திக்கவரப்பு பட்டாபிராம ரெட்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
திக்கவரப்பு பட்டாபிராம ரெட்டி
பிறப்புபெப்ரவரி 19, 1919(1919-02-19)
நெல்லூர், ஆந்திரப் பிரதேசம், இந்தியா
இறப்பு6 மே 2006(2006-05-06) (அகவை 87)
தேசியம் இந்தியா
படித்த கல்வி நிறுவனங்கள்கொல்கத்தா பல்கலைக்கழகம்
பணிஎழுத்தாளர், தயாரிப்பாளர், இயக்குனர், சமூக ஆர்வலர்
அறியப்படுவதுசம்ஸ்காரா
சண்டமாருதா
வாழ்க்கைத்
துணை
சினேகலதா ரெட்டி
உறவினர்கள்இரமண ரெட்டி
டி. சுப்பராமி ரெட்டி

திக்கவரப்பு பட்டாபிராம ரெட்டி (Tikkavarapu Pattabhirama Reddy) (19 பிப்ரவரி 1919 - 6 மே 2006) இந்தியத் திரைப்பட திரைக்கதை ஆசிரியரும், தயாரிப்பாளரும், இயக்குனரும், சமூக ஆர்வலரும், கவிஞரும் ஆவார். இவர் முக்கியமாக தெலுங்குத் திரைப்படத்துறையிலும், கன்னடத் திரைப்படத்துறையிலும் பணியாற்றினார். [1] [2]

ரெட்டி தனது படைப்புகளுக்காக நான்கு தேசிய திரைப்பட விருதுகளைப் பெற்றுள்ளார். [3] 1972ஆம் ஆண்டில் உ. இரா. அனந்தமூர்த்தி எழுதிய 'சம்ஸ்காரா' என்ற புதினத்தை அடிப்படியாகக் கொண்டு சம்ஸ்காரா என்ற கன்னடப் படத்தைத் தயாரித்து இயக்கியுள்ளார், இது லோகார்னோ சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த திரைப்படம் மற்றும் வெண்கல சிறுத்தைக்கான சிறந்த திரைப்படத்திற்கான தேசிய திரைப்பட விருது ஆகியவற்றைப் பெற்றது. [4] மக்கள் குடிசார் உரிமைக் கழகத்தின் நிறுவனர் உறுப்பினராகவும், நெருக்கடி நிலை எதிர்ப்பு இயக்கம், மனித உரிமை இயக்கம் மற்றும் குழந்தை தொழிலாளர் இயக்கங்கள் ஆகியவற்றில் ரெட்டி தீவிரமாக பங்கேற்றுள்ளார். 1977ஆம் ஆண்டில், சண்டமாருதா என்ற படத்தை கன்னடம் மற்றும் ஆங்கிலம் ஆகிய இருமொழிகளிலும் தயாரித்து இயக்கியுள்ளார். இந்த படம் நெருக்கடி நிலைக் காலத்தில் தடைசெய்யப்பட்டது, பின்னர் வெளியிடப்பட்டு விமர்சன ரீதியான பாராட்டைப் பெற்றது. [5] [6]

தனிப்பட்ட வாழ்க்கை[தொகு]

இவர் ஆந்திராவின் நெல்லூரில் பிறந்தார். சாந்திநிகேதன், கொல்கத்தா பல்கலைக்கழகம், கொலம்பியா பல்கலைக்கழகம் போன்றவற்றில் படித்தார். இவர் சினேகலதா என்பவரை மணந்தார். மேலும் "வேலை செய்யும் குழந்தைகளுக்கான கவலை" என்ற அமைப்பை நிறுவினார். [7] 2003ஆம் ஆண்டில், அரவிந்தரின் சாவித்திரி என்ற நூலை அடிப்படையாகக் கொண்ட இன் தி ஹவர் ஆஃப் காட் என்ற திரைப்படத்தை இவர் இயக்கியுள்ளார். இப்படத்தை தனது மனைவி சினேகலதா ரெட்டிக்கு அர்ப்பணித்தார். [8] பட்டாபிராம ரெட்டி 6 மே 2006 அன்று தனது 86 வயதில் இறந்தார். [9]

மேற்கோள்கள்[தொகு]

  1. Khajane, Muralidhara (29 June 2015). "Celluloid's two-pronged response to Emergency".
  2. "Directorate of Film Festival". மூல முகவரியிலிருந்து 6 October 2014 அன்று பரணிடப்பட்டது.
  3. "A pioneer passes away" (12 May 2006).
  4. "Tikkavarapu Pattabhirama Reddy – Poet, Film maker of international fame from Nellore" (18 December 2011). மூல முகவரியிலிருந்து 6 October 2014 அன்று பரணிடப்பட்டது.
  5. "The Hindu : A forgotten prophet".
  6. Khajane, Muralidhara (29 June 2015). "Celluloid's two-pronged response to Emergency".
  7. Khajane, Muralidhara (29 June 2015). "Celluloid's two-pronged response to Emergency".
  8. Nagesh, Rama Reddy wrote the preface for experimental films in Kannada - Photo: Courtesy D. C. (17 February 2005). "Fruits of labour" 03.
  9. "He set new directions". The Tribune. 14 May 2006. http://www.tribuneindia.com/2006/20060514/society.htm#3.