திகாரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

திகாரி (Thihariya, சிங்களம்: තිහාරිය, திஹாரிய) என்பது இலங்கையின் கம்பகா மாவட்டத்தில் அமைந்திருக்கின்ற அழகியதொரு ஊராகும். கொழும்பு, கண்டி ஆகிய பெரு நகரங்களை இணைக்கும் ஏ1 சாலையை அண்டி அமைந்துள்ள இவ்வூர் மாவட்டத் தலைநகரான கம்பகாவில் இருந்து 9 கிலோ மீட்டர் தொலைவிலும், இலங்கையின் தலைநகரமான கொழும்பில் இருந்து 36 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது. முசுலிம் மக்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட இந்த ஊரில் ஏறத்தாழ 15,000 முசுலிம் மக்கள் வாழ்கின்றனர்.

கம்பகா மாவட்டத்தில் உள்ள மிகப் பழைய பள்ளிவாயில்களுள் ஒன்றான அல்-மஸ்ஜிதுல் ரவ்லா ஜும்மா பெரிய பள்ளிவாயில் உள்ளிட்ட பல பள்ளிவாயில்கள் இவ்வூரில் அமைந்துள்ளன. இது நகரத்து சூழலினதும் கிராமத்து சூழலினதும் பண்புகளைப் பெற்றிருக்கின்றது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=திகாரி&oldid=3046730" இலிருந்து மீள்விக்கப்பட்டது