திட்டமிடல் மற்றும் மேலாண்மை பிரிவு பணிகள் :

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம் -திட்டமிடல் மற்றும் மேலாண்மை பிரிவு பணிகள் :

                                   1986 ம் ஆண்டு நடுவனரசால் கொண்டுவரப்பட்ட தேசிய கல்வி க்கொள்கையினடிப்படையில் ,திட்டத்தின் மூன்றாம் கட்ட நிலையில் தமிழக அரசின் அரசாணை எண் .எம் .எஸ் .237 கல்வி (ப .1)ன் படி தொடங்கப்பட்ட

மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தில் செயல்பட்டுவரும் ஏழு பிரிவுகளில் ஓன்று திட்டமிடல் மற்றும் மேலாண்மை பிரிவு ஆகும்.அதன் பணிகள் பின்வருமாறு :

            1.மாவட்டக்கல்வித் திட்டமிடலுக்குத் தேவையான அனைத்துப் புள்ளி விவரங்களையும் தகவல்களையும் பராமரித்தல்.
            2.பின்வரும் கருத்து சார்ந்த மாவட்ட நிலையில் திட்டமிட ஆய்வினை மேற்கொள்ளல் 
                          
                  அ .மாணவர் சேர்க்கை ,தக்கவைத்தல் மாணவர்கள் வருகை விழுக்காடு திறனடைவு
                  ஆ.சிறப்புக்கவனம் தேவைப்படும் மாணவர்கள் தாழ்த்தப்பட்ட பழங்குடியினர் ஆகியோரின் கல்விநிலை 
                  இ .பள்ளியின் செயல்பாட்டை மதிப்பிடல் 
            3.அனைத்து கல்விசார் குறியீடுகளை ஆய்வு செய்வதற்காக ஆய்வு களத்தைத் தேர்ந்தெடுத்து ஆய்வு மேற்கொள்ளல் 
            4.பள்ளி வரைபடம்,நிறுவனத்திட்டமிடல் போன்ற செயல்பாடுகளை மேற்கொள்வதற்காகத்தலைமை ஆசிரியர்களுக்குப் பயிற்சி அளித்தல் 
            5.சமுதாயத்தை சார்ந்த மக்கள் ,தன்னார்வத் தொண்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள் ,கிராமக்கல்விக்குழு உறுப்பினர்கள் ஆகியோருக்கிடையே கல்வியின் முன்னேற்றத்தில்,சமுதாயத்தின் பங்கினை வலியுறுத்திப் பயிற்சி அளித்தல் மேற்கோள்:திண்டுக்கல் மாவட்டம் ,ஓட்டன்சத்திரம்- மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன நாட்காட்டி :2016-2017