திணை கொள் நெறி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

தமிழ் இலக்கியங்களில் வரும் அகத்திணைப் பாடல் இன்ன திணையைச் சேர்ந்தது எனக் கொள்வது எப்படி எனத் தொல்காப்பியத்தில் விளக்கப்பட்டுள்ளது.

 • உரிப்பொருள் என்பது திணையைத் தீர்மானிக்கும் உரிப்பொருள். பாடலில் புணர்தலும், அதனோடு தொடர்புடைய நிமித்தங்களும் கூறப்பட்டிருப்பின் அது குறிஞ்சித் திணை. இவ்வாறே பிற திணைகளும் கொள்ளப்படும்.[1]
 • இந்த உரிப்பொருள் பிற திணையோடு மயங்குவதில்லை. [2]
 • மலை, காடு, ஆறு, கடல் என்னும் நிலப்பகுதிகள் மயங்குவது இல்லை. [3]
 • என்றாலும் ஒரு நிலப்பகுதியில் உள்ள பொருள்கள் மற்றொரு நிலப்பகுதியில் மயங்கும். [4]
 • அன்றியும் எல்லா நிலப்பகுதிகளிலும் ஐந்து உரிப்பொருள் செயல்களும் நிகழும். [5]
 • இறைச்சி, உள்ளுறை உவமம் போன்ற குறிப்புப் பொருள்களாலும் இன்ன திணை என்பதை உணர்ந்துகொள்ள வேண்டும்.

ஆகையால் திணையைக் குறிப்பதற்கு நிலத்தை அடிப்படையாய்க் கொள்ளாமல் உரிப்பொருள் நிகழ்வுகளை அடிப்படையாய்க் கொள்வது நெறி.

அடிக்குறிப்பு[தொகு]

 1. புணர்தல் பிரிதல் இருத்தல் இரங்கல்
  ஊடல் அவற்றின் நிமித்தம் என்றிவை
  தேரும் காலை திணைக்கு உரிப்பொருளே. - தொல்காப்பியம் அகத்திணையியல் 16
 2. உரிப்பொருள் அல்லன மயங்கவும் பெறுமே. - தொல்காப்பியம் அகத்திணையியல் 15
 3. திணை மயக்குறுதலும் கடி நிலை இலவே
  நிலன் ஒருங்கு மயங்குதல் இல என மொழிப
  புலன் நன்கு உணர்ந்த புலமையோரே. - தொல்காப்பியம் அகத்திணையியல் 14
 4. எந் நில மருங்கின் பூவும் புள்ளும்
  அந் நிலம் பொழுதொடு வாரா ஆயினும்
  வந்த நிலத்தின் பயத்த ஆகும். - தொல்காப்பியம் அகத்திணையியல் 21
 5. விரவும் பொருளும் விரவும் என்ப. - தொல்காப்பியம் அகத்திணையியல் 48
"https://ta.wikipedia.org/w/index.php?title=திணை_கொள்_நெறி&oldid=1562271" இருந்து மீள்விக்கப்பட்டது