திசா ரவி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

திசா அண்ணப்பா ரவி (Disha Annappa Ravi பிறப்பு 1998/99, பெங்களூர் ) [1] ஓர் இந்திய இளைஞர் காலநிலை மாற்ற ஆர்வலர் மற்றும் ஃபிரைடே ஃபார்யூச்சர் இந்தியா நிறுவனர் ஆவார். கிரெட்டா துன்பெர்க் மற்றும் 2020-2021 இந்திய விவசாயிகள் போராட்டங்கள் தொடர்பான இணையத்தள கருவித்தொகுப்பில் ஈடுபட்டதாகக் கூறி 2021 பிப்ரவரி 13 அன்று அவர் கைது செய்யப்பட்டமை சர்வதேச கவனத்தை ஈர்த்தது. [2] [3] இந்திய அரசு இந்த கருவித்தொகுப்பின் மூலம் இவர், ஒரு நிலையான சமூக நீதி தகவல் தொடர்பு மற்றும் அமைப்பு ஆவணத்தின் மூலம், [4] விவசாயிகளின் போராட்டங்களை ஆதரிப்பதற்கான வழிகளின் பட்டியலை வழங்குகிறது, [5] அமைதியின்மை மற்றும் ஒரு தேசத்துரோகத்தை தூண்டியது ஆகிய குற்றச் சாட்டுகளில் இவர் கைது செய்யப்பட்டார் . [6] [7] இந்த கைது இந்தியாவிலும், சர்வதேச அளவிலும் பரவலாக விமர்சிக்கப்பட்டது. [1]

பின்னணி[தொகு]

திசா இந்தியாவின் பெங்களூருவைச் சேர்ந்த காலநிலை ஆர்வலர் ஆவார் [8] மேலும் இந்தியாவில் பிரைடே ஃபார் பியூச்சரின் (FFF இந்தியா) நிறுவனர்களில் ஒருவர். [9] [10] தி க்விண்ட்டின் படி, திசா பிரைடே ஃபார் பியூச்சர் இயக்கத்தின் மபா பிரிவின் ஒரு பகுதியாகும், மேலும் "மபா என்பது மிகவும் பாதிக்கப்பட்ட மக்கள் மற்றும் பகுதிகளைக் குறிக்கிறது. [11] ஆட்டோ ரிப்போர்ட் ஆப்பிரிக்காவுக்கு அளித்த பேட்டியில், திசா , "காலநிலைச் செயல்பாட்டில் சேருவதற்கான எனது உந்துதல், விவசாயிகளாகிய என் தாத்தா பாட்டி, காலநிலை நெருக்கடியின் விளைவுகளுடன் போராடுவதைப் பார்த்ததன் மூலம் வந்தது," மற்றும் "அந்த நேரத்தில், எனக்கு தெரியாது அவர்கள் அனுபவித்தது காலநிலை நெருக்கடி, ஏனென்றால் நான் இருந்த பகுதியில் காலநிலை கல்வி என்று ஒன்று இல்லை." [12]

திசா தேவைப்படும் சமூகங்களுக்கு குரல் கொடுப்பதில் கவனம் செலுத்துகிறார் [13] [14] மற்றும் சர்வதேச இளைஞர் காலநிலை ஆர்வலர்களுக்கான பல தலையங்கங்கள் மற்றும் கட்டுரைகளின் ஆசிரியராகவும் உள்ளார். [15] [16] அவர் செப்டம்பர் 2020 பிரித்தானிய வோக் பத்திரிகை சுயவிவரத்தில் சுற்றுச்சூழல் இனவெறிக்கு எதிராக வேலை செய்தார். [17] [18] பிப்ரவரி 15, 2021 அன்று, தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் இவரை "பெங்களூரு கிரெட்டா" என்று குறிப்பிட்டது. [19]

செப்டம்பர் 2020 இல், திசா , "நாங்கள் காலநிலை நெருக்கடியில் வாழ்வதால் நான் வேலைநிறுத்தம் செய்கிறேன். அதற்கான காரணமாக, பலத்த மழை மற்றும் அரசாங்கங்கள் எடுத்த பற்றாக்குறையான நடவடிக்கைகள் காரணமாக, குறிப்பாக இந்தியாவில் வெள்ளம் காரணமாக இலட்சக்கணக்கான மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர். கடந்த வாரம் எனது வீடு வெள்ளத்தில் மூழ்கியது" என்று விளக்கினார். [20] ரவி தி கார்டியனிடம் , "நாங்கள் எங்கள் எதிர்காலத்திற்காக மட்டும் போராடவில்லை, நமது நிகழ்காலத்திற்காக போராடுகிறோம். அரசாங்கத்தின் உதவியாளனாக அல்லாது , மிகவும் பாதிக்கப்பட்ட மக்களான நாங்கள், காலநிலைப் பேச்சுவார்த்தைகளில் உரையாடலை மாற்றி, மக்களுக்கு பயனளிக்கும் ஒரு நியாயமான மீட்புத் திட்டத்தை வழிநடத்தப் போகிறோம் " என்று கூறினார். [21]

2020 ஆம் ஆண்டில், திசா கூறினார், "ஃப்ரைடே பார் பியூச்சர்" என்பது ஒற்றை இலக்கு கொண்டதாக இல்லை. முன்னதாக காலநிலை அவசர நிலையை அறிவிப்பதே எங்கள் குறிக்கோளாக இருந்தது. காலநிலை அவசர நிலையை அறிவித்த நாடுகள் அதனை சரி செய்ய செயல்படவில்லை, அப்போதுதான் நாங்கள் காலநிலை நீதியை விரும்புகிறோம் என்று முடிவு செய்தோம். எங்களிடம் குறிப்பிட்ட கோரிக்கைகள் இல்லை, ஒவ்வொரு நாடுகளுக்கும் ஏற்றவாறு நாங்கள் கோரிக்கையினை வைக்க முயற்சிக்கிறோம்." [9] ஜெனரல் இசட் காலநிலை ஆர்வலர்கள் பற்றிய புத்தகத்திற்காக 2020 ஆம் ஆண்டு அமெரிக்க எழுத்தாளர் கெய்ல் கிம்பாலுக்கு அளித்த பேட்டியில், ரவி, "இந்திய சுதந்திரப் போராட்டம் அமைதியான போராட்டமாக வேரூன்றியதிலிருந்தே இந்தியாவில் போராட்டங்கள் வாழ்க்கையின் ஒரு பகுதியாக அமைந்துள்ளது. மனிதாபிமான பிரச்சனைகள் மற்றும் மத பிரச்சனைகள் மீது நிறைய போராட்டங்கள் இந்திய சமூகத்தில் மிகவும் வேரூன்றியுள்ளன. சமீபத்திய நாட்களில் சமூக ஊடகங்கள் இதற்கு உதவியுள்ளன" என்று கூறினார்.

சான்றுகள்[தொகு]

  1. 1.0 1.1 Ellis-Petersen, Hannah (February 17, 2021). "Disha Ravi: the climate activist who became the face of India's crackdown on dissent". https://www.theguardian.com/world/2021/feb/18/disha-ravi-the-climate-activist-who-became-the-face-of-indias-crackdown-on-dissent. 
  2. "India activist Disha Ravi arrested over 'toolkit'" (in en-GB). 2021-02-14. https://www.bbc.com/news/world-asia-india-56060232. 
  3. "Delhi Police Arrests Climate Activist Disha Ravi, Who is She?". 15 February 2021. https://www.thequint.com/news/india/delhi-police-arrests-climate-activist-disha-ravi-who-is-she. 
  4. "Explainer: What does the Greta Thunberg 'toolkit' cited as a sign of 'conspiracy' actually contain?". Scroll.in (in அமெரிக்க ஆங்கிலம்). 4 February 2021. Archived from the original on 2021-02-14. பார்க்கப்பட்ட நாள் 2021-02-14.
  5. Yeung, Jessie (15 February 2021). "Climate activist Disha Ravi arrested in India over farmers' protest 'toolkit'". https://www.cnn.com/2021/02/15/asia/india-farmers-protest-activist-disha-ravi-intl-hnk/index.html. 
  6. "21-year-old activist 'picked up' in Bengaluru for Greta 'toolkit'". 14 February 2021. https://www.newindianexpress.com/cities/bengaluru/2021/feb/14/21-yr-old-activist-picked-up-in-bluru-for-greta-toolkit-2263830.html. 
  7. "'Key conspirator, collaborated with pro-Khalistani body': Delhi Police on Disha Ravi, arrested in toolkit case". 2021-02-14. Archived from the original on 2021-02-14. பார்க்கப்பட்ட நாள் 2021-02-14.
  8. Chan, Emily (26 September 2020). "4 Activists Of Colour On The Urgent Need To Counteract Environmental Racism". British Vogue. Archived from the original on 2020-11-02. பார்க்கப்பட்ட நாள் 2020-11-12.
  9. 9.0 9.1 "Farmers toolkit case: Aarey to EIA, Goa to Dehra Dun, Disha Ravi part of many climate causes". https://indianexpress.com/article/india/farmers-toolkit-case-arrested-activist-disha-ravi-an-mba-who-found-her-calling-in-environmental-causes-7188792/. 
  10. Abraham, Bobins (15 February 2021). "What Is Fridays For Future, One Of The Causes Arrested Activist Disha Ravi Was Associated With". India Times. Times Internet Limited. Archived from the original on 16 February 2021. பார்க்கப்பட்ட நாள் 15 February 2021.
  11. "Now Charged With Sedition, Disha Fought for India at FFF Globally". https://www.thequint.com/news/india/disha-ravi-charged-with-sedition-advocated-for-india-at-global-fff-forum-climate-change-toolkit-farmers-protest. 
  12. "Fighting for our present, not just our future: Global youth climate strikes are back". https://www.autoreportafrica.com/fighting-for-our-present-not-just-our-future-global-youth-climate-strikes-are-back/. 
  13. Kumar, Manasi Paresh (2019-12-24). "How Bengaluru youth are taking part in the global movement against climate change". Citizen Matters, Bengaluru (in பிரிட்டிஷ் ஆங்கிலம்). Archived from the original on 2020-11-12. பார்க்கப்பட்ட நாள் 2020-11-12.
  14. Noticias, ANCCOM (2020-09-23). "Proyectorazo por la crisis ambiental". ANCCOM (in ஸ்பானிஷ்). Archived from the original on 2020-11-16. பார்க்கப்பட்ட நாள் 2020-11-12.
  15. "From climate activist to 'Toolkit Editor', who is Disha Ravi?". https://economictimes.indiatimes.com/news/politics-and-nation/from-climate-activist-to-toolkit-editor-who-is-disha-ravi/articleshow/80912284.cms. 
  16. Kia, Kara (2020-11-19). "Greta Thunberg, David Attenborough, and the Climate Conversation's White Saviour Problem". POPSUGAR News (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-02-15.
  17. "Who is Disha Ravi? All you need to know about the 21-year-old climate change activist held in Greta Thunberg toolkit case". https://www.freepressjournal.in/india/who-is-disha-ravi-all-you-need-to-know-about-the-21-year-old-climate-change-activist-held-in-greta-thunberg-toolkit-case. 
  18. Lalwani, Vijayta (14 February 2021). "Who is Disha Ravi, the climate activist arrested by Delhi police?". Scroll.in (in அமெரிக்க ஆங்கிலம்). Archived from the original on 2021-02-14. பார்க்கப்பட்ட நாள் 2021-02-14.
  19. "Disha Ravi, Bengaluru's Greta, sent to 5-day Delhi police custody". https://www.newindianexpress.com/cities/bengaluru/2021/feb/15/disha-ravi-bengalurus-greta-sent-to-5-day-delhi-police-custody-2264126.html. 
  20. Corbett, Jessica (25 September 2020). "Masked, Socially Distanced, and Mad as Hell: Global Youth Take to the Streets for Over 3,200 #ClimateStrike Events" (in ஆங்கிலம்). Common Dreams. Archived from the original on 2020-11-16. பார்க்கப்பட்ட நாள் 2020-11-12.
  21. "Young people resume global climate strikes calling for urgent action". https://www.theguardian.com/environment/2020/sep/25/young-people-resume-global-climate-strikes-calling-urgent-action-greta-thunberg. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=திசா_ரவி&oldid=3283285" இலிருந்து மீள்விக்கப்பட்டது