திகாயிட் உம்ராவ் சிங்
திகாயிட் உம்ராவ் சிங் Tikait Umrao Singh | |
---|---|
பிறப்பு | ஓர்மஞ்சி தொகுதியின் கட்டங்கா கிராமம், ராஞ்சி மாவட்டம், பீகார் தற்போது சார்க்கண்ட் |
இறப்பு | 8 சனவரி, 1858 ராம்கார் |
பணி | அரசர் |
அறியப்படுவது | சிப்பாய்க் கிளர்ச்சி, 1857 |
திகாயிட் உம்ராவ் சிங் (Tikait Umrao Singh) 1857 ஆம் ஆண்டு நடைபெற்ற இந்திய விடுதலைப் போரில் பங்கேற்ற சுதந்திரப் போராட்ட வீர்ராவார். அரசரும் சுதந்திரப்போராட்ட வீர்ருமான திகாயிட் உம்ராவ் சிங் சார்க்கண்டு மாநிலத்திலுள்ள ராஞ்சி மாவட்டத்தில் இருந்த பந்த்கவா என்ற சிற்றரசுக்கு ராசாவாக இருந்தார். 1857 ஆம் ஆண்டு இந்திய விடுதலைப்போரில் கிழக்கிந்திய கம்பெனி படை ராஞ்சியை ஆக்கிரமிப்பதைத் தடுப்பதில் இவரும் இவரது சகோதரர் காசி சிங்கும் முக்கிய பங்கு வகித்தனர்.
சார்க்கண்டில் உள்ள ஓர்மஞ்சி தொகுதியின் கட்டங்கா கிராமத்தில் திகாயிட் உம்ராவ் சிங் பிறந்தார். தன்னிடம் திவானாக பணிபுரிந்த சேக் பிகாரியுடன் இணைந்து ராஞ்சி ராம்கார் பாதையிலுள்ள சுட்டுபாலு பகுதியில் மரங்களை வெட்டித்தள்ளி கிழக்கிந்திய கம்பெனி படை ராஞ்சியை ஆக்கிரமிப்பதைத் தடுத்தார். கிழக்கிந்தியப் நிறுவனப் படையுடன் இவர்களிருவரும் சண்டையிட்டனர். பின்னர் ஆங்கிலேயர்கள் இவரை சேக் பிகாரியுடன் சேர்த்து 1858 ஆம் ஆண்டு ராம்கர் சுட்டுபாலுவில் ஆலமரத்தில் தூக்கிலிட்டனர். [1][2][3][4]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Model makeover for martyr hamlets". telegraphindia.com.
- ↑ "JPCC remembers freedom fighters Tikait Umrao Singh, Sheikh Bhikari". news.webindia123.com. Archived from the original on 2019-05-04. பார்க்கப்பட்ட நாள் 2020-11-18.
- ↑ "स्वतंत्रता सेनानी शहीद टिकैत उमराव सिंह का शहादत दिवस मनाया गया". bhaskar.com.
- ↑ "टिकैत उमराव सिंह". bharatdiscovery.org.