திண்டுக்கல் நகரில் முக்கிய வழிபாட்டுத்தலங்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

திண்டுக்கல் நகரில் முக்கிய வழிபாட்டுத்தலங்கள் :

அபிராமி அம்மன் கோவில்

திண்டுக்கல்லில் முன்பிருந்தே ஞானாம்பிகை சமேத காளஹஸ்தீஸ்வரர் கோவில் இருந்தது. வேற்று மதத்தை சேர்ந்த அரசர்களால் மலைக்கோட்டை மேல் உள்ள கோவிலில் இருந்த பத்மகிரீசர் மற்றும் அபிராமி அம்மன் சிலைகள் அகற்றப்பட்டு, அவை அடியார்களின் முயற்சியால் நகர் நடுவே உள்ள காளஹஸ்தீஸ்வரர் கோவிலில் பிரதிஷ்டை செய்யப்பட்டது.[சான்று தேவை] திருக்கடவூரில் நான்கு கரங்களுடன் அருள் செய்யும் அம்மை அபிராமி எனவும், இத்தலத்தின் இறைவியை அபிராமாம்பிகை எனவும் வணங்க வேண்டும் எனச்சான்றோர் தெளிவு படுத்தியுள்ளனர் . இத்திருக்கோவில் அடியார்கள் பலரின் முயற்சியால் மீளக்கட்டப்பட்டு 20. சனவரி 2016 அன்று திருக்குடநன்னீராட்டு செய்யப்பட்டது.

கோட்டை மாரியம்மன் கோவில் :

பதினெட்டாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் ஒரு சிறிய பீடமும், அம்மனின் மூலஸ்தான விக்ரகம் மட்டுமே இருந்தது. மலைக்கோட்டையின் கீழ் திப்பு சுல்தான் காலத்தில் இருந்த ராணுவத்தினர் ஒரு சிறு மடம் நிறுவி மாரியம்மன் சிலையை வைத்தனர். அதுவே திண்டுக்கல் மக்களுக்கு "கோட்டை மாரியம்மனாக உள்ளது. இக்கோயிலுக்குகென்று சிறப்பு வாயில்கள் மூன்று உள்ளது. அம்மன் ஊர்வலக்காலங்களில் வெளியே செல்வது முன்புறமாக செல்லும். பின்புற வாயில்கள் மலைக்கோட்டையை ஒட்டியுள்ளது.ஆண்டுதோறும் மாசிமாதம் 20 நாட்கள் திருவிழா நடைபெறும்.

பேகம்பூர் பெரிய பள்ளிவாசல்:

பேகம்பூர் பெரிய பள்ளிவாசல் ஹைதர் அலி ஆட்சி காலத்தில் கட்டப்பட்டது. இந்த பழமையான மசூதி 300 வருடங்களுக்கும் முந்தையது. மன்னர் ஹைதர் அலியின் இளைய சகோதரி, அமீருன்னிசா பேகம் இந்த மசூதியின் வளாகத்தில் அடக்கம்செய்யப்பட்டுள்ளார். அமீருன்னிசா பேகம் பெயரால் இந்த பகுதி பேகம்பூர் என்றும், இந்த மசூதி பேகம்பூர் பெரிய பள்ளி வாசல் என்றும் திண்டுக்கல் பகுதியில் அழைக்கப்படுகிறது.

புனித ஜோஸப் தேவாலயம்:

1866ம் ஆண்டிற்கும் 1872ம் ஆண்டிற்கும் இடைப்பட்ட காலத்தில் இந்த தேவாலயம் கட்டப்பட்டது. இந்த 100 வருட பழமையான தேவாலயமானது திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள எல்லா ரோமன் கத்தோலிக்க தேவாலயங்களுக்கும் தலைமையகமாக இருப்பதால் இப்பகுதியின் மிக முக்கியமான வழிபாட்டு தலங்களில் ஒன்றாக திகழ்கிறது.

யாதவஸ்ரீ கிருஷ்ணன் கோவில் :
திண்டுக்கல் -யாதவா மேட்டூராசபட்டிலுள்ள யாதவஸ்ரீ கிருஷ்ணன் கோவில்முக்கிய வழிபாட்டுத்தலமாக விளங்குகிறது சிறந்த பண்பாட்டு மைய்யமாகவும் விளங்குகிறது,கிருஷ்ண ஜெயந்தி அன்று இங்கு நடைபெறும் உறியடித்திருவிழா மிகவும் சிறப்புப்பெற்றது

மேற்கோள் நூல் :

"Historical moments". Dindigul municipality. 2011. Archived from the original on 29 July 2009. Retrieved 7 February 2016.