திடீர்க் குழந்தை இறப்பு நோய்க்கூட்டறிகுறி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

குழந்தை திடீர் இறப்பு நோயறிகுறி (Sudden infant death syndrome) என்பது திடீரென எந்த ஒரு காரணமும் இன்றிக் குழந்தை இறந்து போதல், "திடீர் சிசு மரணம் நோய்" கட்டில் சாவு, திடீர் சாவு எனப் பலவாறாக அழைக்கப்படுகிறது. இது ஒரு வயதுக்குக் குறைவான குழந்தை உடன் நலனில் என்ன குறை என்று விளக்க முடியாதபடி திடீரென இறந்து போவதைக் குறிக்கிறது.[1]

முழுமையான பிரேதப் பரிசோதனை மற்றும் குழந்தை இறந்த சூழலின் விசாரணைக்குப் பிறகும், தூக்கத்திலேயே குழந்தை இறந்ததற்கான உண்மைக் காரணம் விளக்க முடியாமல், ஆய்வுக்குட்பட்ட நிலையிலேயே இருக்கிறது.[2] இது வழக்கமாகத் தூக்கத்திலேயே நிகழ்கிறது.[3] பொதுவாக இவ்வகை மரணங்கள் நள்ளிரவுக்கும், காலை 9 மணிக்கும் இடைப்பட்ட வேளையில் நடக்கின்றன.[4] எனவே அந்தக் குழந்தை மூச்சுத் திணறியதோ, போராடியதற்கான எந்த அறிகுறியோ சத்தமோ தெரிவதில்லை.[5]

சான்றுகள்[தொகு]

  1. "Sudden Infant Death Syndrome (SIDS): Overview" (27 June 2013). மூல முகவரியிலிருந்து 23 February 2015 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 9 March 2015.
  2. "Centers for Disease Control and Prevention, Sudden Infant Death". மூல முகவரியிலிருந்து March 18, 2013 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் March 13, 2013.
  3. "The sudden infant death syndrome". N. Engl. J. Med. 361 (8): 795–805. 2009. doi:10.1056/NEJMra0803836. பப்மெட்:19692691. 
  4. Optiz, Enid Gilbert-Barness, Diane E. Spicer, Thora S. Steffensen ; foreword by John M. (2013). Handbook of pediatric autopsy pathology (Second edition. ). New York, NY: Springer New York. பக். 654. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1-4614-6711-3. https://books.google.com/books?id=yaPjAAAAQBAJ&pg=PA654. 
  5. Scheimberg, edited by Marta C. Cohen, Irene (2014). The Pediatric and perinatal autopsy manual. பக். 319. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1-107-64607-0. https://books.google.com/books?id=t33sAwAAQBAJ&pg=PA319.