திசியா காரா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
திசியா காரா
Ticia Gara
Gara Ticia.jpg
2007 இல் திசியா காரா
முழுப் பெயர்திசியா காரா
நாடு அங்கேரி
பிறப்புஅக்டோபர் 25, 1984 (1984-10-25) (அகவை 35)
புடாபெசுட்டு அங்கேரி
தலைப்புபெண் கிராண்டு மாசுட்டர் (2002)
FIDE தரவுகோல்2317 (அக்டோபர் 2017)
எலோ தரவுகோள்2385 (செப்டம்பர் 2012)

திசியா காரா (Tícia Gara) என்பவர் அங்கேரி நாட்டைச் சேர்ந்த பெண் சதுரங்க கிராண்டு மாசுட்டர் ஆவார். இவர் 1984 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 25 ஆம் நாள் பிறந்தார். பிடே அமைப்பு வழங்கும் பெண் கிராண்டு மாசுட்டர் பட்டத்துடன் இவர் சதுரங்கம் விளையாடி வருகிறார். 2006 மற்றும் 2007 ஆம் ஆண்டுகளில் இவர் அங்கேரிய நாட்டின் பெண்கள் சாம்பியனாக இருந்தார்[1]. 2009 ஆம் ஆண்டு நடைபெற்ற இப்போட்டியில் திசியா காராவும் அவருடைய சகோதரி அனிதாவும் முதல் இடத்திற்கான போட்டியில் சமநிலைப் புள்ளிகளை எடுத்தனர். சமநிலை முறிவுப் போட்டியில் அனிதா அப்போட்டியில் பட்டம் வென்றார்[2]. மகளிர் சதுர ஒலிம்பியாடு, மகளிர் ஐரோப்பிய அணி சதுரங்க சாம்பியன் போட்டி, ஐரோப்பிய இளையோர் பெண்கள் அணி சாம்பியன் போட்டி மற்றும் மகளிர் மிட்ரோபா கோப்பை ஆகிய போட்டிகளில் அங்கேரிய அணியின் சார்பாக போட்டியிட்ட அணிகளில் திசியா காராவும் அங்கம் வகித்தார். ஆத்திரியாவின் மேரோபெனில் 2015 ஆம் ஆண்டு நடைபெற்ற மகளிர் மிட்ரோபா கோப்பை போட்டியில் அங்கேரி அணி தங்கப்பதக்கம் வென்றது. ஆறு ஆட்டங்களில் போட்டியிட்டு ஆறு ஆட்டங்களிலும் வெற்றிகளை ஈட்டி காரா அவ்வெற்றியில் பெரும் பங்கு வகித்தார்[3].

மேற்கோள்கள்[தொகு]

  1. "Khurtsidze, Muzychuk, Gara win Hungarian Championship". ChessBase. 2006-09-22.
  2. "Hungarian Women Chess Championship". Chessdom. Chessdom.com. பார்த்த நாள் 6 October 2011.
  3. "Austria and Hungary are winners of 2015 Mitropa Cup". Susan Polgar Global Chess Daily News and Information. 2015-06-27. http://web.chessdailynews.com/austria-and-hungary-are-winners-of-2015-mitropa-cup/. 

புற இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=திசியா_காரா&oldid=2707524" இருந்து மீள்விக்கப்பட்டது