திஞ்சா அருவி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

திஞ்சா அருவி (Tincha Waterfall) இந்தியாவின் மத்தியப் பிரதேச மாநிலத்தில் உள்ள இந்தூர் மாவட்டத்தின் தில்லூர் கிராமத்தில் அமைந்துள்ளது. [1]

நீர்வீழ்ச்சி[தொகு]

மழைக்காலம் முடிந்த உடனேயே பொதுவாக சூலை மாதத்திற்குப் பிறகு இங்கு நீர் வரத்து அதிகமாக இருக்கும். கோடை காலத்தில் இந்த அருவி கிட்டத்தட்ட வறண்டு போகிறது, மேலும் நீரோடையும் குறைகிறது. திஞ்சா அருவியைச் சுற்றியுள்ள பகுதி பிரபலமான சுற்றுலா மற்றும் மலையேற்ற இடமாகும். [2]

அமைவிடம்[தொகு]

அருகிலுள்ள விமான நிலையம் இந்தூர் பன்னாட்டு விமான நிலையம் ஆகும், இது நீர்வீழ்ச்சியிலிருந்து சுமார் 40 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. மீதமுள்ள தூரத்தை சாலை அல்லது ரயில் போக்குவரத்து மூலம் கடக்க வேண்டும். தில்லூர் அருகில் உள்ள சிறு நகரம் ஆகும்.

இரயில்[தொகு]

அருவிக்கு அருகில் உள்ள இரயில் நிலையம் இந்தூர் சந்திப்பு ரயில் நிலையம் ஆகும். இது நீர்வீழ்ச்சியிலிருந்து 30 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது .

சாலை[தொகு]

சாலை வழியாக இங்கு செல்ல, முதலில் இந்தூர் மாவட்டத்தில் உள்ள தில்லூர் நகரத்தை அடைய வேண்டும். அங்கிருந்து உள்ளூர் சாலைகள் வழியாக 9 கிலோமீட்டர் தொலைவில் நீர்வீழ்ச்சி அமைந்துள்ளது .

விபத்துக்கள்[தொகு]

கடந்த சில சமயங்களில் அருவி அருகே விபத்துகள் நடந்துள்ளன. சுற்றுலாவுக்குச் சென்ற மாணவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். [3] 2018 ஆம் ஆண்டில் ஓர் இளைஞர் பள்ளத்தாக்கில் தவறி விழுந்தார் [4]

மேற்கோள்கள்[தொகு]

  1. Chowdhary, Charu (28 Jan 2019). "Here’s What You Can do on a Short Visit to Indore" (in English). India.com. https://www.india.com/travel/articles/heres-what-you-can-do-on-a-short-visit-to-indore-3547079/. 
  2. Kamei, Precious (11 Dec 2018). "Explore the adventurous side of you in Madhya Pradesh with these outdoor activities". Outlookindia.com. https://www.outlookindia.com/outlooktraveller/explore/story/69255/madhya-pradesh-as-a-great-adventure-sports-destination. 
  3. NA, Faiz (4 Mar 2021). "Two students drowned in Tincha falls, one body found, search for the other is in progress" (in Hindi). Patrika.com. https://www.patrika.com/indore-news/2-students-drowned-in-tincha-fall-1-body-found-rescue-progress-6728377/. 
  4. Kotwal, Karishma (8 Jul 2018). "Youth slips into 100-feet-deep gorge at Tincha Falls in Indore, dies" (in English). timesofindia.indiatimes.com. https://timesofindia.indiatimes.com/city/indore/youth-slips-into-100-feet-deep-gorge-at-tincha-falls-in-indore/articleshow/64909348.cms. 

 

"https://ta.wikipedia.org/w/index.php?title=திஞ்சா_அருவி&oldid=3529751" இலிருந்து மீள்விக்கப்பட்டது