திசூரி வன்னியாராச்சி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இரண்டாவது நூல் வெளியீட்டின்போது வன்னியராச்சி

திசூரி வன்னியராச்சி (Thisuri Wanniarachchi ) என்பவர் இலங்கை எழுத்தாளர் ஆவார்.[1] கொழும்பு தெருக்கள் எனும் நூலின் மூலம் பரவலாக அறியப்படுகிறார். தனது பதினான்காம் வயது முதல் இவர் எழுதி வருகிறார். 2009 ஆம் ஆண்டில் மாநில அரசின் இலக்கிய விருதினைப் பெற்றார்.[2][3] கொழும்பு , இலங்கையில் உள்ள புனித பிரிட்ஜெட்ஸ் மாடப் பள்ளியில் துவக்க மற்றும் இடைநிலைக் கல்வியினைப் பயின்றார். பின் இவர் கொழும்பில் உள்ள பிரிட்டிசுப் பள்ளியில் பயின்றார்.[4][5] இவர் பொருளாதாரா அரசியல் பிரிவில் இளங்கலைப் பட்டத்தினை பென்னிங்டன் கல்லூரியில் பயின்றார். தற்போது இவர் கொழும்புப் பல்கலைக்கழகத்தில் பொதுப் பொருளாதாரப் பிரிவில் பி எச். டி பயின்று வருகிறார். இவர் தற்போது இலங்கையின் பிரதமராக உள்ள மைத்திரிபால சிறிசேன அமைச்சகத்தில் குன்றா வளர்ச்சிப் பிரிவில் உதவி இயக்குநராகப் பணியாற்றி வருகிறார்.[5]

குழந்தைப்பருவம்[தொகு]

வன்னியராச்சி செப்டம்பர் 25, 1993 இல் இலங்கையில் பிறந்தார். இவரின் தாய் மல்ராஜி வன்னியராச்சி ஒரு சமூக செயற்பாட்டாளர் மற்றும் எழுத்தாளர் ஆவார். இவரின் தந்தை இலங்கை இராணுவ மேஜர். ஜெனரல் சுனில் வன்னியராச்சி ஆவார்.[6] ஈழப் போர் நடந்து கொண்டிருந்த சமயத்தில் இவர் இலங்கையில் படித்துக் கொண்டிருந்தார்.[7] கொழும்பு , இலங்கையில் உள்ள புனித பிரிட்ஜெட்ஸ் மாடப் பள்ளியில் துவக்க மற்றும் இடைநிலைக் கல்வியினைப் பயின்றார். பின் அவர் கொழும்பில் உள்ள பிரிட்டிசுப் பள்ளியில் முழு உதவித் தொகையுடன் பயின்றார்.[8]

நூல்கள்[தொகு]

வன்னியராச்சி இரு நூல்களை எழுதியிள்ளார். கொழும்பு தெருக்கள் மற்றும் தீவிரவாதியின் மகள் ஆகியன ஆகும்.[9][10][11][12] இவருக்கு பதினான்காவது வயதாக இருக்கும் போது கொழும்பு தெருக்கள் எனும் நூலினை எழுதினார்.[13] இலங்கையில் உள் நாட்டுப்போர் நடந்து கொண்டிருந்த வேளையில் பல்வேறு வகையான பொருளாதாரப் பிண்ணனி கொண்ட பெண் குழந்தைகள் சந்தித்தவைகள் பற்றி இந்த நூலில் எழுதினார். இந்த நூல் இலங்கையில் அதிகம் விற்பனையாகியது.[14] மேலும்  இலங்கை அரசின் இலக்கிய விருதினையும் பெற்றுத் தந்தது.[15]

தீவிரவாதியின் குழந்தை எனும் நூலினை பென்னிங்டன் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்துக் கொண்டிருக்கும் போது எழுதினார். இந்த நூலினை 2014 ஆம் ஆண்டில் ஆகஸ்டு மாதத்தில் வெளியிட்டார்.  தீவிரவாதியின் மகள் எனும் இந்த நூலானாது காதல் புதினம் ஆகும். இந்த நூலில் இலங்கையில் நடந்த உள்நாட்டுப் போருக்குப் பிறகான அரசியல் சூழ்நிலைகளைப் பற்றி விவாதித்திருக்கும்.

அரசியல்[தொகு]

வன்னியராச்சி இலங்கையின் அரசியல் மற்றும் கல்வி மறுமலர்ச்சிக்காகப் போராடுபவர் ஆவார். இவை பற்றிய விவாதங்களில் கலந்துகொண்டு உரையாடியுள்ளார். 2015 ஆம் ஆண்டில் கொழும்பில் நடைபெற்ற தாவோஸ் உலகப்பொருளாதர மன்றம் இணைந்து நடத்திய நிகழ்வில் இலங்கையின் கல்வியில் ஏற்படுத்த வேண்டிய மாற்றங்கள் குறித்து இவர் உரையாடினார்.

2014 ஆம் ஆண்டில் இலங்கையின் உயர்நிலைக் கல்வி அமைச்சகத்தின் முதிர்மாணவ மருத்துவராகவும் 2015 ஆம் ஆண்டில் இலங்கைப் பிரதமர் மைத்திரிபால சிறிசேனவின் பிரதம செயலகத்தில் முதிர்மாணவ மருத்துவராகவும் பணியாற்றினார்.[16]

இலங்கையின் முண்னனி ஆட்சி இயல் அறிஞரான தயன் எயதிலேகா தீவிரவாதியின் மகள் எனும் நூலினைப் பற்றிக் கூறும்போது ஈழப் போருக்குப் பிறகான அரசியல் சூழ்நிலையைப்பற்றிய முக்கிய இலக்கியம் என்றும் நல்லிணக்கத்திற்கான பாதை எனவும் இலங்கையின் அரசியல் பற்றிய கொள்கை அறிவிப்பாகவும் உள்ளது எனக் கூறினார்.[17] 2015 ஆம் ஆண்டிற்கான மாநில அரசின் இலக்கிய விருதிற்கு இந்த நூல் பரிந்துரை செய்யப்பட்டது.[18]

2014 ஆம் ஆண்டில் செரில் சாண்ட்பர்க் எழுதிய லீன் இன் எனும் நூலில் வன்னியராச்சியின் கதையும் இடம்பெற்றுள்ளது.[19]

ஆங்கில பரப்பிசைக் கலைஞரான சாம் சிமித் இவரின் வார்த்தைகளை சமூக ஊடக கணக்குகளில் மேற்கோளாக காட்டியுள்ளார்.[20]

சான்றுகள்[தொகு]

 1. "Colombo Streets (interview)". Sunday Times. 20 November 2014 அன்று பார்க்கப்பட்டது.
 2. "Thisuri's dream award". Nation. 5 டிசம்பர் 2014 அன்று மூலம் பரணிடப்பட்டது. 20 November 2014 அன்று பார்க்கப்பட்டது.
 3. Hussain, Nabeela (November 8, 2010). "A budding novelist". The Daily Mirror (subscription required). Archived from the original on 29 மார்ச் 2015. https://web.archive.org/web/20150329055452/http://www.highbeam.com/doc/1P3-2183069521.html. பார்த்த நாள்: 20 November 2014. 
 4. Athukorala, Prabuddha. "Thisuri grabs top honours with the pen". Daily News. 20 November 2014 அன்று பார்க்கப்பட்டது.
 5. 5.0 5.1 "'The Terrorist's Daughter' (review)". Daily FT. 27 நவம்பர் 2014 அன்று மூலம் பரணிடப்பட்டது. 20 November 2014 அன்று பார்க்கப்பட்டது.
 6. "Archived copy". 27 நவம்பர் 2014 அன்று மூலம் பரணிடப்பட்டது. 20 நவம்பர் 2014 அன்று பார்க்கப்பட்டது.CS1 maint: archived copy as title (link)
 7. "Thisuri Wanniarachchi". Goodreads.com. 30 October 2017 அன்று பார்க்கப்பட்டது.
 8. "Thisuri Wanniarachchi". Thisuriwanniarachchi.com. 30 November 2011. 30 அக்டோபர் 2017 அன்று மூலம் பரணிடப்பட்டது. 30 October 2017 அன்று பார்க்கப்பட்டது.
 9. "COLOMBO STREETS". Goodreads.com. 30 October 2017 அன்று பார்க்கப்பட்டது.
 10. "The Terrorist's Daughter". Goodreads.com. 30 October 2017 அன்று பார்க்கப்பட்டது.
 11. "Terrorists Daughter". Vijithayapa.lk. 7 நவம்பர் 2017 அன்று மூலம் பரணிடப்பட்டது. 30 October 2017 அன்று பார்க்கப்பட்டது.
 12. "Colombo Streets". Vijithayapa.lk. 7 நவம்பர் 2017 அன்று மூலம் பரணிடப்பட்டது. 30 October 2017 அன்று பார்க்கப்பட்டது.
 13. "Colombo Streets". Sundaytimes.lk. 30 October 2017 அன்று பார்க்கப்பட்டது.
 14. "Archived copy". 5 திசம்பர் 2014 அன்று மூலம் பரணிடப்பட்டது. 20 நவம்பர் 2014 அன்று பார்க்கப்பட்டது.CS1 maint: archived copy as title (link)
 15. "Artscope - Online edition of Daily News - Lakehouse Newspapers". archives.dailynews.lk. 30 October 2017 அன்று பார்க்கப்பட்டது.
 16. "Progress is coming by way of participatory democracy - The Sunday Times Sri Lanka". Sundaytimes.lk. 30 October 2017 அன்று பார்க்கப்பட்டது.
 17. Thisuri Wanniarachchi (30 August 2014). ""The road map to reconciliation."". யூடியூப். 30 October 2017 அன்று பார்க்கப்பட்டது.
 18. Department. "Nominated Books For the State Literary Awards 2015". Culturaldept.gov.lk. 7 நவம்பர் 2017 அன்று மூலம் பரணிடப்பட்டது. 30 October 2017 அன்று பார்க்கப்பட்டது.
 19. "Thisuri Wanniarachchi". Leanin.org. 30 October 2017 அன்று பார்க்கப்பட்டது.
 20. Rutter, Claire (3 February 2015). "Sam Smith pokes fun at cute throwback photo: "When I was uber fat"". Mirror.co.uk. 30 October 2017 அன்று பார்க்கப்பட்டது.

}}

வெளி இணைப்புகள்[தொகு]