திட்டக்குடி வைத்தியநாதர் கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

திட்டக்குடி வைத்தியநாதர் கோயில் தமிழ்நாட்டில் கடலூர் மாவட்டத்தில் உள்ள சிவன் கோயிலாகும்.

அமைவிடம்[தொகு]

இக்கோயில் கடலூர் மாவட்டத்தில் விருத்தாச்சலம் அருகில் திட்டக்குடி என்னுமிடத்தில் அமைந்துள்ளது. வசிஷ்டர் வழிபட்டதால் இவ்விடம் வசிட்டபுரி என்றழைக்கப்பட்டு, வசிட்டக்குடி என்றாகி பின்னர் திட்டக்குடி என்றழைக்கப்படுகிறது. ஒரு காலத்தில் வேங்கை மரங்கள் அதிகமாக இருந்ததால் இவ்விடம் வேங்கைவனம் என்றும் அழைக்கப்பட்டது.[1]

இறைவன், இறைவி[தொகு]

இக்கோயிலின் மூலவராக வைத்தியநாதர் உள்ளார். இறைவி அசனாம்பிகை ஆவார்.[1]

வரலாறு[தொகு]

சூரியன் தன் கிரகணங்களால் வழிபடும் தலங்களில் இக்கோயிலும் ஒன்றாகும். கௌதம முனிவரின் பதிவிரதையான அகலிகை மீது ஆசை கொண்ட இந்திரன், முனிவரால் சபிக்கப்பட்டான்.சாப விமோசனம் பெற ஒவ்வொரு கோயிலாகச் சென்றான். பின்னர் சிவனருளால் அவனுடைய சாபம் நீக்ப் பெற்றான். அப்போது இறைவனிடம் தன்னைப் போல பிறருக்கும் இறைவன் அருள் தரவேண்டும் என்று கேட்டுக்கொண்டான்.இந்திரன் வேண்டுகோளை இறைவன் ஏற்றார்.[1]

விழாக்கள்[தொகு]

பிரதோஷம், சிவராத்திரி, நடராஜருக்குத் திருவாதிரை, இறைவிக்கு நவராத்திரி, மற்றும் சித்திரை, பங்குனி மாதங்களிலும் விழாக்கள் நடைபெறுகின்றன.[1]

மேற்கோள்கள்[தொகு]

2. Click Link -> திட்டக்குடி வைத்தியநாத சுவாமி ஆலய வரலாறு- Detail Video-2020