திசு தடிமனாதல் (மருத்துவம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
Sclerosis (medicine)Sclerosis (medicine)
Lichen sclerosus - very high mag.jpg
Micrograph of subepithelial sclerosus (middle third of image) in a case of lichen sclerosus. H&E stain.Micrograph of subepithelial sclerosus (middle third of image) in a case of lichen sclerosus. H&E stain.
வகைப்பாடு மற்றும் வெளிச்சான்றுகள்
MeSHD012598

திசு தடிமனாதல் என்ற சொல் மருத்துவத்தில்,  (கிரேக்க வார்த்தை σκληρός "கடினமாதல்" - சில குறைபாடுகளின் பெயர்களில் ஸ்க்லெரோஸஸ் எ ன்று அழைக்கப்படுகிறது)  பொதுவாக கட்டமைப்பு ரீதியான திசுக்கள் இணைப்பு திசுவுடன் மாற்றப்படுவதன் மூலம் ஏற்படுகின்ற ஒரு விறைப்பான அமைப்பு நிலை ஆகும்.ஓர் அமைப்பு தடித்த தோல் மாற்றங்கள் அல்லது தடித்த தோல் சிதைவுகளைக் அடைவதையே ம் இந்த திசு தடிமனாதல் செயல்முறை குறிக்கிறது.

திசு தடிமனாதல் நோய்த்தொற்று உள்ள நோயாளியின் பொதுவான மருத்துவ நிலைகள் பின்வருமாறு:

 • அமையோடிரோபிக் பக்கவாட்டு திசு தடிமனாதல்;  சில நேரங்களில், லு கெஹிக்ர்க் நோய் என அழைக்கப்படும் இது  இயக்க நரம்புகளில் ஏற்படும் ஒரு முற்போக்கான, குணப்படுத்த இயலாத, மரண நோய்.
 • தமனிக்கூழ்மைத் தடிப்பு ;கொலஸ்டிரால் போன்ற கொழுப்புப் பொருட்கள் தமனிகளில் படிவதால் கடினத்தன்மை ஏற்படுதல்
 • தடித்த கிளாமருலஸின் குவிந்த பகுதி; இது சிறுநீரகத்தின் வடிகட்டி முறையை பாதிக்கும் ஒரு வகை நோய். இது கிளாமருலஸ் பகுதியில் கடுமையான வடுக்களை  ஏற்படுத்தி  குழந்தைகள் மற்றும் வளர் இளம்பருவத்தினரிடையே நெப்ரோடிக் நோய் அறிகுறிகளும் பெரியவர்களில் சிறுநீரக செயலிழப்புக்கும் முக்கிய காரணமாக உள்ளது.
 • ஹிப்போகாம்பல் திசு தடிமனாதல்;தற்காலிக மயிர் கால்-கை வலிப்பு கொண்ட தனிநபர்களில்  மூளை சேதம் அடிக்கடி காணப்படுகிறது.
 • லைக்கன் திசு தடிமனாதல் ; ஆண் மற்றும் பெண்குறிகளின் இணைப்புத் திசுக்களை கடினமாக்கும்   ஒரு தன்னுடல் தாங்குதிறன் நோய்.
 • தண்டுவட மரப்பு நோய்,அல்லது குவிந்த திசு தடிமனாதல்[1] ஒருங்கிணைப்புகளை பாதிக்கும் மத்திய நரம்பு மண்டல நோய்கள் .
 • எலும்புத்திசு தடிமனாதல், எலும்பு அடர்த்தி கணிசமாக அதிகரித்துள்ள நிலையில், ரேடியோகிராஃப்களில் அதிகமான வெளிச்சம் ஏற்படுதல்
 • செவித்திசு தடிமனாதல் , காதுகளின் ஒரு நோய்.
 • சீரான திசு தடிமனாதல் (முற்போக்கான அமைப்பு ஸ்கிளீரோடெர்மா), ஓர் அரிய, நாள்பட்ட  தோலைப் பாதிக்கும் நோய், மற்றும் சில நேரங்களில் இரத்த நாளங்கள் மற்றும் உள் உறுப்புகளில்.
 • நாளங்களில் திசு தடிமனாதல்; பல்வேறு அமைப்புகளை பாதிக்கும் ஓர் மரபியல் நோய்a 
 • முதன்மை திசு தடிமனாதல் ; மீண்டும் மீண்டும் ஏற்படும் வீக்கம் மற்றும் வடுக்களால் பித்த நாளம் கடினமாதல் 
 • முதன்மை பக்கவாட்டுத்திசு தடிமனாதல் ;, இயக்கத்தசைகள் பலவீனமடைதல்

கல்லீரல் திசு தடிமனாதல்  என்பதே கல்லீரல் பாதிப்பு

பார்வை நூல்கள்[தொகு]

 1. "Focal sclerosis definition - Medical Dictionary definitions of popular medical terms easily defined on MedTerms". Medterms.com (2012-09-20). பார்த்த நாள் 2013-01-12.