உள்ளடக்கத்துக்குச் செல்

திகம்பத்தான வாகன குண்டுதாக்குதல் 2006

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

திகம்பத்தான வாகன குண்டுதாக்குதல் என்பது அக்டோபர் 16,2006ல் தம்புள்ள மற்றும் ஹபரண நகரிற்கு அண்மித்த திகம்பத்தான எனும் இடத்தில் இலங்கை இராணுவ வாகனத் தொடரணியின் மீது வாகனத்தில் அதிசக்தி வாய்ந்த குண்டுகளை பொருத்திய விடுதலைப் புலிகளின் தற்கொலை குண்டுதாரி ஒருவரினால் நடத்தப்பட்ட குண்டுத்தாக்குதலாகும்.தொடரணியில் உள்ள 15 வாகனங்களில் விடுமுறையில் வீடு திரும்பும் இராணுவத்தினரும்,விடுமுறை முடிந்து கடமைக்கு திரும்பும் இராணுவத்தினருமாக 200 ற்கு மேற்பட்டவர்க (சில தகவலின்படி 340) சம்பவ இடத்தினில் காணப்பட்டனர்.குண்டுதாக்குதலின் விளைவாக 8 சிவிலியன் ஊழியர்கள் உட்பட 92ற்கும் 103 இடையான இராணுவத்தினர் கொல்லப்பட்டதுடன் 150 ற்கும் அதிகமானவர்கள் காயமடைந்தனர்[1].இவர்களில் மிக அதிகமானவர்கள் திருகோணமலை கடற்படைத்தளதில் பணிபுரியும் கடற்படையினராவார்கள்.இவர்கள் தவிர பாதசாரிகளும்,வியாபாரிகளும் காயமடைந்தனர்.133 இலங்கை இராணுவத்தினர் கொல்லப்பட்ட காரணமான யாழ் முகமாலை முறியடிப்புச் சமர் அடுத்து ஒரிரு தினங்களில் இடம்பெற்ற இத்தாக்குதல் இலங்கை இராணுவ படையினருக்கு மேலும் ஒர் பேரிழப்பினை தந்தது.இத்தாக்குதலுக்கு பதிலடியாக புலிகளின் கட்டுப்பாட்டு பகுதிகளில் இலங்கை விமான படையினரால் விமான குண்டு வீச்சுத் தாக்குதல் நிகழ்தப்பட்டது[2].புலிகளின் தகவலின் படி 2 பொது மக்கள் கொல்லப்பட்டும் 15 பேர் காயமடைந்துள்ளனர்.புலிகளின் இராணுவப் பேச்சாளர் இளந்திரையன் கருத்துத் தெரிவிக்கையில்போர்க்களங்களுக்கு அப்பால் சிறிலங்கா இராணுவம் இலக்கு வைக்கப்படுவதற்கான வாய்ப்புக்களை நாம் மறுப்பதற்கில்லை[3] எனக் கூறினார்.

இவற்றையும் பார்க்க

[தொகு]

உசாவல்

[தொகு]
  1. "Suicide bombing kills more than 100 Sri Lankan sailors". Times Online. 16 October 2006. http://www.timesonline.co.uk/article/0,,25689-2406302,00.html. 
  2. "Fighter jets pound suspected rebel camp after suicide bombing kills 95 sailors". USA Today. 17 October 2006. http://www.usatoday.com/news/world/2006-10-17-sri-lanka_x.htm?csp=34. 
  3. [http://www.timesonline.co.uk/article/0,,25689-2406302,00.html "போர்க்களங்களுக்கு அப்பால் சிறிலங்கா இராணுவம் இலக்கு வைக்கப்படுவதற்கான வாய்ப்புக்களை நாம் மறுப்பதற் கில்லை: இ.இளந்திரையன்"]. புதினம். அக்டோபர் 14, 2006. http://www.timesonline.co.uk/article/0,,25689-2406302,00.html. 

வெளி இணைப்புக்கள்

[தொகு]