திக்லிபூர்
Appearance
திக்லிபூர், இந்திய ஒன்றியப் பகுதியான அந்தமான் தீவுக்கூட்டத்தில் உள்ள வடக்கு அந்தமான் தீவில் உள்ள பெரிய நகரம் ஆகும். ஏரியல் விரிகுடாவிற்கு தெற்கில் , போர்ட் பிளேரில் இருந்து 290 கி.மீ தொலைவில், கல்போங் ஆற்றின் கரையில் கடல் மட்டத்திலிருந்து 43 மீட்டர் உயரத்தில் (141 அடி) இந்நகரம் அமைந்துள்ளது. திக்லிபூர் என்ற பெயரில் வட்டமும் உள்ளது. திக்லிபூர் வட்டத்தில் 42,877 மக்கள் வசிக்கின்றனர்.[1]
தொழில்
[தொகு]இங்கு நெல், தென்னை, பாக்கு, வாழை ஆகியவை முக்கிய பயிர்கள்.[1]
சான்றுகள்
[தொகு]- ↑ 1.0 1.1 Government of India (2011), Andaman and Nicobar Islands Statistical Hand-Book - North and Middle Andaman, 2007-08 To 2009-10