மேலும் 130 பேர் காணாமல் போயினர்.[3][4][5] நுவரெலியா, பதுளை நகரங்களில் 25 இற்கும் அதிகமானோர் உயிரிழந்தனர், கண்டி மாவட்டம், கங்கொடையில் ஏற்பட்ட நிலச்சரிவினால் 20 பேர் காணாமல் போயுள்ளனர்.[6] இலங்கையின் கிழக்கே அம்பாறையில் மூன்று பேர் தங்கள் தானுந்து வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதில் உயிரிழந்தனர். நீர்த்தேக்கங்களும், ஆறுகளும் நிரம்பி வழிந்தன, சாலைகள் தடைப்பட்டன, பாதிக்கப்பட்ட மாகாணங்களை இணைக்கும் முக்கிய சாலைகள் மூடப்பட்டன. சேறு, பாறைகள் மற்றும் மரங்கள் ரயில் தண்டவாளங்களில் விழுந்ததால், மலைப்பகுதியின் சில பகுதிகளில் அதிகாரிகள் தொடருந்துப் போக்குவரத்தை நிறுத்தினர், அவற்றில் சில வெள்ளத்தில் மூழ்கின.[7] கடுமையான வானிலை காரணமாக பரவலாக மின்வெட்டு ஏற்பட்டதில், இப்பகுதியில் 25 முதல் 30 சதவீதம் வரை பாதிக்கப்பட்டது. மின் கம்பிகள் அறுந்து விழுந்ததால் இரண்டு பெரிய நீர்மின் நிலையங்களான கொத்மலை, ரந்தம்பை ஆகியவை மூடப்பட்டன. ஆயிரக்கணக்கானோர் வீடுகளை இழந்தனர். 44,192 குடும்பங்களைச் சேர்ந்த 148,603 பேர் வரை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டனர், அதே நேரத்தில் 5,024 குடும்பங்கள் 195 அவசர மையங்களில் தஞ்சம் புகுந்தனர்.[4]
தமிழ்நாடு
[தொகு]சென்னை பன்னாட்டு வானூர்தி நிலையத்தில் 54 வானூர்திகளை அதிகாரிகள் நிறுத்தி வைத்தனர், தமிழ்நாட்டில் பள்ளிகள் மூடப்பட்டன.[8]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Wayback Machine" (PDF). rsmcnewdelhi.imd.gov.in. 2025-11-26. Archived from the original (PDF) on 2025-11-26. Retrieved 2025-11-27.
- ↑ 2.0 2.1 "Wayback Machine". web.archive.org. Archived from the original on 2025-11-27. Retrieved 2025-11-27.
- ↑ "Cyclone Ditwah: Death toll rises to 123 in Sri Lanka as floods trigger mass evacuations, with 130 still missing". Firstpost. November 29, 2025. https://www.firstpost.com/world/cyclone-ditwah-death-toll-rises-to-123-in-sri-lanka-as-floods-trigger-mass-evacuations-with-130-still-missing-13955017.html.
- ↑ 4.0 4.1 "Over 80 dead as Cyclone Ditwah triggers massive flooding, landslides in Sri Lanka". ஹிந்துஸ்தான் டைம்ஸ். November 29, 2025. https://www.hindustantimes.com/world-news/over-80-dead-as-cyclone-ditwah-triggers-massive-flooding-landslides-in-sri-lanka-101764347068350.html.
- ↑ "Death toll from Sri Lanka landslides and floods rises to 69". Al Jazeera. November 28, 2025. https://www.aljazeera.com/news/2025/11/28/sri-lanka-landslides-floods-death-toll-rises-to-56-offices-schools-shut.
- ↑ "Death toll due to adverse weather climbs to 47 in Sri Lanka, 21 missing". Ada Derana. 27 November 2025. https://www.adaderana.lk/news.php?nid=115235.
- ↑ "Heavy rains trigger landslides and floods in Sri Lanka, leaving more than 40 dead". அசோசியேட்டட் பிரெசு. 27 November 2025. https://apnews.com/article/sri-lanka-weather-landslides-floods-ef3a2354448a7ec58cfe4ac5d8f750d1.
- ↑ "54 Flights Cancelled, Schools Shut: Cyclone Ditwah Affects Tamil Nadu". என்டிடிவி. November 29, 2025. https://www.ndtv.com/tamil-nadu-news/sri-lanka-floods-india-humanitarian-aid-to-sri-lanka-imd-forecast-cyclone-ditwah-disrupts-tamil-nadu-as-flights-cancelled-colleges-schools-closed-9719591.