தா. ராஜம்பாள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

தா. ராஜம்பாள் (T. Rajambal) என்பவர் இந்திய அரசியல்வாதியும் முன்னாள் தமிழக சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் சேலம் மாவட்டம் தலைவாசல் பகுதியினைச் சார்ந்தவர். ஆத்தூர் உயர்நிலைப் பள்ளியில் பள்ளிக் கல்வியினையும் திருச்சிராப்பள்ளி திருச்சிலுவை கல்லூரியில் கல்லூரிக் கல்வியினையும் பயின்றுள்ளார். ராஜாம்பாள் 1980ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டப் பேரவைத் தேர்தலில் தலைவாசல் சட்டமன்றத் தொகுதியில் இந்திய தேசிய காங்கிரசு (இந்திரா) வேட்பாளராகவும் 1984ஆம் ஆண்டுத் தேர்தலில் இந்திய தேசிய காங்கிரசு வேட்பாளராகவும் போட்டியிட்டுத் தமிழ்நாடு சட்டப் பேரவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1]

மேற்கோள்கள் [தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=தா._ராஜம்பாள்&oldid=3478997" இருந்து மீள்விக்கப்பட்டது