உள்ளடக்கத்துக்குச் செல்

தா. தெ. இலபாங்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தா. தெ. இலபாங்
5வது [[மேகாலயா முதலமைச்சர்]]
பதவியில்
13 மே 2009 – 19 ஏப்ரல் 2010
ஆளுநர்ரஞ்சித் சேகர் மூஷாஹாரி
முன்னையவர்தான்குபர் ராய்
பின்னவர்முகுல் சங்மா
பதவியில்
10 மார்ச் 2007 – 19 மார்ச் 2008
ஆளுநர்எம். எம். ஜேக்கப்
பன்வாரிலால் ஜோஷி
சிவிந்தர் சிங் சித்து
முன்னையவர்ஜே. டி. ரிம்பாய்
பின்னவர்தான்குபர் ராய்
பதவியில்
4 மார்ச் 2003 – 15 சூன் 2006
ஆளுநர்எம். எம். ஜேக்கப்
முன்னையவர்பிளிண்டர் ஆண்டர்சன் கோங்லாம்
பின்னவர்ஜே. டி. ரிம்பாய்
பதவியில்
5 பெப்ரவரி 1992 – 19 பெப்ரவரி 1993
ஆளுநர்மதுகர் திகே
முன்னையவர்பி. பி. லிங்டோ
பின்னவர்எஸ். சி. மாராக்
மேகாலயாவின் துணை முதலமைச்சர்
பதவியில்
2001[1][2][3]–2003
பதவியில்
1993-1998
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு(1934-04-10)10 ஏப்ரல் 1934
இறப்பு12 செப்டம்பர் 2025(2025-09-12) (அகவை 91)
ஷில்லாங், மேகாலயா, இந்தியா
அரசியல் கட்சிதேசிய மக்கள் கட்சி (2018 முதல்)
பிற அரசியல்
தொடர்புகள்
இந்திய தேசிய காங்கிரசு (2018 வரை)
துணைவர்அமேதிஸ்ட் லிண்டா ஜோமஸ் பிளா (ம. 1958)

தான்வா தெத்வெல்சன் லபாங் (Donwa Dethwelson Lapang, 10 ஏப்ரல் 1934 – 12 செப்டம்பர் 2025) என்பவர் மேகாலயாவைச் சேர்ந்த ஓர் இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் மேகாலயாவின் முதலமைச்சராகப் பணியாற்றியுள்ளார்.

வாழ்க்கையும் பணியும்

[தொகு]

இலபாங் 1934 ஏப்ரல் 10 அன்று பிறந்தார். இவர் தனது வாழ்க்கையை ஒரு சாலைத் தொழிலாளியாகத் தொடங்கி, படிப்படியாக உயர்ந்து பள்ளிகளின் துணை ஆய்வாளரானார். இவரது தந்தையின் பெயர் தான்வா வார் ஆகும். 1958-இல், இவர் அமேதிசிட் லிண்டா ஜோமசு பிளா என்பவரை மணந்தார்.[4]

|1972 ஆம் ஆண்டில் நடைபெற்ற மேகாலய சட்டமன்றத் தேர்தலில், இவர் நோங்போ சட்டமன்றத் தொகுதியிலிருந்து சுயேச்சை வேட்பாளராகப் போட்டியிட்டு சட்டமன்ற உறுப்பினரானார். 1992-இல், மேகாலயாவின் முதலமைச்சராகப் பொறுப்பேற்று, பெப்ரவரி 1993 வரை பணியாற்றினார். 2003 மார்ச் 4 அன்று, இவர் மீண்டும் முதலமைச்சராகப் பதவியேற்றார். கூட்டணி ஆட்சியில் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் காரணமாக 2006 சூன் 15 அன்று இவர் தனது பதவியை இராஜினாமா செய்தார்.[5]

இவர் 2007 மார்ச்சில் மீண்டும் முதலமைச்சராகப் பொறுப்பேற்றார்.[6] 2008 மார்ச் மாநில சட்டமன்றத் தேர்தலில் இவரது கட்சியான இந்திய தேசிய காங்கிரசு பெரும்பான்மையான இடங்களை வென்றது. இலபாங் 2008 மார்ச் 10 அன்று முதலமைச்சராகப் பதவியேற்றார். ஆனால் 60 இடங்களைக் கொண்ட சட்டமன்றத்தில் 28 உறுப்பினர்களின் ஆதரவு மட்டுமே இருந்ததால், மார்ச் 19 அன்று தனது பதவியை இராஜினாமா செய்தார்.[7]

மாநிலத்தில் இரண்டு மாதங்கள் குடியரசுத் தலைவர் ஆட்சி அமலில் இருந்த பிறகு, இலபாங் 2009 மே 13 அன்று நான்காவது முறையாக முதலமைச்சரானார். பின்னர் 2010 ஏப்ரல் 19 அன்று இராஜினாமா செய்தார்.[8]

இறப்பு

[தொகு]

இலபாங் 2025 செப்டம்பர் 12 அன்று சில்லாங்கில் தனது 91ஆவது வயதில் காலமானார்.[9][10]

மேற்கோள்கள்

[தொகு]
  1. ↑ https://m.rediff.com/news/2001/dec/08megh1.htm#:~:text=A%2037%2Dmember%20two%2Dtier,have%20seven%20ministers%20of%20state.
  2. ↑ https://www.telegraphindia.com/north-east/lotsing-sangma-passes-away/cid/777917
  3. ↑ https://www.hindustantimes.com/india/dd-lapang-former-cm-and-three-time-deputy-cm/story-eEgMh4HS42qm5wS4AOxzbJ.html#:~:text=Meghalaya%27s%20Deputy%20Chief%20Minister%20and%20Congress%20leader,least%20three%20governments.%20%7C%20Latest%20News%20India.
  4. ↑ Lahkar, Digjyoti. "Former Meghalaya CM D.D. Lapang Passes Away at 91" (in en). The Free Press Journal. https://www.freepressjournal.in/india/former-meghalaya-cm-dd-lapang-passes-away-at-91.
  5. ↑ "Sonia 'forces' Lapang exit - Rymbai is new Meghalaya CM". www.telegraphindia.com (in ஆங்கிலம்). 16 June 2006. Retrieved 4 March 2020.
  6. ↑ "Apang loses power tussle". www.telegraphindia.com (in ஆங்கிலம்). 9 April 2007. Retrieved 4 March 2020.
  7. ↑ வார்ப்புரு:Deprecated archive, Press Trust of India (Hindustan Times), 19 March 2008.
  8. ↑ Singh, Bikash (15 September 2018). "Ex-Meghalaya Chief Minister Lapang quits Congress". The Economic Times. https://economictimes.indiatimes.com/news/politics-and-nation/ex-meghalaya-chief-minister-lapang-quits-congress/articleshow/65816815.cms?from=mdr.
  9. ↑ "Former Meghalaya Chief Minister D.D. Lapang passes away" (in en-IN). தி இந்து. 13 September 2025. https://www.thehindu.com/news/national/meghalaya/former-meghalaya-chief-minister-dd-lapang-passes-away/article70044711.ece.
  10. ↑ Laitphlang, David (13 September 2025). "Former Meghalaya chief minister D.D. Lapang passes away at 91" (in en). ஹிந்துஸ்தான் டைம்ஸ். https://www.hindustantimes.com/cities/others/former-meghalaya-chief-minister-d-d-lapang-passes-away-at-91-101757727368677.html.
"https://ta.wikipedia.org/w/index.php?title=தா._தெ._இலபாங்&oldid=4638516" இலிருந்து மீள்விக்கப்பட்டது