தா. த. இராமகிருஷ்ணன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தா. த. இராமகிருஷ்ணன்
டி. டி. ராமகிருஷ்ணன்
டி. டி. ராமகிருஷ்ணன்
இயற்பெயர்
ടി. ഡി. രാമകൃഷ്ണൻ
பிறப்பு1961 (அகவை 61–62)
எய்யால், திருச்சூர், கேரளம், இந்தியா
தொழில்எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர்,
மொழிமலையாளம்
கல்வி நிலையம்ஆலுவா யூனியன் கிறிஸ்தக் கல்லூரி
குறிப்பிடத்தக்க படைப்புகள்பிரான்சிஸ் இட்டிக்கோரா , சுகந்தி என்ன ஆண்டாள் தேவநாயகி

தாத்தமங்கலம் தாமோதரன் இராமகிருஷ்ணன் (பிறப்பு: 1961) (டி. டி. இராமகிருஷ்ணன்) என்பவர் இந்தியாவைப் பூர்விகமாகக் கொண்ட மலையாள எழுத்தாளரும், மொழிபெயர்ப்பாளரும் ஆவார். பிரான்சிஸ் இட்டிக்கோரா, சுகந்தி என்ன ஆண்டாள் தேவநாயகி ஆகிய நூல்கள் குறிப்பிடத்தக்கவை. இவர் கேரள மாநில சாகித்திய அகாதமியின் விருதினையும், வயலார் விருதினையும் பெற்றவர்.

இளம்பருவம்[தொகு]

இவர் திருச்சூரை அடுத்த எய்யால் என்ற ஊரில் 1961 ஆம் ஆண்டில் பிறந்தார். இவர் பெற்றோர் தாமோதரன் இளையது, ஸ்ரீதேவி அந்தர்ஜனம் ஆகியோர். [1] இவர் குன்னங்குளம் மேல்நிலைப்பள்ளியிலும் எருமப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியிலும் பள்ளிப்படிப்பை முடித்தார்.[1] பின்னர், ஆலவாயில் உள்ள யூனியன் கிறிஸ்தவக் கல்லூரியில் பட்டப்படிப்பை முடித்தார்.[2] பின்னர், 1981ஆம் ஆண்டில் இந்திய ரயில்வேயில் சேர்ந்து, சேலத்தில் பயணச்சீட்டு பரிசோதகராக பணியாற்றினார்.[3] கோழிக்கோட்டிலும், பின்னர் சென்னையிலும், அதன் பின்னர் பாலக்காட்டிலும் பணியாற்றினார்.[3] 1995 ஆண்டு முதல், பாலக்காடு ரயில்வே கோட்டத்தின் உயரதிகாரி ஆனார். பின்னர், தென்னக இரயில்வேயின் உயரதிகாரியாகவும் பணியாற்றி ஓய்வு பெற்றார். [3] ஆனந்தவல்லியை மணந்து, விஷ்ணு, சூர்யா ஆகிய இரு மக்களைப் பெற்றார்[1]

இலக்கியப் பயணம்[தொகு]

இவர் ஆல்பா என்ற புனைகதையை எழுதினார். இக்கதை ஆல்பா எனப்படும் கற்பனைத் தீவில் நடந்ததாக விவரிக்கப்படும். இலங்கையை ஒட்டியதாகக் கூறப்படும் இக்கற்பனைத் தீவில் மனித மூளையைப் பற்றிய ஆராய்ச்சியே கதையின் கரு.[4] இவர் இயற்றிய பிரான்சிஸ் இட்டிக்கோரா என்ற கதை உலகப் புகழ் பெற்ற பல வரலாற்று மாந்தர்களை உள்ளடக்கியது. கேரளத்தில் இருந்து உலகத்தை அறியப் புறப்படும் வணிகரை மையப்படுத்தியது இக்கதை. இவர் எழுதிய 'சுகந்தி என்ன ஆண்டாள் தெய்வநாயகி' என்ற புதினம், இலங்கையின் விடுதலைப் புலிகளால் கொல்லப்பட்ட மனித உரிமை ஆர்வலரான ரஜினி திரனகமா என்பவரைப் பற்றியது.[5]

இவர் தமிழ் நூல்களை மலையாளத்தில் மொழிபெயர்த்தார். 2007ஆம் ஆண்டில் சிறந்த மொழிபெயர்ப்பாளருக்கான ஈ.கே. திவாகரன் போற்றி விருதைப் பெற்றார்.[1] பின்னர், நல்லி வழங்கிய திசை எட்டும்' இலக்கிய விருதினைப் பெற்றார்.

ஆக்கங்கல்[தொகு]

 • ஆல்பா (புதினம்)
 • பிரான்சிஸ் இட்டிக்கோரா (புதினம்)
 • சுகந்தி என்ன ஆண்டாள் தெய்வ நாயகி (புதினம்)
 • ம்..ம்.. (சோபாசக்தி தமிழில் எழுதிய 'ம்..ம்..' என்ற புதினத்தின் மொழிபெயர்ப்பு)
 • தப்பு தாளங்கள் (சாரு நிவேதிதா தமிழில் எழுதிய தப்பு தாளங்கள் என்ற நூலின் மொழிபெயர்ப்பு)
 • மாமா ஆப்பிரிக்கா (புதினம்)

விருதுகள்[தொகு]

 • 2016: சிறந்த புதினத்துக்கான கேரள அரசின் விருது – சுகந்தி என்ன ஆண்டாள் தெய்வநாயகி என்ற புதினத்துக்காக[6]
 • 2016: மலையாற்றூர் விருது - சுகந்தி என்ன ஆண்டாள் தெய்வநாயகி என்ற புதினத்துக்காக [7]
 • 2017: வயலார் விருது – சுகந்தி என்ன ஆண்டாள் தெய்வநாயகி என்ற புதினத்துக்காக[8]

சான்றுகள்[தொகு]

 1. 1.0 1.1 1.2 1.3 V. Harigovindan (21 February 2016). "ഇനി എഴുത്തിനായി മാത്രം" பரணிடப்பட்டது 2016-02-22 at the வந்தவழி இயந்திரம். மாத்ருபூமி. Retrieved 20 April 2018.
 2. "Founders Day and Alumni Meet 2017". Union Christian College, Aluva|UC College, Aluva. Retrieved 20 April 2018.
 3. 3.0 3.1 3.2 Writer T D Ramakrishnan retires from railway. MediaOne TV (News). YouTube. 31 January 2016.
 4. "മനുഷ്യത്വത്തെ പുനർനിർവ്വചിക്കുന്ന ആൽഫ". Malayala Manorama. 27 September 2016. Retrieved 18 April 2018.
 5. Meena T. Pillai (9 July 2015). "Mixing myth and memory". The Hindu (Trivandrum). http://www.thehindu.com/features/friday-review/mixing-myth-and-memory/article7398890.ece. பார்த்த நாள்: 18 April 2018. 
 6. Kerala Sahitya Akademi(21 February 2018). "2016 Kerala Sahitya Akademi Awards". செய்திக் குறிப்பு.
 7. "Malayatoor award for T.D. Ramakrishnan". The Hindu (Trivandrum). 21 July 2016. http://www.thehindu.com/todays-paper/tp-national/Malayatoor-award-for-T.D.-Ramakrishnan/article14499900.ece. பார்த்த நாள்: 18 April 2018. 
 8. "T.D. Ramakrishnan bags Vayalar award". The Hindu. 8 October 2017. http://www.thehindu.com/news/national/kerala/kerala/article19823851.ece. பார்த்த நாள்: 18 April 2018. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=தா._த._இராமகிருஷ்ணன்&oldid=3585176" இருந்து மீள்விக்கப்பட்டது