திக்கெல் பழுப்பு இருவாய்ச்சி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
திக்கெல் பழுப்பு இருவாச்சி
Tickells Brown Hornbill (Anorrhinus tickelli) with food in beak.jpg
தாய்லாந்து காயெங் கிர்சான் தேசிய பூங்காவில்
CITES Appendix II (CITES)[2]
உயிரியல் வகைப்பாடு
திணை: விலங்கினம்
தொகுதி: முதுகுநாணி
வகுப்பு: பறவை
வரிசை: கோராசீபோர்மெசு
குடும்பம்: இருவாய்ச்சி
பேரினம்: அனோரினசு
இனம்: அ. திகெல்லீ
இருசொற் பெயரீடு
அனோரினசு திகெல்லீ
பிளைத், 1855
வேறு பெயர்கள்

திலோலேமசு திகெல்லீ

திக்கெல் பழுப்பு இருவாய்ச்சி (Tickell's Brown hornbill) (அனோரினசு திகெல்லீ), துருப்பிடித்த கன்னமுள்ள இருவாய்ச்சி என்றும் அழைக்கப்படுகிறது. இது பர்மா மற்றும் அதை ஒட்டிய மேற்கு தாய்லாந்தில் உள்ள காடுகளில் காணப்படும் இருவாய்ச்சி ஆகும். ஆசிடனின் பழுப்பு இருவாய்ச்சி சில சமயங்களில் திக்கலின் பழுப்பு இருவாய்ச்சியின் துணையினமாகக் கருதப்படுகிறது.

விளக்கம்[தொகு]

திக்கெல் பழுப்பு இருவாய்ச்சி சுமார் 60–65 cm (24–26 in) நீளமுடைய நடுத்தர அளவிலான இருவாய்ச்சி ஆகும். மேலே அடர் பழுப்பு நிறமும் கீழே சிவப்பு-பழுப்பு நிறத்துடன், ஆண் பிரகாசமான கன்னங்கள் மற்றும் தொண்டையுடன் காணப்படும். இளம் வயது இருவாய்ச்சி வயது வந்த ஆண்களை ஒத்திருக்கின்றது.

வாழ்விடம்[தொகு]

திக்கெல் பழுப்பு இருவாய்ச்சி மலையடிவாரத்திலிருந்து 1500 மீ உயரம் வரை உள்ள பசுமையான மற்றும் இலையுதிர் மலைக் காடுகளில் வாழ்கிறது. இது கூட்டாக, குழுக்களாக இனப்பெருக்கம் செய்கிறது. மரம் வெட்டுதல் மற்றும் விவசாயத்திற்கான காடு அழிப்பினால் இதன் வாழ்விட இழப்பு இதன் வரம்பிற்குள் அதிகமாக இருப்பதாக அறியப்படுகிறது. பறவையியல் வல்லுநரான சாமுவேல் திக்கெல் என்பவரை இதனுடைய விலங்கியல் பெயர் நினைவுகூருகிறது.

மேற்கோள்கள்[தொகு]

  1. BirdLife International (2020). "Anorrhinus tickelli". IUCN Red List of Threatened Species 2020: e.T22731946A183158357. doi:10.2305/IUCN.UK.2020-3.RLTS.T22731946A183158357.en. https://www.iucnredlist.org/species/22731946/183158357. பார்த்த நாள்: 11 November 2021. 
  2. "Appendices | CITES". cites.org. 2022-01-14 அன்று பார்க்கப்பட்டது.