உள்ளடக்கத்துக்குச் செல்

திட்ட வெப்ப அழுத்தம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

திட்ட வெப்ப அழுத்தம் (standard condition for temperature and pressure) (STP) என்பது வேதியியல் ஆய்வுத் தரவுகளை ஒப்புமைப்படுத்தப் பயன்படுத்தப்படும் முன் வரையறுக்கப்பட்ட வெப்பநிலை மற்றும அழுத்தம் ஆகியவற்றை உள்ளடக்கிய சூழல் ஆகும். பல நிறுவனங்கள் தங்களுக்கேற்ற வகையில் இதை நிர்ணயம் செய்கின்றன. ஒருமித்த கருத்து எட்டப்படவில்லை.

உலகளாவிய தனி மற்றும் பயன்பாட்டு வேதியியல் கூட்டமைப்பின் '('International Union of Pure and Applied Chemistry) (IUPAC) நிர்ணயப்படி திட்ட வெப்ப அழுத்தம் என்பது, சுழியம் டிகிரி செல்சியசு வெப்பநிலை மற்றும் 100 கிலோ பாஸ்கல் அழுத்தம் ஆகும்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=திட்ட_வெப்ப_அழுத்தம்&oldid=2225738" இலிருந்து மீள்விக்கப்பட்டது