திக்பாய் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை
வார்ப்புரு:Infobox oil refinery திக்பாய் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை (Digboi Oil Refinery) என்பது பிரித்தானிய இந்தியாவின் ஆட்சியின் போது, 1901ஆம் ஆண்டில் அசாம் எண்ணெய் நிறுவனத்தால், அசாம் மாநிலத்தின் வடகிழக்கில் உள்ள தின்சுகியா மாவட்டத்தில் உள்ள திக்பாய் எனுமிடத்தில் நிறுவப்பட்ட முதல் பாறை எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை ஆகும்[1]. இதுவே ஆசியாவின் முதல் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை ஆகும். இந்திய விடுதலைக்குப் பின் இவ்வாலையை இந்தியன் ஆயில் கார்பரேசன் 1981ஆம் ஆண்டு முதல் ஏற்று நடத்துகிறது.
துவக்கத்தில் திக்பாய் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையிலிருந்து இந்தியன் ஆயில் கார்பரேசன். ஆண்டிற்கு 0.5 மில்லியன் டன் பாறை எண்ணெயை சுத்திகரித்து, பெட்ரேலியப் பொருட்களை உற்பத்தி செய்தது. 1996ஆம் ஆண்டில் ஆலையை நவீனப்படுத்திய பிறகு ஆண்டிற்கு 0.65 மில்லியன் டன் பாறை எண்ணெயை சுத்திகரிக்கும் திறன் பெற்றது. இவ்வாலை 1999ஆம் ஆண்டு முதல் ஆண்டிற்கு 1,70,,000 டன் கற்கரி உற்பத்தி செய்யத் துவங்கியது.2003 ஆம் ஆண்டில் இவ்வாலை நுண்படிக மெழுகு உற்பத்தி செய்யதற்கான ஆலையை நிறுவியது. 2023ஆம் ஆண்டில் 740 கோடி ரூபாய் செலவழித்து இவ்வாலையை நவீனப்படுத்திய பிறகு ஆண்டிற்கு 1 மில்லியன் டன் பெட்ரேலியப் பொருட்களை உற்பத்தி செய்கிறது.[2]
இவ்வாலை 2002ஆம் ஆண்டில் டீசலில் உள்ள கந்தகம் மற்றும் நைட்ரஜனை நீக்கும் ஹைட்ரோ சுத்திகரிப்பான் (UOP hydrotreater ) அலகை நிறுவியது.
இரண்டாம் உலகப் போரின் போது இவ்வாலை நாள் ஒன்றுக்கு 7,000 பீப்பாய் பெட்ரோலியப் பொருட்களை உற்பத்தி செய்தது. இரண்டாம் உலகப் போருக்குப் பின் இவ்வாலையின் உற்பத்தி கனிசமாக குறையத் தொடங்கியது. எனவே திக்பாய் பகுதியில் 1,000க்கும் மேற்பட்ட எண்ணெய் கிணறுகள் தோண்டப்பட்டது. தற்போது பெட்ரோலியப் பொருட்கலின் உற்பத்தி நாள் ஒன்றுக்கு 240 பீப்பாய்களாக குறைந்துள்ளது.[3]
வரலாறு
[தொகு]பிரித்தானியப் பொறியாளர்களால் திக்பாயில் 1889ஆம் ஆண்டில் பாறை எண்ணெய் கண்டுபிடிக்கப்பட்டது. 11 டிசம்பர் 1901 அன்று திக்பாயில் அசாம் எண்ணெய் நிறுவனம் பாறை எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையை நிறுவியது.[4]இதுவே ஆசியாவின் முதல் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை ஆகும். இந்திய விடுதலைக்குப் பின்னர் 1984ஆம் ஆண்டில் இவ்வாலையை இந்தியன் ஆயில் கார்பரேசன் ஏற்று நடத்துகிறது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "5 Things That Make Assam Unique". Outlook India. https://www.outlookindia.com/outlooktraveller/explore/story/67256/5-things-that-make-assam-unique.
- ↑ Digboi Refinery Expansion Project, Assam, India
- ↑ day
- ↑ "Here is India's oil story". The Financial Express. 3 May 2018. https://www.financialexpress.com/opinion/here-is-indias-oil-story/1153719/.